திங்கள், 17 மே, 2021

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை  அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு)  மூக்கிரட்டை சாறு கலந்து"  1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். 
நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S. 
கிளினிக்
கறம்பக்குடி 
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

சனி, 15 மே, 2021

மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும்

சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்...

மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை. ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்மவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை. ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும். தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும்.

தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது.

ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ---------மேலும் , இது போன்ற  சட்ட தகவல்களுக்கு  call -  K.K. Palanisaami BA,BL , advocate , Namakkal  9443266789 .

வியாழன், 13 மே, 2021

அரசியல்வாதிகளை அலறவிட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்- யார் இவர்?

அரசியல்வாதிகளை அலறவிட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்- யார் இவர்?

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அவர் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகள் பேசும்பொருளாகின்றன. பாராட்டும் விமர்சனமும் வந்தாலும், குறிப்பிட்ட சிலவற்றில் முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக தெரிகிறது. அவற்றில் மிக முக்கியமானது அதிகாரிகளின் தேர்வு. 

கடந்த ஆட்சிக்காலங்களில் ஓரங்கட்டப்பட்ட மிஸ்டர் கிளீன் அதிகாரிகளை தனது செயலாளர்களாக நியமிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்ற, பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இறையன்பு ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதும் பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்நிலையில் காவல்துறையிலும் அதிரடியான மாற்றங்கள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மாற்றம் என்ன தெரியுமா? லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐபிஎஸ்ஸின் நியமனம் தான். 

பலருக்கும் இதிலென்ன இருக்கிறது என தோன்றலாம். அதற்கான காரணத்தை் உங்களுக்கு கடைசியில் சொல்கிறேன். 

கந்தசாமி – இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். ஏனெனில் அவரின் செய்கை அப்படி. தமிழக பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ஐபிஎஸ், ஆரம்பத்தில் சிபிஐயில் பணியாற்றி வந்தவர். 

இப்போதும் சிபிஐ அதிகாரிகளிடம் கந்தசாமி என பெயர் சொன்னால், மாணிக் பாட்ஷா பெயரைக் கேட்டதும் ஒரு நடுக்கத்தைக் காட்டுவார்களே, அப்படி நடுங்குவார்கள். கந்தசாமியா? அவரா? என புருவங்கள் உயரும். காரணம் அவரது நுண்ணறிவும், வழக்குகளை கையாளும் திறனும் தான். 

முடிக்க முடியாத, விஐபிக்கள் தொடர்பு வழக்குகளை விசாரிக்க எந்த அதிகாரியை போடலாம் என சிபிஐ இயக்குநர்கள் யோசிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் முதல் சாய்ஸ் கந்தசாமியாகத்தான் இருந்தார். 

கந்தசாமி ஐபிஎஸ் ஹிஸ்டரியில் முக்கிய கேஸ் என்றால் அது கேரளாவில் நடந்த ஊழல் வழக்கு. கேரள முதல்வர் பினராயி விஜயனை அக்யூஸ்டாக சேர்த்து அதிரடி காட்டியவர். 

2007- இல் சிபிஐயில் சேர்ந்த கந்தசாமிக்கு வந்து சேர்ந்தது கேரளா லாவ்லின் ஊழல். மின் கட்டுமான திட்டம் தொடர்பாக கனடா நிறுவனத்தோடு உரிய முறையில் ஒப்பந்தம் போடாமல் 375 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது சிஏஜி. 

மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழ சிபிஐக்கு சென்றது அந்த வழக்கு. ஆவணங்களைத் திரட்டி பினராயி விஜயனை விசாரிக்க அனுமதி கேட்டார் கந்தசாமி, கேபினட் மறுத்தது. அதற்குப் பின் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் பல்வேறு தடைகள்.. தாமதங்கள்.. கடைசியில் பினராயி விடுவிக்கப்பட்டார். ஆனால் கந்தசாமி என்ற பெயர் கேரளாவில் நிலைத்தது. 

இதற்கிடையில் வழக்கு நடக்கும் போதே கோட்டயத்தில் மற்றொரு வழக்கு. 1992-இல் பிணமாக கிடந்த 19 வயது கன்னியாஸ்திரி வழக்கை கையில் எடுத்தார் கந்தசாமி. 

