ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தூபங்களின்_நன்மைகள்

 தூபங்களின்_நன்மைகள். 


#சந்தனம்-தெய்வ கடாட்சம் கிட்டும்.

#சாம்பிராணியில்-  தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

#ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

#அகிலி  - தூபமிட குழந்தை பாக்கியம் கிட்டும்.

#துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

#துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

#தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

#வலம்புரிக்காய் -  தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

#வெள்ளைகுங்கிலியம் -  தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

#வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.

#நாய்கடுகு - துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

#மருதாணிவிதை- சூனிய கோளாறுகள் நீங்கும்.

#கரிசலாங்கன்னி - மகான்கள்அருள்கிட்டும்.

#வேப்பம்பட்டை - ஏவலும் பீடையும் நீங்கும்.

#நன்னாரிவேர் - இராஜவசியம் உண்டாக்கும்.

#வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும் .

#வேப்பஇலைதூள்-சகல நோய்களும் குணமாகும்.

#மருதாணிஇலை - இலட்சுமி கடாட்சமுண்டாகும்.

#அருகம்புல்தூள்- சகல தோஷமும் நீங்கும். 

#குறிப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும். நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

கருப்பு குதிரை லாடம் பயன்கள்

 கருப்பு குதிரை லாடம் பயன்கள் :


1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .


2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.


3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி


திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார


குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?

 🌺 மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?


🍃தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை?


‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.


அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.


மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?


எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.


மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும்.....


அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.


ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்ததார்.


பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார்.


மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.


சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற.....


அவர்களும், தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்திவிட்டார்கள்.


பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.


என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா.

இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள்.


அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.


இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.


பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா?


ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.


பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல…

உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது...


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


நமக்கு வரும் துன்பத்தை காப்பாற்றகூடியது பெரியோர்களின் ஆசீர்வாதம் என உணர்ந்து நாம் பெரியோர்களை வணங்கி நலம் பெறுவோம்.

கருப்பு குதிரை லாடம் பயன்கள் :

கருப்பு குதிரை லாடம் பயன்கள் :

1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .

2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.

3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி

திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார

குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

சனி, 30 ஜனவரி, 2021

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.

நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. #🤔தெரிந்து கொள்வோம்

வியாழன், 28 ஜனவரி, 2021

*மாடுகள் எப்போது உறங்கும்?*

*மாடுகள்  எப்போது உறங்கும்?*


"பரபரப்பான வாழ்க்கையில் பல பிரச்சனைகள்...
வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...
தூங்க முடியவில்லை...

எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"
என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.
முனிவர் அவனிடம்,  "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?  என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். 

அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.

100 மாடுகளும் படுத்து தூங்க வேண்டும்,அதுதான் முக்கியம். சரியா? 

இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்து விட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.

"ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.

"100 மாடுகளையும் படுக்க வைக்க படாத பாடுகள் பட்டும் முடியவில்லை.

சில மாடுகள் தானாகவே தரையில் படுத்து விட்டன.

சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்க வைத்தேன்...

ஆனால்,  அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை.

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன.

அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!

அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.

முனிவர் சிரித்தபடியே...

*"இதுதான் வாழ்க்கை.!

வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.

சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...

ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...

*அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..

தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்து விட்டு  உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.

முனிவரை வணங்கி விட்டு சென்றவன் சிலநாள் கழித்து வந்து முனிவரிடம் என்னால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன்,தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்.

இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.


*வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...*

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.

ஆகவே சிலவற்றை இறைவனை பிரார்த்தித்து... அவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

வாழ்வு , பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம் தான் காரணம்.

இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்.

அறிவோம்...தெளிவோம்...!

காலை வணக்கம்!

புதன், 27 ஜனவரி, 2021

இன்று தைப்பூச திருவிழா. முருகனை வழிபட தயாராகி விட்டீர்களா?

      தைப்பூசம்...

இன்று தைப்பூச திருவிழா. 

முருகனை வழிபட தயாராகி விட்டீர்களா?

தைப்பூச வரலாறு.!

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

தைப்பூச வரலாறு :

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார். 

அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தில் முருகனுக்கு பலவித பூஜைகள், நிவேதனங்கள் என செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம். தைப்பூச தினத்தில் முருகன் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

சிறப்புகள் :

தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.

வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.

தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல முருகப்பெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்...!

செவ்வாய், 26 ஜனவரி, 2021

தைப்பூசம் ஸ்பெஷல்

தைப்பூசம் ஸ்பெஷல்

சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும். 

இவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.

அவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர். அங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர். 

இதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.

முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார். 

☆பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.☆

பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

திங்கள், 25 ஜனவரி, 2021

கோவிலில் பலி பீடம் ஏன்?

●கோவிலில் பலி பீடம் ஏன்?●

​ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும். 
அது எப்படியெனில்.......

□ பாதங்கள் - கோபுரம் 
□ முழங்கால் - ஆஸ்தான மண்டபம் 
□ தொடை - நிருத்த மண்டபம் 
□ உறுப்பு - கொடிமரம் 
□ தொப்புள் - பலி பீடம் 
□ மார்பு - மகா மண்டபம் 
□ கழுத்து - அர்த்த மண்டபம் 
□ சிரம் - கர்ப்பக்கிருகம் 
□ சிரத்தின் உச்சி - விமானம்

இதில் பலி பீடம் என்பது, நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்…..

● காமம், 
● ஆசை, 
● குரோதம் (சினம்), 
● லோபம் (கடும்பற்று), 
● மோகம் (கற்பு நெறி பிறழ்வு), 
● பேராசை, 
● மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), 
மாச்சர்யம் (வஞ்சம்),
எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம். 

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும். மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும். 

●மற்றவர்கள் நினைப்பது போல உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.●

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்.

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் 

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும் 

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது 

25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

 28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும

்.

34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டு

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

#நமது #முன்னோர்கள்  "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

கொடி மர தத்துவம்

கொடி மர தத்துவம்.!

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.

அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.

இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?

அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.

கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.

கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.

அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சித்தர் வரலாறு

           சித்தர் வரலாறு
 பெயர்: மகான் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சித்தர்

வரலாறு சுருக்கம்:

ஓம் நமசிவாய ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் அழுக்குமூட்டை சித்தர் சுவாமிகள் போற்றி 

நல்லதே நடக்கும் நம்பிக்கை இருந்தால்
சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீதும் இறை அவதாரமாக பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைக்க வேண்டும் 

எத்தனையோ அவதாரபுருஷர்கள் இருக்கிறார்களே நான் யார் மீது நம்பிக்கை வைப்பது என்று நீங்கள் அடுத்து கேள்வி கேட்கலாம் இதற்கு மிகவும் சரியான விடை பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி என்ற மூட்டை சாமிகள் மீது துளி அளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் அவரை நம்பி தங்களை ஒப்படைத்துக் கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 

அவர்களது அனைத்து ஜென்மத்து பாவங்களையும் தோஷங்களையும் மூட்டை சாமிகள் நீக்கி அருள் புரிந்துள்ளார் என்பது பலருக்கும் நம்ப முடியாத உண்மையாகும்
நம்மில் பலரும் எதையும் எளிதில் நம்பிவிட மாட்டோம் அப்படி நம்பாமல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அருளை தவறவிட்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இவர் சாதாரண மகான் நல்ல சரித்திரங்கள் பல படைத்து விட்டு சென்றிருக்கும் யுக புருஷர் கடவுளின் அவதாரம் ஆவார் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழனி சுற்றுப்பகுதியில் நடமாடிய மகத்தான இந்த மகான் மானுட ரூபத்தில் வாழ்ந்த கடவுள் என இன்றும் வழிபடுகிறார்கள்

