புதன், 14 ஏப்ரல், 2021

திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசை

*உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?_*

_அப்படியென்றால் நீங்கள் அவசியம் *திருசெந்தூர் ஆலயத்தில்*  தினமும் அதி காலையில் நடைபெறும் *கொடிமர பூசையில்* கலந்து கொள்ள வேண்டும்._

_அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?_

_திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும், மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் *ஆலயத்தின்  கொடி மரத்துக்குத்தான் பூஜை* நடைபெறும் ._

_இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும்._

_இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது._

_இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?_

*_திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!_*

_முன்னொரு காலத்தில் *திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி* கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை._ 

_காரணம் அங்கு *கொடிமரம்* இல்லை. ஆகவே *திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க* வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர்._

_உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு *காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை)* கொடி மரம் வெட்ட கிளம்பினர்._ 

_திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர்._

_அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர்._

_அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்._

_அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது._

_பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார்._ 

_அம்மன் ‘மகனே, நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள்._

_அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லி விடாதே.  இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்._

_உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்._

_இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும்._

_அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார்._

_ஆயினும் கலங்காமல் *முருகன்* மீது பாரத்தை போட்டு விட்டு *களக்காடு* அருகே உள்ள *ஏர்வாடிக்கு* வந்தார்._

_அங்கு *சின்னதம்பி மரக்காயர்* என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் *முருகப் பெருமானுக்கு கொடிமரம்* வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்._

_சின்னதம்பி மரக்காயரின் மனைவி *பாத்திமாபீவி* அவரை தடுத்தார்._

_"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது._ 

_எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள்._ 

_ஆனால் *சின்னதம்பி மரக்காயர்* கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், *"நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்”* என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை._

*_விதி யாரை விட்டது._*

_அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு மலைக்கு சென்றார்._

_அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள்._ 

_அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது._ 

_ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை._

_அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை._

_எனவே *காக்காச்சி மலை* என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான *பொதிகை மலை* உச்சிக்கு சென்றனர்._ 

_அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரம் ஒன்று இருந்தது._

_''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி._

_அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர்._ 

_அப்போது அந்த *மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள்* இருந்தது தெரிய வந்தது._

_அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்._ 

_முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்._

_மற்றவர்களை கோடாரி கொண்டு, வெட்ட சொன்னார்._ 

_கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. உடனே அந்த கோடாரி, மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர்._

_இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார். "ஐயோ" நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது, அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார்._

_அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை._ 

_இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார்._ 

_அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார். இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார்._ 

_சொரிமுத்து அய்யனார் 21 மாட தேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார்._

_‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார்._ 

_அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்._

_சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி, அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும், அவர்களை அந்த கொடி மரத்திலேயே தொடந்து வாசம் செய்து கொள்ளும்படியும்  உத்தரவிட்டார்._

_அதன்படி *சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும்* அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள்._

_பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள்._

_அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது._

_சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்._

_இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கட கரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள்._ 

_மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கட கரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்._

_மேற்கண்ட தகவலை *"கொடி மரக்காவியம்"* என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து *தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம்* அருகில் உள்ள *கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம்* கூறியுள்ளார்._

_இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா?_

_திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது._ 

_அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது._

_ஆனால் சுடலை மாடன், சங்கட காரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி,  21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்._

_ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது._

_எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது._

_சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலை மாடன், சங்கட காரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான  நடை திறக்கபட்டு *நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை* எல்லாம் நடைபெற்று வருகிறது.._

_தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும் போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல, அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும்  நமஸ்காரம் செய்வார்கள்._

_இதற்கான அனுமதி இலவசம்._ 

_அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் *சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட  21 மாட தேவதைகளின் ஆசிகள்* கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!_

_இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்._

_நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!_

            *ஓம் வெற்றி வேல் முருகனுகு அரோகரா*

இந்திய சுதந்திரதினத்தல் ஒலித்தது "கோளறு பதிகமே " மறைக்கப்பட்ட வரலாறு.

இந்திய சுதந்திரதினத்தல் ஒலித்தது "கோளறு பதிகமே " மறைக்கப்பட்ட வரலாறு.  💥

***************🌸**************

1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். 

மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது.

 எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது  (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

 உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்" என்று கூற,

 உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார். 

நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார். இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்). ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.! 

அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி, "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே".  இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்!

அந்த நிகழ்வைத் தான்  இந்திய மக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றாா்கள்!

இந்த நிகழ்வு தமிழுக்கும் , தமிழர்களுக்கும் எவ்வளவு பெருமை இந்த வரலாற்றை மீண்டும் மீள்பதிவு செய்தல் வேண்டும்.! 

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக இன்றும் உள்ளது.!

புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும்,நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும்  காணுங்கள் நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்யுங்கள்.!

          - சித்தர்களின் குரல் shiva shangar

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

முளைதானிய உணவு :

முளைதானிய உணவு :

                         ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவே இனிய உணவு இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. 