எப்போது தெரியுமா ? குற்றம் நடந்து 16 ஆண்டுகள் கழித்து.. இரவு பகல் பாராது உழைத்து பாதிரியார், கன்னியாஸ்திரி என இருவரை கைது செய்து குற்றத்தை நிரூபித்தார். 

”பத்து பேர அடிச்சு டான் ஆகல.. நான் அடிச்ச பத்து பேருமே டான்” என்னும் வசனத்தைப்போல, கைவைத்த இடமெல்லாம் டாப் ஆட்கள் தான். அதற்கான வெறுப்பையும் கூடவே சம்பாதித்து வைத்திருந்தார்.

2010-ஆம் ஆண்டு பதவி உயர்வு கிடைத்து. சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் கந்தசாமி. திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு. 

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பைக்கு மாற்றுகிறோம், சிபிஐயிடம் ஒப்படைக்கிறோம், வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பறந்தது. 

அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அதிகாரிகள் பலரும் இந்த வழக்கு நம்மிடம் வரக்கூடாது என எண்ணிக் கொண்டிருக்க, விசாரணையை கந்தசாமி நடத்துவார் என உத்தரவு வந்தது. 

அடுத்தடுத்து நடந்தது எல்லாம் அதிரடி ரகம்தான். அமித்ஷாவை விசாரணைக்கு வரச்சொன்னார் கந்தசாமி, பாஜகவினர் கொதித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. மீண்டும் சம்மன். விசாரணை சூடுபிடித்தது. 

மீடியாக்கள் கந்தசாமி ஐபிஎஸ் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. அப்போது அடுத்தடுத்து நடந்தது யாரும் எதிர்பார்க்காதது. 

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கந்தசாமிக்கு கிடைத்தது. இன்னும் காத்திருக்க முடியாது, நீதிமன்றம் சென்றார் , வாரண்ட் பெற்றார். அமித்ஷாவை கைது செய்தார். 

சிபிஐ அலுவலகம் கல்வீசப்பட்டது. ஆனால் விடிய விடிய விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார் கந்தசாமி. இந்த சம்பவம் பற்றி பேசிய கந்தசாமியின் ஜூனியர் அமிதாப் தாகூர், சொராபுதீன் என்கவுண்டர் நடந்து எங்களிடம் வழக்கு வந்தபோது 6 ஆண்டுகள் ஆகியிருந்தது. 

என்ன செய்யப் போகிறார் என நாங்கள் தவித்துக்கொண்டிருந்த போது 5 ஆண்டுகளுக்கு முந்தைய சில ஆதாரங்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்து அமித்ஷாவை அரெஸ்ட் பண்ணாரு” என சொன்னார். 

ஆனால் திடீரென கந்தசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஓய்வுக்கு அனுப்பப்பட்டார். நலமானதும் மீண்டும் விசாரணையை தொடங்குவார் என சொன்னது சிபிஐ. அதன் பின்னர் அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது சிபிஐ. ஏன் என கேட்டால் அதுதான் உத்தரவு என்றார்கள். இப்போது வரையிலும் அது மர்மம் தான்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமியை நியமித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கந்தசாமியின் ஏரியா ஃபைனான்ஷியல் கிரைம். அதாவது பணம் சார்ந்த குற்றங்களை டீல் செய்வது தான். 

தேர்தலுக்கு முன்பு ஆளுநரை சந்தித்த திமுக ஒரு ஊழல் பட்டியலை கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தூசு தட்டப்படும் அந்த பட்டியலில் ஆரம்ப விசாரணைக்கு நீதிமன்றம் ஓகே சொல்லியிருக்கிறது. அவை அனைத்துமே கந்தசாமியின் ஃபேவரைட்டான ஃபினான்சியல் கிரைம் வகைகள் தான். 

முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கம்போல தனது நுண்ணறிவை தூண்டி விட்டிருக்கிறார் கந்தசாமி. மாட்டப் போகும் நபர்கள் யார் என்பது விரைவில் தெரியும்.

- ஜெயம்முரசு

*"அதென்ன! அசுவமேத யாகம் ?…"*

*"அதென்ன! அசுவமேத யாகம் ?…"*

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை  கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்கு தான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது. அசுவ மேதயாக ஸ்லோகமே அப்படித் தான் இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”

எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி  ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்து விடுவார்கள். இது தான் அஸ்வமேத யாகம்.