அவர் வாழ்ந்த விதம் பக்தர்களிடம் பழகிய விதம் பக்தர்களின் கர்மவினைகளைத் தீர்த்த விதம் அனைத்தும் வித்தியாசமானவை அத்தனையும் செய்துவிட்டு அவர் சாதாரணமாகவே இருந்தார் அதனால்தான் என்னவோ நிறைய பேர் அவரை நம்ப மறுத்தனர் அவரது உருவ அமைப்பும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை சராசரி உயரம் பரட்டைத்தலை அதைச்சுற்றி முண்டாசு அதோடு மழிக்கப்படாத முகம் பச்சை நிற சட்டை அணிந்து உலாவிய அவரை முதல்முறையாக பார்த்தவர்கள்இவரை போய் எப்படி வணங்குவது என்றே மலைத்தனர் குழம்பியும் மருகியும் நின்றனர் ஆனால் மூட்டை சாமிகளுக்கு தன்னை நாடி வந்த ஒவ்வொருவரின் அனைத்து ஜென்ம பிறப்பும் இறப்பும் பாவ புண்ணியங்களும் விடாது துரத்தும் வினைகளும் தெளிவாக தெரிந்தன அந்த வினைகளை விரட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தார்

சிலரிடம் மண்வெட்டி கொடுத்து மண் தோண்ட சொல்வார் சிலரிடம் பள்ளமாக இருக்கும் குழிகளை மூடச் சொல்வார் சிலரிடம் கற்களை எல்லாம் பொறுக்கி வந்து ஓரிடத்தில் குவித்து போடச் சொல்வார் சிலரிடம் சாக்கடைத் தண்ணீரை சரி செய்ய சொல்வார் பெரிய பாறாங்கல்லை கொஞ்ச தூரத்துக்கு புரட்டி போடச் சொல்வார் சிலரிடம் வடக்கே போ தெற்கே போ என்பார் சிலரிடம் கிழக்கில் போய் மேற்கே வா என்பார்

ஒரு குறிப்பிட்ட மரத்தை சுற்றி வா என்பார் சிலருக்கு அடி விழும் சிலரை ரத்தம் வரும் வரை கூட அடித்ததுண்டு சிலருக்கு ஏகவசனத்தில் திட்டு விழும் சில சமயம் சராமாரியாக கடுமையான வார்த்தைகளும் வந்து விடுவதுண்டு சிலரை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் சற்று தொலைவில் வரும்போதே அயோக்கியபய வர்றான் அவனை திரும்பி போகச் சொல்லு என்பார் 

சிலரை அருகில் அழைத்து வைத்துக் கொண்டு அன்பாகப் பேசுவார் கருணையோடு பார்ப்பார் சிலரிடம் போய்டடீ வாங்கிட்டு வா என்பார் சிலரிடம் எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியா என்று கேட்பார் 

வெகுசிலருக்கு அவரை தன்னை பழனிமுருகன் ஆகவே உருமாற்றி காண்பித்தது உண்டு 

இப்படி அவர் எந்த உத்தரவிட்டாலும் அவை மக்களின் கர்மவினைகளை விரட்டினர் காலப்போக்கில் தான் இந்த உண்மையை மக்கள் உணர்ந்தனர் அதன்பிறகு மூட்டைசாமிகளை நோக்கி தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் படையெடுத்தனர் அதன் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய விவரங்கள் வெளிஉலகுக்கு தெரிய வந்தன

பழனி கணக்கம்பட்டியில்தான் சுவாமிகள் பிறந்தார் அந்த ஊரைச் சேர்ந்த திம்மநாயக்கருக்கு இரு மனைவி மூத்த தாரத்தின் மகனாக பிறந்தவர் சாமிகள் காளிமுத்து என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது சிலர் அவரது பெயர் காளியப்பன் என்கிறார்கள் ஆனால் பழனியப்பன் என்பதுதான் இயற்பெயர் என்ற குறிப்பும் உள்ளது அதனால் தான் அவர் பெயர் பழனிசாமி என்று மாறியதாக சொல்கிறார்கள்
சித்தியின் பாரபட்சத்தால் படிப்பை பாதியில் விட வேண்டியதாயிற்று இதனால் பால்க்காரர் ஒருவர் வீட்டில் வேலைக்கு சேர்த்து விடபட்டார் ஒரு தடவை பால்காரர் எதிரிகளுடன் சண்டை போட்டதில் இவர் கடுமையாக தாக்கப்பட்டு பழனிமலை காட்டுக்குள் வீசப்பட்டார் அந்த காட்டுக்குள் மூன்று நாட்கள் சுய நினைவில்லாமல் கிடந்தார் 4வது நாள் சுவாமிகளை காட்டிலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர் உடனே சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டது 

ஒருநாள் முழுக்க உடல் அங்கே இருந்தது மறுநாள் உடல் மாயமாகி விட்டது அடுத்தநாள் இடும்பன் மலைக்குகை ஒன்றில் பழனிச்சாமி தியானத்தில் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் சவக்கிடங்கில் கிடந்தவருக்கு எப்படி உயிர் வந்தது எப்படி மலைகுகைக்கு போனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை
இடும்பன் மலை காட்டுக்குள் கிடந்த 3 நாட்களில் அவரிடம் சித்த புருஷருக்கான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது இடும்பன் மலை சிவன் கோயில் உச்சினிமாகாளி அம்மன் கோயில் காந்தி மார்க்கெட் பகுதிகளில் அவர் மாறி மாறி அலைந்தார் 
முக்காலமும் உணர்ந்த ஞானியாக உலா வந்தார் பஞ்சபூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தார் பறவைகள் விலங்குகள் பேசுவது அவருக்குப் புரியும் ஆனால் எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை

அப்போது சாமிகளுக்கு சுமார் 45 இருக்கும் பழனி நகர தெருக்களில் சுற்றித் திரிந்தவர் மகத்தான மகான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மக்களுக்கு தெரியவந்தது சிறு துணி மூட்டையை இடது தோளில் சுமந்தபடி காணப்பட்டார் அது மக்களின் பாவம் தீர்க்கும் பாவ மூட்டையாக இருந்தது யாரையும் அந்த மூட்டையை தொட அனுமதித்தில்லை

எப்போதும் மூட்டையுடன் காணப்பட்டதால் அவரை மக்கள் மூட்டை சாமிகள் என்று அழைத்தனர் மக்களின் பாவங்கள் தோஷங்கள் கர்மவினைகளை தனக்குள் வாங்கிக்கொண்ட அந்த மகான் பழனியில் தன்னை நாடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் 1979ம் ஆண்டு தனது இருப்பிடத்தை கணக்கம்பட்டிக்கு மாற்றிக் கொண்டார் அங்கு யார் வீட்டுக்கு செல்லவில்லை
சாலையோரத்தில் நடந்தார் மரத்தடியில் உட்கார்ந்தார் சிறிது நாட்கள் கழித்து மோகன் என்பவரது தோட்டத்தில் அமர்ந்து ஆசி வழங்கத் தொடங்கினார் அதன் பிறகு சுமார் 35 ஆண்டுகள் அவரது அருள் ஆட்சி அங்கே நடந்தது
அப்போது அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் சுனாமி வந்ததையும் கல்பனா சாவ்லா பயணித்த ராக்கெட் வெடித்து சிதறும் என்பதை முன்கூட்டியே சொன்னார்

பல்லாயிரக்கணக்கானவர்களின் கர்மாவை தன் பார்வையாலே போக்கினார் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒன்றா ரெண்டா பட்டியலிட்டால் 100க்கும் மேல் புத்தகங்கள் எழுதலாம் என்றாலும் சிலவற்றை பார்க்கலாம் சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் வசித்துவரும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சித்தர் செம்மல் இரா. கற்பூரசுந்தர பாண்டியனின் மகன் ராஜசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்கள் சரவணன் கார்த்திக் மற்றும் இன்னொரு நண்பருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தார் 
விழா முடிந்ததும் நண்பர்கள் நால்வரும் கணக்கம்பட்டியில் உள்ள பழனி மூட்டைசாமியை சந்திக்கச் சென்றனர் அவர்களை பார்த்ததும் வாங்க சாமி அந்த கல்லை நகர்த்தி போடுங்க என்று உத்தரவிட்டார்

அது பெரிய பாறாங்கல் நண்பர்களும் அதை நகர்த்த போராடினார்கள் அப்போது மூட்டை சாமிகள் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டடே நீ வா சாமி இங்கே என்று சரவணனை அழைத்தார் அவரை மட்டும் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்