                  பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

                 இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

            முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை மற்றும் அடை போன்ற உணவுகளையும் தயாரித்து சாப்பிடலாம். இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

         முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

          முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

          முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர் களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும். 

          முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 

         முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். 

         முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் மூட்டுவலி தீரும் 

       எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

சனி, 3 ஏப்ரல், 2021

தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை

தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை 

அலர்ட் பதிவு 

சில மருத்துவ அறிவுரைகள் 

Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிகக் கொடூரமாக வீசி வருகிறது. 
கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. 
இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். அதிலும் இந்த ஒரு வாரம் மிகவும் அதிக உஷ்ணத்தை சந்திக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருக்கிறது.

இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 

வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை 
நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன. 

உடல் சூடாவதை தடுப்பது எப்படி? 

1.கட்டாயம் நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை வெளியில் இருப்பதையும் பயணங்களையும் தவிர்த்து விட வேண்டும்

2.  தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். 
இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.

3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். 
ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. 
பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. 
வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது. 

4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 

5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே  செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம். 

அடுத்த நடவடிக்கை. 
இதை மீறியும்   சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.

நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும்.
வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் 

காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்

ஒன்று - conduction 
இரண்டாவது - convection 
மூன்றாவது - radiation 

இதில் முதலாவதாக இருக்கும் conductionக்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு  பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும். 

இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்

இரண்டாவது வகை
convection 
அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். 
இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். 
பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. 

நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும். 

நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். 
அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். 

கார் உபயோகிப்பவர்கள்
 கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். 
ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும். 

மூன்றாவது Radiation 
இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை . மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும். 
நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது. 

இந்த முறையில் சூடாகும் நம் 
உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ? 

அதற்கு காரணம் "Evapouration" எனும் தற்காப்பு முறை 

அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும்.(sweating)  மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்(expiration) 

இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை 
Dehydration - நீர் சத்து குறைதல்..

இதை எப்படி அறியலாம்? 

- நாக்கு வரண்டு போதல்
- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்
- தசைப்பிடிப்பு 
- தலை சுற்றல்
- கை கால் தளர்வு 

போன்ற அறிகுறிகளால் அறியலாம்

இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.

நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு  கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும். 

உதாரணம் 
60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 

60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். 

இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். 

இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர்  அளவு குறைந்தபட்ச தேவையாக  மாறும்.

உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால் 
இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால் 

20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். 
அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும் 

வளர்ந்த ஆணும் பெண்ணும் 
பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. 

இந்த தண்ணீரை 
இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். 

செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது. 

குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம்  முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். 

ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த
மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.

மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.

சரி..இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1. வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும். 

2. அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும். 

3.அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும். 

4. காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும். 

5. சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.

6. தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 

7.கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்

8. சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும். 

9.     911 / 108 க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் 

இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி. 

ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர்
பின்வருமாறு 

1. குழந்தைகள் 
2. முதியோர்கள்
3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள் 
4.கர்ப்பிணிகள்
5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள் 
6. அதிகமாக பயணம் செய்பவர்கள் 

முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம் 

நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்

நன்றி 

Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

திங்கள், 29 மார்ச், 2021

புனுகு_என்றால்_என்ன?

புனுகு_என்றால்_என்ன?
*************************

( புனுகுப் பூனையிலிருந்து பெறப்படும் புனுகின்  நன்மைகள் பற்றி தெரியுமா? 

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் சித்த பெருமக்கள்..

புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.

ஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர். அரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும்.
தற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன, புனுகுப் பூனைகள். சமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

புனுகுப் பூனைகள் :
**********************
இரவில் விழித்திருந்து இரை தேடும் புனுகுப்பூனைகள், சின்னஞ்சிறு விலங்குகள், முட்டைகள் மற்றும் சில வேர்க் கிழங்குகளை உணவாக உண்பவை, தனிமை விரும்பிகளான இவை, எதிரியைக் கண்டால் தாக்கும் இயல்புடையவை. வாசனை எண்ணை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக, புனுகுப் பூனைகளில் இருந்து கிடைக்கும் புனுகை எடுப்பதற்காக, புனுகுப் பூனைகளை வீடுகளில் வளர்க்க முடியாது, அவை மிகவும் கடினமான சிரமம் தரும் ஒரு செயலாகும்.
இவை, முட்டைகளை வேட்டையாடுவதால், இவற்றைக் கொல்ல பண்ணைகள் வைத்திருப்போர், வேட்டை நாய்களைப் பயன்படுத்துகின்றனர், ஆயினும் தனித்து வாழும் இயல்புடையதாக இருப்பதால், புனுகுப் பூனைகள் இனம், இன்னும் முற்றிலும் அழியாமல் இருந்தாலும், எண்ணிக்கையில் மிகம

*கர்ம வினை.*

*கர்ம வினை.*

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். 

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான். 

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
 *இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்* என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. *அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

 *காரணம்* 

 _மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்._ 

 *உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.* 

 *எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.* 

ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...