மக்களைப் போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திரயாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்களாம்.

இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கே போய் யாகம் நடத்தியவரிடம் (பிராமணர்களிடம்) கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று கூற... புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம்  எங்கே போகிறது என்ற புத்தகத்திலிருந்து...

புதன், 12 மே, 2021

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல..

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல..☝️🙏☝️

காலங்காத்தால...ஒருபொம்பளப்புள்ள
இப்படியா தூங்குறது...
எந்திரிச்சு வாசப்பெருக்கி தெளித்து
கோலம்போடுடி ...மூதேவி வந்து
அண்டிரப்போகுது என விரட்டிய
அப்பத்தாளிடம் இருந்தது...
ஆன்மீகமோ மூடநம்பிக்கையே இல்லை

காலைக்காற்றும் குனிந்து நிமிர்தலும்
வளரும் பெண்பிள்ளையின் 
கருப்பைக்கு நல்லது என்ற அறிவியல்..

அடியேய் தலவாசல்ல..
வாளில தண்ணிவை என்றதும்

ஏம்ப்பு இது என்ன பழக்கம்
காடுமேடலாம் சுத்திட்டு
கைகாலு கழுவாம அப்டியே
வீட்டுக்குள்ள வர்றது...
சனியன வீட்டுக்குள்ள கூப்புடவா 
என்ற பாட்டியின் திட்டில்
இருந்தது மூடநம்பிக்கை இல்லை

கிருமிகளை அழித்துவிடும் அறிவியல்
இன்று கொரனா வந்து ஞாபகப்படுத்தி இருக்கிறது...

 ஆத்தி என்னதிது..
தீட்டானவ ஊட்டுக்குள்ள பொழங்குறது
சாமிகுத்தமாயிடாது...
என பய முறுத்திய அம்மாச்சியிடம்
இருந்தது ஆன்மீகமல்ல..

கிருமித்தொற்றும் கெட்டவாடையும்
பரவிவிடக்கூடாது என்ற அக்கறையும்
உடலுக்கு ஓய்வுதேவை என்ற அறிவியலும்...

இந்தா வாயத்திற...விசத்தையா 
தாறாய்ங்க குமட்டிட்டு கிடக்குறவ
என இடித்துக்கொண்டே...
புகட்டப்பட்ட நல்லஎண்ணெய்யிலும்
நாட்டுக்கோழி முட்டையிலும்
உழுந்தகளியிலும்...
இடுப்புப்பகுதிக்கு தேவையான
அனைத்து அறிவியலும் இருந்தது..

என்னத்தா வயித்துப்புள்ளக்காரி..
எப்பப்பாரு முடங்கியேவா கிடக்கிறது என கனிவாகவும்...

இந்தா உன் புள்ளைக்கு ஒன்னும் வலிச்சிராது ..குனிஞ்சு நிமிந்து
கனமில்லாத...
வேலையப்பாரு என்ற அதட்டலில்..
சிசேரியன் தேவையின்றி இருந்தது..

ஏன்டி சின்னச்சிறுக்கி..
இந்த சீரகத்தண்ணிய கடக் கடக்னு
முழுங்கிடு...
என்னடி ஆத்தா இப்டி ஆயாவ
கண்டு வெட்கப்படுறவ பாவடைய தளத்து என அடிவயிற்றில்
தேய்க்கப்படும் விளக்கெண்ணெயில்..
சூட்டு வலியும் பிரசவலியும்
பிரித்து ஆராயப்பட்டது...

இந்தாத்தா...வயிறுவலிக்கத்தான் 
செய்யும் பச்சஉடம்பும்புல..
ஆனாலும் என் ராசாத்தி
பாவடைய இறுக்கிகட்டுடி
என வந்த அக்கறையில்..
கர்ப்பப்பையில் காற்று ஏறுவது
தடுக்கப்பட்ட அறிவியல் இருந்தது..

அட என்னடி இது கூத்து
புள்ளக்கு மல்லாந்துபடுத்து
பால்கொடுக்குறவ
மாடு கூட இப்டி பண்ணாதுஎன்ற
குத்தலில்...
நாசியில் புரையேறிடும் குழந்தைக்கு
என்ற அறிவியல் இருந்தது..