மற்ற மூன்று பேரும் கடுமையாக போராடி கல்லை சில அடி தூரம் நகர்த்தினர் அப்போது மூட்டை சாமி சரவணனிடம் சாமி எனக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறியா என கேட்டார்
உடனே சரவணன் காரில் பழனிக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்தார் சாமிகள் ரசம் மோர் இரண்டையும் எடுத்தார் தன்னிடமிருந்து ஒரு பாட்டிலில் அவற்றை ஊற்றி கலக்கி கொடுத்து குடி என்றார்

சரவணன் யோசித்தபடியே அதை வாங்கி குடித்தார் எப்படி இருக்குமோ என்று பயந்த அவருக்கு அந்த ரசம் மோர் கலவை தேவாமிர்தமாக இருந்தது சுவாமிகள் கைப்பட்டதால் அதன் சுவை மாறி இருந்ததை உணர்ந்து சிலிர்த்துப் போனார்

அந்த சமயத்தில் மற்ற மூன்று நண்பர்களும் பெரிய கல்லுடன் போராடியபடி இருந்தனர் அவர்களில் ஒருவர் எங்களை விட்டு விடுங்கள் என்று மனதுக்குள் நினைத்திருந்தார் அடுத்த நிமிடம் சுவாமிகள் சரி போதும் வாருங்கள் என்று அழைத்தார் 
ராஜசேகரையும் கார்த்தியையும் அந்த கல் மீது படுத்து விட்டு வர சொன்னார் அதன் பிறகு நண்பர்கள் நால்வரும் சென்னை திரும்பினார்கள் சுவாமிகள் அருளால் நண்பர்கள் நால்வரும் இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் சுவாமிகள் கையால் தீர்த்தம் பெற்று அருந்திய சரவணன் வேறு யாருமல்ல நடிகர் சூர்யா அவர் தம்பி கார்த்தியும் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார் ராஜசேகர் படத்தயாரிப்பாளராக இருக்கிறார் மற்றொரு நண்பர் கோவையில் பெரிய தொழில் அதிபராக உள்ளார் இந்த நான்கு பேரும் சேர்ந்து கல்லை புரட்டிப்போட்ட இடத்தில்தான் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல்களை கற்பூரசுந்தர பாண்டியன் தனது சித்தர்கள் கூறும் இரகசியங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளார்

போலீஸ் உதவி கமிஷனர் சுசீல்குமார் மனைவி சாரா பெற்ற அனுபவம் வித்தியாசமானது அவர் சொல்கிறார் மூட்டை சாமிகள் பற்றி 2002ஆம் ஆண்டு எங்களுக்கு தெரிய வந்தது எண் கணித ஜோதிடர் துரைமுருகன் எங்களை கணக்கம்பட்டி அழைத்துச் சென்றார் முதலில் மூட்டை சாமிகள் மீது எனக்கும் கணவருக்கும் நம்பிக்கை வரவில்லை
2004ஆம் ஆண்டு மீண்டும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது அப்போது ஒருவித வைப்ரேஷன் உணர முடிந்தது சாமிகள் ஒரு கம்பை வைத்து கொண்டு நின்றிருந்தார் தீர்க்கமாகப் பார்த்தார் நிறைய பேர் அங்குள்ள கல்லை தள்ளிக் கொண்டிருந்தனர் நாங்களும் அவர்களோடு சேர்ந்து தள்ளினோம் அன்றிரவு அவர் குடிசை முன்பு சுமார் 50 பேர் உட்கார்ந்து இருந்தனர் நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக போய் உட்கார்ந்தோம்

சிறிது நேரத்தில் சாமிகள் வந்தார் பச்சை பனியன் போட்டு இருக்கிற சாமி இங்க வாங்க என்று என் கணவரை அழைத்தார் கடப்பாறையை கொடுத்து பள்ளம் தோண்ட சொன்னார் அதன் பிறகு எனக்கும் கணவருக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது பதினைந்து நாளில் மீண்டும் நாங்கள் சென்றோம் பிறகு மாதாமாதம் கணக்கம்பட்டி சென்றோம் தீபாவளி புத்தாண்டு தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில் நாங்கள் சுவாமிகளுடன் இருப்போம்

சுவாமிகள் இருந்த வயல் பகுதியில் நிறைய பாம்புகள் உண்டு ஆனால் யாரையும் தீண்டியதில்லை சிலசமயம் சாமிகள் ஏதாவது ஒரு திசையில் கையை காட்டி போ போ என்பார் அப்போது நாம் திரும்பிப் பார்த்தால் அங்கு பாம்பு போய்க்கொண்டிருக்கும் 

சுவாமிகள் எப்போதும் பரிபாசையில் தான் பேசுவார் எல்லோருக்கும் புரியாது நமக்கு தேவை என்றால் நிச்சயம் புரியும் என் கணவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அங்கு யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு தடவை சாப்பிடும்போது அந்த போலீஸ்காரரை வரச்சொல் என்றார்
எங்களுக்கு இருந்த எல்லா பிரச்சினைகளும் சாமிகள் தீர்த்து வைத்துள்ளார் நாங்கள் இன்று புத்துணர்ச்சியோடு இருக்கிறோம் என்றால் அதற்கு மூட்டை சாமிகள் தான் காரணம் என்றார் போலீஸ் கமிஷனரான சுசில்குமார் மனைவி சாரா

பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கும்பகோணத்தில் வசிக்கும் கண்ணன் மூட்டை சாமிகளிடம் தான் பெற்ற அனுபவங்கள் பல அவற்றில் சிலவற்றை கூறினார் நான் பணிபுரிந்த அரசு கல்லூரி வாசலில் நீண்ட நாட்கள் மூட்டை சாமிகள் இருந்தார் ஒரு நாள் என்னிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கினார் பிறகு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார் நான் சாமி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன் உடனே சாமிகள் என்ன இருக்கு என்றார் என் மனைவி பூரி என்றார் சரி சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்
1 2 3 4 8 16 என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தார் முதலில் குருமா தீர்ந்தது என்றாலும் சாமிகள் பூரி சாப்பிடுவதை நிறுத்தவில்லை 30 பூரி தாண்டி 40 பூரி சாப்பிட்ட பிறகும் சாதாரணமாக சாப்பிட்டபடி இருந்தார்
மாவு தீரும் நிலை வந்தது எங்களுக்கு உதறல் எடுத்தது 47வது பூரியை சாப்பிட்டபோது என்னமா நிறுத்திக் கொள்ளலாமா என்றார் என் மனைவியும் சரிங்க சுவாமி என்று சொல்ல சாப்பாட்டை முடித்துக் கொண்டார் எதற்காக என் வீட்டில் 47 சாப்பிட்டார் என்று தெரியவில்லை

மற்றொரு நாள் நான் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன் எதிரே மூட்டை சாமிகள் வந்தார் என்னிடம் இரண்டு ரூபாயை கொடுத்து இங்கே ஒரு விநாயகர் கோவில் கட்டு என்றார் எனக்கு பிரமிப்பாக இருந்தது 
இரண்டு ரூபாயை வைத்து எப்படி கோயில் கட்ட முடியும் என்று கேட்டேன் அதற்கு மூட்டை சாமிகள் கொஞ்சம் பொறு பஞ்சு வியாபாரி ஒருவன் வருவான் அவனிடம் சொல் கோவில் கட்டி தருவார் என்றார்

சுவாமிகள் சொன்னபடியே அந்த பகுதிக்கு சொகுசு கார் ஒன்று வந்தது அதில் இருந்தவர் என்னிடம் ஏதோ ஒரு முகவரியை கேட்டார் நான் மூட்டை சாமி கூறியதை சொன்னேன் அந்த பணக்காரர் எந்த மறுப்பும் சொல்லவில்லை சுவாமிகள் என்னிடம் கொடுத்த 2 ரூபாயை வாங்கிக் கொண்டு கோயிலை கட்டி கொடுத்தார் 
ஒரு தடவை இரவு 11.30 மணிக்கு மூட்டை சாமிகள் என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்றார் கண்ணை மூடி திற என்றார் அப்படியே செய்தேன் என் எதிரே 18 சித்தர்களும் நின்றனர் அடுத்த வினாடி சைகை காட்டினார் 18 சித்தர்களும் மறைந்துவிட்டனர்
அந்த சித்தர்கள் பற்றி கேட்டபோது எல்லாம் ராமாயண காலத்து பசங்க என்று சாமிகள் சிரித்துக்கொண்டே சொன்னார் அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது

தன்னை நம்பியவர்களுக்கு அவர் நம்பிக்கையாளராக திகழ்கிறார் என்றார்

இப்படி எத்தனையோ பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்திய சாமிகள் வெளிமாநிலம் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் கனவில் சென்று அழைத்து வந்தது உண்டு மலேசியாவைச் சேர்ந்த லேகா என்ற டாக்டர் இந்த தலத்திற்கு வந்து தன் நோயை தீர்த்துச் சென்றார் காஷ்மீரை சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் திடீரென்று வந்து சுவாமிகள் தன் கனவில் வந்து அருள்பாலித்தார் என தெரிவித்தார்

முடக்குவாதத்தால் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபரை மதுரையிலிருந்து சாமிகளிடம் தூக்கி வந்திருந்தனர் அவரை கூர்மையாக பார்த்து விட்டு டீ வாங்கிட்டு வா என்று சொன்னதும் அந்த வாலிபர் எழுந்து நடக்கத் தொடங்கினார் இந்த அற்புதத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்

கணக்கம்பட்டி அருகிலுள்ள கோம்பைபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள் ஆனால் சுவாமிகள் நீ எங்கும் போகவேண்டாம் இந்த பாலைக் குடி என்றார் 
சாமிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை மறுநாள் அவர் போய் மருத்துமனைக்கு சென்றபோது இதயத்திலிருந்து ஓட்டை மாயமாக மறைந்துவிட்டது என்று டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்றார்கள் விசாரித்தபோது மூட்டை சாமிகளின் சிறப்பு தெரியவந்தது 

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக படுத்தபடுக்கையாக தூக்கி வந்தனர் மூட்டை சாமிகள் அவருக்கு திருநீறு கலந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தார் அடுத்த மூன்று மாதங்களில் அந்த நபருக்கு புற்றுநோய் காணாமல் போனது புற்றுநோய் எங்கே போனது என்றே தெரியவில்லை
எல்லாம் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அற்புதங்கள் ஆகும்

இவரின் ஜீவசமாதி ஆலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மோகன் இவரின் இத்தகைய அற்புதங்களை தெரிவித்தார் அவரது தோட்டத்தில் தான் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மூட்டை சாமிகள் நமக்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்
மோகனின் செல்போனுக்கு கோவிலில் இருந்த ஒருவர் பேசினார் தனது பெயர் குரு என்றும் நன்கொடை ரசீதில் உள்ள போன் நம்பரை பார்த்து தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார் உடனே மோகன் செல்போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டார் அந்த நபர் கோவையில் இருந்து பேசினார் அவர் கூறியதாவது மூட்டை சாமிகள் பற்றி நண்பர் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார் ஆனால் எப்படி ஒரு மனிதனை கும்பிடுவது என்று எனக்கு தயக்கமாக இருந்தது

ஒரு நாள் கோவையிலிருந்து பழனிக்கு வந்த போது கண்டக்டரிடம் கணக்கம்பட்டியில் பஸ் நிற்குமா என்று கேட்டேன் அவர் நிற்காது என்றார் உடனே நான் மனதுக்குள் மூட்டை சாமி உண்மையிலேயே நீங்கள் சக்தி உள்ளவராக இருந்தால் கணக்கம்பட்டியில் இந்த பஸ் நிற்க வேண்டும் என மனதுக்குள் நினைத்தேன் நான் நினைத்தபடியே அந்த பஸ் கணக்கம்பட்டியில் நின்றது ஆச்சர்யத்தோடு இறங்கினேன் சாமியை பார்க்க சென்றேன் அப்போது அவர் என்னை பார்த்து என்ன வெங்காயத்துக்கு இங்கே வந்தாய் என்று திட்ட ஆரம்பித்தார் எனக்கு மிகவும் கவலையாகி விட்டது அங்கிருந்த ஒருவர் கவலைப்படாதீங்க நான் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறேன் சாமிகள் திட்டினால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்று சொல்லி சாமிகளின் படம் ஒன்றை என்னிடம் கொடுத்தார் அதை எனது சட்டைபையில் 
வைத்தேன் அன்றுமுதல் வாழ்வின் ஏகப்பட்ட நல்ல மாற்றமும் மறுமலர்ச்சியும் நடந்தது இப்போது சாமிகளுடன் மனதுக்குள் பேசிக் கொள்கிறேன் எனது குடும்பம் நல்ல நிலையில் உள்ளது என்றார் 

கணக்கம்பட்டி ஜீவசமாதி அதிசயம் வாய்ந்தது 
பொதுவாக சித்தர்கள் ஒருவரை தமது தலத்துக்கு அழைக்க விரும்பினால் ஒரு பக்தர் மூலம் அதை செயல்படுத்துவார்கள் என்பார்கள் நிமிடத்துக்கு நிமிடம் அற்புதங்கள் செய்த அந்த மகான் 11 3 2014 அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர் எனவே ஒவ்வொரு புனர்பூசம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் குருபூஜை அன்று கொண்டாடப்படும் தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறார்கள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆசி பெற தவறியர்கள் இன்று அவரது அருமையை உணர்ந்து ஐயோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள்

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை கணக்கம்பட்டியில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்தாலே போதும் சுவாமிகளின் அதிர்வலைகளை உணரமுடியும் நம்பிக்கையோடு அவரை வணங்கினால் நிச்சயம் நல்லதே செய்வார்

பழனி அருகில் கணக்கம்பட்டி உள்ளது பஸ்களிலும் ஆட்டோக்களிலும் போகலாம் ஜீவசமாதி வழிபாடு தொடர்பாக ஐயா மோகனிடம் பேசலாம் மூட்டைசாமிகளை பெரும்பாலானவர்கள் முருகனின் அம்சம் என்று சொல்கிறார்கள் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் சுந்தரபாண்டியன் தனது நூலில் பாம்பாட்டிசித்தரின் 16வது திவ்ய சரீரம் என்று குறிப்பிட்டுள்ளார் மோகன் ஐயா பல தடவை சுவாமிகளை முருகன் உருவத்தில் பார்த்திருப்பதாக கூறினார் 

அதுபோல ஆன்மீக பிரபல எழுத்தாளர் சுவாமிநாதனும் மூட்டைசாமிகளை பழனி முருகன் கோலத்தில் பார்த்ததாக பதிவு செய்துள்ளார் சாமிகளின் தோட்டத்தில் இருக்கும் ஜோதி என்ற பெண்மணி கூறுகையில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகளின் மறு அவதாரமாக கணக்கம்பட்டிச் சுவாமிகள் திகழ்வதாக தெரிவித்தார் இப்படி மூட்டை சாமிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அம்சமாக காட்சி அளித்துள்ளார்

ஸ்ரீ சாய் பாபாவுக்கும் மூட்டை சாமிகளுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கியது போல மூட்டை சாமிகளும் கல்லில் அமர்ந்து ஆசி வழங்கினார் பாபா அமர்ந்திருந்த கல் ஷீரடி துவாரகாமாயியில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது போல கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் அமர்ந்த கல்லும் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பாபாவுடன் எப்போதும் ஒரு நாய் காணப்படும் மூட்டை சாமிகள் உடன் மணி என்ற நாயும் இடம்பெற்றுள்ளது அந்த நாய் மூட்டை சாமி உடன் இருக்கும் அந்த நாய் மூட்டை சாமிகளின் ஜீவசமாதி அருகிலேயே படுத்திருக்கும் மூட்டைசாமிகளை நிறைய பேர் தங்களது கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் அவரிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுகிறார்கள் ராசிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் மூட்டைசாமிகளை தங்களது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் மூட்டை சாமியாரை சாய்பாபாவின் அவதாரமாகவே பார்க்கிறார்கள் 

சாய்பாபாவின் பரம பக்தனான எனக்கு கணக்கம்பட்டி வந்த பிறகே சித்தர்கள் தேடலில் மிகுந்த ஈடுபாட்டை எனக்கு நல்கினார் அவரது ஜீவசமாதிக்கு நாங்கள் முதல்முறையாக சென்றபோது பெரும் அதிசயம் நிகழ்ந்தது புதிதாக எந்த ஜீவசமாதி சென்றாலும் அந்த நேரத்தில் வருணபகவான் ஆசீர்வாதம் செய்வது வழக்கம் அப்பொழுது அந்த இடத்தை மழை பெய்து குளிர்விப்பார் இந்த அதிசயம் அடிக்கடி எனக்கு நடப்பதுண்டு முதல்முறையாக கணக்கம்பட்டி சென்றபோது அப்படித்தான் மழை சோவென்று பெய்தது அந்த மழையில் நாங்கள் சென்ற கார் வாகனங்கள் நிறைய நின்றதாலும் ஒரு வாகனம் பழுது ஏற்பட்டு நின்றதாலும் போக்குவரத்து நெரிசலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இரண்டு பக்கமும் நகர முடியாமல் மாட்டிக் கொண்டோம் கணக்கம்பட்டியில் இருந்து மூட்டை சாமியார் ஜீவசமாதி செல்லும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்றது நாங்கள் வெளியே இறங்க முடியவில்லை மழை வேறு பெய்து கொண்டிருந்தது அதே நேரத்தில் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை மூட்டை சாமிகள் இடத்தில் இருந்து பார்த்தால் (கணக்கம்பட்டி) பழனி மலை தெரியும் அந்தப் பழனிமலை முருகனை நோக்கி நாங்கள் வேண்டிக்கொண்டோம் 

கணக்கம்பட்டியாரை தரிசனம் செய்ய எவ்வளவு தடங்கல் ஏற்படுகிறது முருகா நீயே எங்களுக்கு வழி காட்டுவாயாக என்று மனதார உளமார வேண்டினோம் அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே மழை நின்றது நின்ற வண்டிகள் நகர தொடங்கின கணக்கம்பட்டியார் ஜீவசமாதியில் காலடி எடுத்து வைத்து முதல் முறையாகவே அங்கு நுழைந்தவுடனேயே பெரிய அதிர்வலைகள் ஜீவசமாதியில் நிரம்பி வழிந்தது சாய்பாபாவின் அருகில் இருக்கும் நாய் போலவே நிறைய நாய்கள் அங்கேயும் ஜீவசமாதியில் இருந்தன அது எங்களை நோக்கி அந்த ஜீவசமாதியின் வாயில் காப்பானே போல வந்து வரவேற்றது தெரிந்த நண்பனைப்போல உறவினை போல தெரிந்த நபரை போல எங்கள் பாதங்களை கைகளை நக்கியது அவரின் ஜீவசமாதியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம் செய்தோம் மூட்டைசாமியாரை மனதிலிருத்தி அவருடன் பேசினோம் கணக்கன்பட்டி மூட்டை சாமியார் பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் அங்கிருந்த ஒருவர் வந்து மூட்டை சாமியார் பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்தார் மூட்டை சாமியாரின் வரலாறு பற்றி அவர்தான் எங்களுக்கு கூறினார் அடுத்த முறை அந்த ஜீவசமாதி சென்றபோது அங்கே அப்படி ஒரு நபரை நாங்கள் பார்க்கவே இல்லை பிறகுதான் கனவில் வந்து கணக்கம்பட்டியாரே தான்தான் வந்ததாக தெரிவித்தார் பிறகு வருடம் தவறாமல் கணக்கம்பட்டி செல்வதும் ஷீரடி ஸ்ரீசாய்பாபா செல்வதும் வழக்கமாக்கிக் கொண்டேன் கணக்கம்பட்டியார் நிறைய முறை கனவில் வந்து வழிகாட்டியது உண்டு அவரை நினைத்தாலே பிரச்சினைகளும் பறந்தோடிப் போகும் என்னைப்பொறுத்தவரை சித்தர்கள் நமக்கு நல்வழி காட்டுபவர்கள் சித்தர்களை மனதில் வைத்து கொண்டால் நமது கர்ம வினைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும் கணக்கம்பட்டியார் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் மறு அவதாரம் தான்தான் என்று நிறைய பேர் கணக்கம்பட்டியார் பெயரை சொல்லிக்கொண்டு போலி பித்தலாட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் ஜீவ சமாதி இன்றும் உயிர்ப்புடன் உள்ளது எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கணக்கம்பட்டியாரை உளமாற மனதார நினைத்தால் உடனே வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பவர் கணக்கம்பட்டி வெறும் மகான் அல்ல அவர் சித்த புருஷர் கணக்கம்பட்டியாரின் விபூதியை எடுத்து வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்திற்கு சென்றாலும் அந்த காரியத்தில் வெற்றி கிட்டும் கணக்கம்பட்டியாரின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் கணக்கம்பட்டியாரின் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாம் உங்கள் வேலை பார்க்கும் இடம் தொழில் செய்யும் இடத்தில் வைத்து வணங்கலாம் கணக்கம்பட்டியார் வெறும் மனிதர் மட்டுமல்ல அவர் ஒரு அவதார புருஷர் கணக்கம்பட்டியார்தான் நான் வணங்கும் குருமார்களில் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர் அவரை தரிசனம் செய்த அன்றிலிருந்தே என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது அவர் சூட்சும ரூபமாக என்னுடனேயே வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களை எல்லாம் நான் ஒருமுறை கணக்கம்பட்டி சென்று வாருங்கள் என்று சொல்வதுண்டு ஏனெனில் ஒரு தடவை சென்று விட்டால் நீங்கள் அவரை பிடித்து கொள்வீர்கள் அவர் உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடுவார் உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார் கணக்கம்ப்பட்டியாருக்கும் கல்லுக்கட்டி சித்தருக்கும் நிறைய தொடர்பு உண்டு. கணக்கம்பட்டி யார் சில நேரங்களில் தனது பக்தர்களை கல்லுக்கட்டி சித்தரிடம் அனுப்புவதுண்டு கல்லுகட்டி சித்தர் சிலநேரங்களில் தனது பக்தர்களை கணக்கம்பட்டியாரிடம் அனுப்புவதுண்டு இருவருமே சம்பாஷணையில் பேசிக் கொள்வார்கள் என்று அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று யாருக்கும் தெரியாது இத்தனைக்கும் இருவருமே சந்தித்து கொண்டதே கிடையாது கல்லுகட்டி சித்தர் ஆஞ்சநேயர் சொரூபம் கொண்டவர்.கணக்கம்பட்டியார் முருகப்பெருமான் அம்சம் சாய்பாபா அவதாரம் பாம்பாட்டி சித்தர் சுவாமிகள் அவதாரம்.எனக்கு நிறைய கடவுள் குறிப்பு தருபவர்கள் சித்தர்களே ஆவார்கள் அதில் சாய்பாபாவும் கணக்கம்பட்டியாரும் முதன்மையானவர்கள்.
கணக்கம்பட்டி சென்று வரும் பொழுதெல்லாம் எனக்கு நல்ல திருப்பம் நடப்பது வழக்கம்.ஒரு முறை கணக்கம்பட்டியாரை சென்று தரிசனம் செய்து வாருங்கள் உங்களுக்கே தெரியும் புரியும் நல்லதே நடக்கும்.எனக்கு கணக்கம்பட்டியார் பற்றி தர்மராஜன் அண்ணன்தான் வழிகாட்டினார் நான் கணக்கம்பட்டியாரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை ஆனாலும் சூட்சும ரூபத்தில் கணக்கம்பட்டியார் எனக்கு காட்சி தருவது வழக்கம் அவர்தான் என் உள்ளுணர்வு அவர்தான் என் மனம் கணக்கம்பட்டியாரின் பரமபக்தரான நாமக்கல் ஜெயமோகன் சுவாமிகள் மீது எனக்கு மிகவும் மரியாதை அன்பும் பாசமும் பக்தியும் ஈடுபாடும் ஆர்வமும் அக்கறையும் உண்டு இதுவரை அவரை நான் சந்தித்தது இல்லை கணக்கம்பட்டியார் அவரை போய் பார்க்க சொல்லி உத்தரவு பிறப்பித்து அழைத்துள்ளார் குருவே சரணம் ஜெயமோகன் சுவாமிகளை இரண்டு தடவை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியது உண்டு தர்மராஜன் அண்ணன்தான் ஜெயமோகன் சுவாமிகள் எண் எனக்கு அளித்தவர் தர்மராஜன் அண்ணன் எனக்கு நிறைய சித்தர்கள் ஜீவசமாதி வழிகாட்டியவர் அவரே ஒரு சித்த புருஷர் வாழ்க்கைதான் வாழ்கிறார் தர்மராஜன் அண்ணன் சித்தர்கள் பற்றி நிறைய பேசுவார் எனக்கு நிறைய ஜீவசமாதிகள் வாழும் சித்தர்கள் தரிசனம் செய்ய வழிகாட்டியவர்.நாமக்கல் ஜெயமோகன் சுவாமிகள் கணக்கம்பட்டியார் சிலை வைத்து வழிபடுகிறார் கணக்கம்பட்டியாருக்கு கோவில் கட்டி கொண்டிருக்கிறார் அவர் சுவாமிகளுக்கு நடத்தும் பவுர்ணமி பூஜை ரொம்பவும் விசேஷமானதாகும் அந்த பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் உங்களுக்கு அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.

திருச்சிற்றம்பலம்.

*தை பூசம் ஸ்பெஷல் *

  *தை பூசம் ஸ்பெஷல்  *

*வரும் 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசம்*

தைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்?... என்ன செய்ய வேண்டும்?

இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமா னை உலகெங்கிலும் வழிபடு வது நமக்குத் தெரிந்தது தான். தமிழர்களின் வாழ்வோடு கலந்தவன் இந்த சிவகுமாரன்.

அதாவது சிவபெருமான் மற்றும் பார்வதியின் இளைய குமாரன் என்பதால்  சிவகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை சாதார ணமாக சிவனின் மகன் என்று மட்டும் சொல்லி விட முடியாது. முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களு ம் இருக்கின்றன.

*தேவர்களின் சேனாதிபதி*

****************************

தேவர்களுக்கே சேனாதிபதியாக திகழ்ந்தவர் தான் இந்த முருகப் பெருமான். ஆம். தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் சூரபத்மன் என்னும் அரக்கன். அவனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரிக்கச் செய்ய பட்டவர் தான் நம்முடைய முருகன்.

*ஆறுபடை வீடுகள்*

********************

மற்ற எல்லா நாட்களிலும் எல்லா முருகன் கோவில்களிலும் ஒரே மாதிரியான பூஜைகள் நடைபெறும். ஆனால் தைப்பூசம் என்பது அப்படியல்ல. எல்லா முருகன் கோவில்களி லும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் மற்ற ஆலயங்களை விட முருகளின் ஆறுபடை வீடுகளில் தைப்பூசத்துக்கென்றே சிறப்பு அபி ஷேகங்கள், பூஜைகள், வழிபாட்டு முறைகள் உண்டு.

*தொட்டது துலங்கும்*

**********************

தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துல ங்கும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிரு ப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை கிடையாது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமியும் சேர்ந்து வருகிற நாளை தான் நாம் முருகனுக்காக தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

*நேர்த்திக்கடன்கள்*

********************

நம்முடைய ஊர்களில் திருவிழாக்களில் அலக குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப் போம். அதேபோல் மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாமல் முருகளுக்கு இந்த தைப்பூச நாளில் குறிப்பாக, பக்தர்களால் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும். அதில் மிக முக்கியமானதாகச் சொல்ல வேண்டுமென்றா ல், வேலெடுத்தல், நாக்கில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்), பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

*வேல்முருகன்*

****************

முருகனுக்கு நிறைய பெயர்கள் இருப்பது நம க்கு தெரிந்ததுதான். ஆனால் வேல் முருகன் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஈசன் முருகனுக்கு உயிரைக் கொடுத்தான். ஆனால் பார்வதி தேவியோ தந்தையிடம் கோவித்துக் கொண்டு பழநியில் ஆண்டியாக நின்ற முருக னின் கையில் ஒரு வேலைக் கொடுத்தார். அதோடு இந்த வேலை இன்றுமுதல் காப்பாயா க. இந்த வேல் என்றும் உனக்குத் துணையாக இருக்கும் என்று கூறினாராம். அதன்மூலம் தான் வேல்முருகன் என்று அழைக்கப்பட்டார். அதனால் பார்வதி வேல் கொடுத்த திருநாள் தான் தைப்பூசத் திருநாள்.

*தைப்பூச விரத முறைகள்*

****************************

நம்முடைய இன்னல்களைத் தீர்க்கும் தைப்பூச விரத தினத்தன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம். தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருக னின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் உண்டாகும்.

*துளசி மாலை*

***************

பொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோரு மே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்க ளுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கிவிடு வார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.

*உணவு*

**********

மாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவ   ர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப் பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிட கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்து க்குப் பின் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.

*காவடி*

********

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குண மாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவ ராக இருக்கிறவர்கள் முருகளை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.

*ஓம் சரவணபவ...*

*கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...*


                

வாகன விபத்து

 வாகன விபத்து ஏற்படாமல் இருக்க அகத்தியர் கூறிய ரகசியம்


இன்று பெருகி வரும் வாஹன விபத்துக்கள். அதில் உயிர் நஷ்ட்டமும்,, அங்கஹீனம் ஏற்படுதலும் அதிகம்.


மது போதையிலும், திமிரான ட்ரைவிங்காலும், விபத்தில் சிக்குபவர்களைப் பற்றி நமக்கு தேவையில்லை.


ஆனால் துரதிர்ஷ்டமாக விபத்தில் நல்ல ஒட்டுனர்கள் யாரும் சிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த தாந்த்ரீக பூஜா விதாநம்...


வாகன ஓட்டுபவர்கள் [Driver] வணங்க வேண்டிய தெய்வம்#


 எமதர்ம ராஜாவாகிய ஸ்ரீ காலமஹாப்ரபு.


இவருடயை வாகனமாகிய எருமை காளை ( எருது ) அதி அற்ப்புத தபோபலந்களை உடையது.


போகர் >>>> குரு தேவா கலியுகத்தில் எருமை மாடு என்று பண்பற்ற முறயைில் பேசும் வழக்கு அமைந்துள்ளதே?


அகத்தியர் >>>> அது தவறு போகா, இறவைன் படைத்த ப்ரபஞ்சத்தில் தேள்,பாம்பு , மயில், மனிதன், தேவர் முதலான அனைத்து ஜீவன்களிலும் இறைவன் வாழ்கிறான் .


எருமை மாடு என்று கேலி பேசினால்,திட்டினால் மரண தோஷங்கள் உண்டாகும்,.

நெடுநாள் படுக்கையில் கிடந்து மரணம் ஏற்ப்படும்.


எருமை மாட்டிற்க்கு மக நட்சத்திரத்தில் அகத்தி கீரை அளித்து வந்தால் , நோய் நொடி இல்லாத சுகமான மரணம் கிட்டும்.


எம பயம் இல்லாது

மரண தேவதையை எதிர் நோக்கலாம்,உலகில் மனிதன் இதற்க்கு தானே அஞ்சுகிறான்,.


அந்த எம பயம் நீங்க மாரடைப்பு,வாகனவிபத்து, தற்க்கொலை,

போன்று அசுப மரணங்களில்லாது

சிரித்த முகத்துடன் தெய்வச்சிந்தனையுடன்

மரண தேவதை யை தொழ மக நட்சத்திரத்தில் எருமை வழிபாடு உதவுகிறது.


புலிப்பாணி >>> சுவாலினனை {எருமை} வழிபடும் முறை உண்டா குரு தேவா.?


அகத்தியர் >>>> மக நட்சத்திரத்தில்

எருமை மாட்டிற்க்கு அகத்திக்கீரை கொடுப்பதே அதன் வழிபாடாகும் .


புலஸ்த்தியர் >>>>

வாகனம் ஓட்டுபவர்கள் {Driver} மேற்கூறிய முறையில்

எருமையை வணங்குதல் உத்தமமானது,விபத்துகள் ஏற்ப்படாது


(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

மந்திரம் என்றால் என்ன ?

 மந்திரம் என்றால் என்ன ? 

மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத

மொழியில் இருந்து வந்தது. "மந்" என்றால்

மனம்; "திர" என்றால் விடுதலை. ஆகவே

மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த

எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க

உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு

கூட்டமாகும். மந்திரத்தை மனனம்+திரயதே

என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால்

நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப்

பொருள் கொள்ளலாம். திரயதே என்றால்

காப்பாற்றுதல் என்று பொருள். ஆக

ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரை

காப்பாற்றுவது என்று பொருள்.

மற்றொரு வகையில் "மந்" என்றால் மனம்,

"திர" என்றால் பிராணன் மனமும் பிராணனும்

கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.

பிரபஞ்சத்தின் தோற்றம் ஒலியில் இருந்தே

உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது.

மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ

சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு

வகை தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு

அதிர்வலைகள் உண்டு,

எஃப் எம் ரேடியோவில் ஒவ்வொரு

ஸ்டேஷனுக்கும் ஒவ்வொரும் "ஃப்ரீக்வன்ஸி"

இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள

ஒவ்வொரு தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு

அதிர்வு உண்டு. ஒவ்வொரு சமஸ்க்ருத

எழுத்தும் ஒரு தேவதையை (சக்தி நிலையை)

குறிக்கிறது. மந்திரங்களை உச்சரிக்கும் போது

அதற்குரிய பிரபஞ்ச அதிர்வலைகள்

நவகிரகங்கள் மூலமாக பூமியில் வந்து நமது

சுவாசத்தின் வழியாக சூட்சும உடலில்

சேர்ந்து பின் ஸ்தூல உடலில்

செயல்படுகிறது.

இந்த பிரபஞ்ச அதிர்வலைகள் ஒருவர் செய்யும்

கர்மங்களுக்கு (செயல்) ஏற்ப உடலில்

கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும்

போது வாழ்வின் நல்ல பகுதிகளான

ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம்

என்பன இருக்கும். இந்த அதிர்வலைகளை

மனித மனம் ஈர்த்து சேமித்து அதன் மூலம்

நன்மை அடைவதற்காக ரிஷிகள் வகுத்து

வைத்த வழியே மந்திரங்கள்.

மந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும்

தானா ? என்று சிலர் கேட்கக் கூடும்.

ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்

சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும்

சூத்திரத்தினை முன்மொழிகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த,

மறைமொழிதானே மந்திரம்

என்ப” (சொல்லதிகாரம், 480). "நிறைமொழி

மாந்தர்" என்பதை சைவ சித்தாந்த

வார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன்

இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில்

சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள்.

இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர்.

இவர்கள் சொல்லும் மொழி எல்லாம்

மந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள்,

சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள்

ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள்,

ஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம்

என்று கூறலாம்.

இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு

(resonance) பற்றி நீங்கள் ஒருவேளை

அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை

அதிர்வுடன் அதே அளவான? அதிர்வுகள்

பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே

கோட்பாடுதான் மந்திர சாதனையிலும்

நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின்

இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள்

ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை

பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும்

போதும் அதுதான் நடக்கிறது.

மந்திரங்களை

நாம் மூன்று வழி முறைகளில் உச்சரிக்கலாம்.

1) #வாசிகம் – இது தெளிவான உச்சரிப்புடன்

மற்றவர்களுக்கு கேட்கும் படி மந்திரத்தினை

கூறுவது, இது வெளிமண்டலத்தில் குறித்த

தெய்வசக்தியினை கவரும் முறை, ஆனால்

எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர்

பெறும் சக்தி குறைவு, ஆனால் சரியான

சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச்

செய்யலாம், பொதுவாக கோவில்களில்

பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த

முறையினையே பின்பற்றுகின்றனர்.

2) #மானசீகம் – இதில் உதடு அசையாமல்

மனதிற்குள் ஜெபிக்கும் முறை, மனதின் எண்ண

அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக

உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில்

தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது,

ஆனால் மானசீகமாக இதனை நாம்

செயற்படுத்தலாம்.

3) #உபாம்சு – இந்த முறையில் உதடுகள்

அசையும் ஆனால் அருகில் உள்ளவர்கள் கேட்க

முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில்

மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும்.

இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட

நிலையில் செயல்படுவதாகும், இப்படி

மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, ஏனென்றால்

உபாம்சு முறையில் வாசிக ஜெபத்தில்

உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ

சக்தியினையே பரிவின் (resonance) மூலம்

விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறை

மூலம் உடலிற்கு உள்ளே உள்ள

தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க

முடியும். ஆனால் உபாம்சு முறை

இரண்டுக்கும் இடைப்பட்டது, இது

அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ

சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ

சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும்

தன்மை உடையது. உபாம்சு முறையில்

ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும்

தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம்

ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும்

தெய்வ சக்தி செயற்படும்.இதனால்

ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை

சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர்.

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா முறைகளுமே

சிறந்தவைதான் என்றாலும் ஜெபிப்பவர்களின்

நோக்கம் என்ன என்ற அடிப்படையில் நாம்

அவற்றை தேர்வு செய்ய வேண்டும், உலக

பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர்,

இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்)

முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம்

சிறந்தது. நாடி வருபவர்களூக்கு காரியம்

கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும்,

பொதுப்பூஜை செய்கிறோம் என்றால் வாசிக

ஜெப முறை சிறந்தது. உலக கடமைகளையும்

செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக

முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும்

நன்மையினை பெற்று போகத்தினையும்

யோகத்தினையும் தடையற பெறவேண்டும்

என்றால் உபாம்சு முறை சிறந்தது.

மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன்

தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை

அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு

செயலும் உடலில் நடைபெறாது என்பது

போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம்

சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும்

அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக

பிறகு எழுதுகிறேன்.

ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குர

ிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும்,

உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு,

இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை

ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.

மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம்

எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த

பகுதி ஏழு வகைப்படும்.

1) #நமஹ : ந என்றால் இல்லை என்று பொருள்.

ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது

"நான் இல்லை" என்று பொருள்படும். அதாவது

அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ

சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று

எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில்

நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற

நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன்

ஒன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது

நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம்

ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்ட

தெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவே

ஆகிறது. உதாரணத்திற்கு "ஓம் கணேசாய

நமஹ" என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன

நான்கிலும் மெல்ல மெல்ல பதியத்தொடங்கும்.

2) #ஸ்வாஹ : இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும்

மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி

அக்னியில் சேர்க்கப்படுகிறது,

அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில்

மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை

செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக

இப்படியான முடிவுள்ள மந்திரங்கள்

ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது

ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம்

இருக்க வேண்டும்.

3) #ஸ்வதா : ஸ்வாஹா என்பது பிரபஞ்சத்தில்

சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு

என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில்

உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர

முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற

முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில்

சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு

அந்த தெய்வ சக்தி சேரும்.

4) #வஷட் : தீய சக்தியினை அழிக்கும்

தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.

5) #வௌஷட் :இது எதிர் சக்திகளை குழப்பி

சாதகனிற்கு அமைவாக மாற்றும்.

6) #ஹும் :இது எதிரிகள் மேல் கோபசக்தியினை

உருவாக்கும். 

7) #பட் :சாதகனுக்கு எதிரான சக்தியினை

விரட்டும்.

இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழு

பண்புகள் இருக்கும். அவை 1) அம்மந்திரத்தை

வெளிக்கொணர்ந்த ரிஷி, 2) மந்திரத்தை எப்படி

உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ், 3) அந்த

மந்திரத்தின் தேவதை, 4) அதன் மூல

சக்தியான பீஜம், 5) அதன் சக்தி, 6) இனைக்கும்

பகுதியான கீலகம், 7) நம் உடலின் பகுதிகளை

ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும்

ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான

மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன

ஆகும். சில மந்திரங்கள் நோயைக்

கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை

அடக்கவும், சில பகையை வெல்லவும்

பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை

மானிடர்களின் நலனைக் கருதியே

வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால்

பிற்காலத்தில் மனிதன் தனது சுய

லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும்.

அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க

கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம்

என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும்,

அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி

வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு

செயலாற்றும் தன்மையுடையது. மனதில்

நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற

வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை

எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு

பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக்

கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது

என்றே சொல்லலாம்.

மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா

சக்திகளையும் விட வலிமையானது வேகமும்

அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம்

ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட

விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா

சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த

சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே

மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை

அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது,

ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற

அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும்

அவற்றின் சக்தியுமேயாகும். இந்த

மந்திரங்களை பயன் படுத்தும் கருவியாக

யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த

வழிமுறைகள் தொன்று தொட்டு நமது

தேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திர

சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர்

மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது.

இதனை தவறான வழியில் பயன்

படுத்தாமலும், தீய செயல்களிற்கு

பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே

இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு

கற்றுத் தருவதில்லை.

மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம்

முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக்

கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக்

கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது.

மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது

எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி

அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை

கொண்டு செயலாற்றும் மந்திரங்களை

“வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும்

ஒலியலைகளை மட்டும் கொண்டும்

மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும்.

இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம

சப்தம்” என வழங்குவர்.

பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக

கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு

பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று

தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர

ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக்

கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது

காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய

பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது.

மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள்

உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும்.

மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர்

எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த

ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும்

கொண்டவை.

பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது

அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்;

அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால்

தானாகவே இந்த பொருள் அதிரும் என்று

நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே

மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது நமது அண்டம் (ஆகாயம்)

பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது

விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த

அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம்

மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும்

போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும்

மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு

கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன

நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ

அந்த செயலைச் செய்கிறது.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை

யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த

முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால்,

நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற

முடியும்.

சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின்

வலிமையினால் சகல செயல்களையும் செய்ய

முடியும். அப்படிப்பட்ட செயல்களில்

நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு.

சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை

சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி

தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு

நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல்

மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன.

அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும்

போது எப்படி தீய செயலை செய்கிறதோ

மந்திரங்களும் அதே போல் தீய

செயல்களையும் செய்ய வல்லன.

நெருப்பினைக் கொண்டு தீபத்தினை ஏற்றுவதா

அல்லது வீட்டினைக் கொளுத்துவதா

என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல

மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான்

மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம்

பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய

காரியத்திற்கு பயன்படுத்தினால் அது

தீமையையும் தர வல்லது.

மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2.

மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம்

6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம்

என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.)

செயல்களையும் செய்யலாம்.

அஸ்டகர்மத்தில்

உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள்,

பூசை முறைகள், அமரும் இருக்கை,

பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய

மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்),

யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம்

போன்றன தனித்தனியே அமையும்.

யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது

குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.

இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள

உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த

முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன

ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத்

தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை

வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.

கோயில்களில் இருக்கும் சக்தியானது

மூலவரிற்கு கீழே வைக்கப்படும்

யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த

தகடு யாகங்கள் மூலம் உரு

கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய ப

+சைகள் முறைப்படி செய்யப்படுகின்றன.

இதன் கால அளவு 13 வருடகாலங்கள்.

அதனாற்தான் 13 வருடத்திற்கு ஒரு முறை

கும்பாவிசேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள்

புதிப்பிக்கப்படுகின்றன.

மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை

ஜெபிப்பவனை காக்கும். ஒரு செயலை

நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை

முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று

முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம்

நினைத்தபடி சித்தியாகும். மந்திரம் என்பது

….. அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும்.

தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு

முகமாக தீட்சை பெற்று அதற்குரிய

நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த

தேவதைகள் நேரில் பிரத்தியட்சமாகி மந்திர

ஜெபம் செய்பவற்கு சகல சித்திகளையும்

அருளும். மந்திரங்கள் ஏழு கோடி எனக்

கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம்,

ரஷ~p என பல வகைப்படும். மகா

மந்திரங்களை மந்திரமுணர்ந்த

குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து

கற்றுக் கொள்ள வேண்டும்.அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி,

தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச

பிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி,

திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு

ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு,

ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர

நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம்,

திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம்

மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக

காணலாம்.

ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம்

ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு,

தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும்.

தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை

அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி

செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளை

நாசம் செய்யும். முறைப்படி தெரிந்து

முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல

நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும்

தரும்.

உலகம் தோன்றுவதற்கு ஆதாரமாய் இருந்தவை

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்

பஞ்ச ப+தங்களாகும். ஆகாயத்திலிருந்து

ஒலியும், ஒளியும் தேன்றின.

அண்டமெல்லாம்

வியாபித்திருக்கும் உயிர்க் காற்றினால்

உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்கின்றன.

இந்தக் காற்றே மனித உடலில் தச (பத்து)

வாயுக்களாகி சகல வித தொழிலையும்

செயகின்றன. இந்த தச வாயுக்களின்

அசைவுதான் மனமாகும். மனம் சலனமுள்ளது.

நிலையற்று இயங்குவது. அப்படிப்பட்ட

மனதை அசைவற்று, சலனமற்று இருக்க என்ன

செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடே

மநதிரம் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி ஒரு

நிலைப்படுத்த மந்திரம் மிக மிக சிறப்பான

வழியாகும்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க

வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த

வேண்டா

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த

வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம்

செம்மையாமே (அகத்தியர்)

மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம்

என்பதனை அகத்தியர் இவ்வாறு

வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்ச

பூதங்களையும் கட்டுப்படுத்தும்

மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும்

எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந –ம

– சி – வ – ய என்ற எழுத்துகளாகவும்,

வட்டம்,

ஐங்கோணம், அறுகோணம், சதுரம்,

முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும்

உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில்

அவற்றிற்குரிய இடத்தினைப் பெறும் போது

பஞ்சாட்சர யந்திரம் ஆகிறது உலோகங்கள்

பண்டைய கால கருத்துப்படி இரும்பு, செம்பு,

வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம்,

ஈயம், நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த

உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில்

மந்திர உயிர் எழுத்துக்களை, வடிவங்களை

அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும.

குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட

உலோக தகட்டினயே உபயோகப்படுத்த

வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி

செய்தால்தான் மந்திரம் சரியான முறையில்

வேலை செய்யும்.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை

யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து

முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால்,

நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற

முடியும்.

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும்

ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம்

எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை

வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து,

மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல

எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை.

மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில்,

உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த

மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய

தெய்வத்தில், அல்லது தேவதையில்

நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம்,

சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய

பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.

மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய

விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய

மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை,

வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க

வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில்

அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது.

அதிகாலை 4.00 மணிமுதல் 6.00

மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர

உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத்

தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட

நேரத்தினை தெரிவு செய்து கொள்ள

வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து

அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய

வேண்டும்.

மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக,

2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே

வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில்

மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக

பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு

அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே

உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின்

தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து

கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு

நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு

நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு

நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு.

குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை

அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும்.

மனதிற்குள்ளேயே நாவசையாமல்

உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம்.

16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க

வேண்டும்.மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக

இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக

இருக்கும். பூசை அறையில் நல்ல

நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை

மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக்

கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு வகையான நறுமணம்

பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு

பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக்

கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற

தேவதைகளிற்கு மல்லிகை மணம்

பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை

மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு.

அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு,

தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை

தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி

புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால்

சாம்பிராணி தூபம் உபயோகிப்பது

சிறப்பானது.

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி

திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத

தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு

சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண

நாட்களில் கிரகண வேளையில்

உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக

பலனைத்தரும்.

மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது

சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது.

அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு

செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக்

கொடுத்து விட வாய்ப்புள்ளது....

‘கர்மா கடவுள்’

 படித்ததில் பிடித்தது

நமது ‘கர்மா கடவுள்’ இது.

‘ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது’ என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் ‘அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை’ என்று உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல.

உங்கள் எண்ணங்களையும், சிந்தனை ஓட்டத்தையும் முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்வி. அதை நினைவில் வைத்திருங்கள்!

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். படித்திருக்கலாம். கேட்டிருக்கலாம். அதனால் கவனத்துடன் படிக்கவும்.

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.

எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்

வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்

கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்

பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?

“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!”

ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசால

‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...