இந்தா எப்பபாரு
வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு.. வேர்க்காது
அவுத்துவிட்டு ராசா கணக்கா நடப்பு
என்ற பாசத்தில்..
விந்தணுவின் வீரியம் காக்கப்பட்டது

ஏய்யா புதுப்பொண்டாட்டியகூட்டிட்டு
கோயிலு குளம்னு நாலு இடம்போயிட்டுவர்றது
என்ற கனிவில்...
கலவியின் ஆயக்கலைகள்அறுபத்திநான்கும்
கோவில் கோபுரத்திலும் சிற்பத்திலும்
இருக்கு கத்துக்கோ என்ற மறைமுக உண்மை இருந்தது...

என்னப்பு மேலுக்கு முடியலயா..
என்னத்தா மசமசனு இருக்கா..
ஏன்டா பேராண்டி ராவலாம் கத்துற
ஏன்டி பேத்தியா எப்ப நீ பேசி
இந்த கிழவிட்ட சண்டைக்கு வர்றது
என விசாரித்தலில்...
அத்தனைக்கும் கைவசம் கைவைத்தியம் பார்க்கப்பட்டது...

என்னப்பு...என்னதான் வேலைனாலும்..
காலைச்சோத்தயா ii வேணாங்கிறது..
இந்தா ரெண்டுவாய் கஞ்சியும் வெங்காயமும் குடி..என்ற மிரட்டலில்
அன்றைய பொழுதுக்கான..
நோய்எதிர்ப்பு சக்தி ஊட்டப்பட்டது

ஏப்பு..வெயில்ல கிடந்துட்டு
காபி தண்ணியவேவா குடிக்கிறது
இந்த ரெண்டு இளநிய குடி 
என்ற பாசத்தில் அறிவியலும்
அம்சமாய் இருந்தது..

தனிக்குடித்தனம் என்று..
வீட்டு பெரிசுகளை தனியாய் விட்டது
முதல் புடித்த சனி...

நாகரீகம் என்ற பெயரில்..
அய்யே  கம்பங்கஞ்சியா என
அலட்டிக்கொண்ட அகராதி..

நாங்கலாம் நவீனமாக்கும்என
குழாய் மாட்டி திருந்த பவுசு

ஹாய் என்ற கைலுக்கலில்
பரவத்தில் பாழாய்ப்போன பாங்கு

அத்தனையும் சேர்த்து..
வருசத்துக்கொரு நோய்க்கு..
கம்பளம் விரித்து காத்துக்கொண்டிருக்கிறோம்..

படித்ததில் பிடித்தது ☝️🙏

சனி, 8 மே, 2021

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது

அன்பிற்குரியவர்களே...

கரோனா தீவிரமாக  இருக்கும் நிலையில் கோவிட்-19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது. மருத்துவன் என்ற முறையில் , நிறைய நோயாளர்களை கவனித்த வகையிலும் சில விளக்கங்கள் தர விரும்புகிறேன்.

1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 

 உண்மை.எதிர் சக்தி நன்றாக உள்ளவர்களுக்கு கொரானா வைரஸ் பாதிப்பதில்லை பாதித்தாலும் இலேசான அறிகுறிகளோடு சென்றுவிடுகிறது.

2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 4-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 

3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 

ஓரளவு உண்மை.

 ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது சிலர் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம்.

4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் இருப்பின் நன்கு ஓய்வு எடுங்க. அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனைபெறவும். சுய சிகிச்சை வேண்டாம்.

5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 

6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 

7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். 
அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் கொரானா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 

முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது.  தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 

9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 
சுய வைத்தியம் செய்து கொள்ளாமல் அருகிலுள்ள மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக் கொள்வதே நன்மை தரும்...

10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 

கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 

11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 

12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 

தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 

13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 

நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 

14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 

Mask அணிவது,
நல்ல ஒரு சக்தி தரக்கூடிய உணவுகள்,
பொது இடங்களில் கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பது, போன்ற பாதுகாப்பு வழிமுறைகளே போதுமானது ...

16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 

அரசு ஆலோசனைப்படி வயது முதிர்ந்தோர் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ணக் கூடாது.

17. *ஹோமியோபதி மருந்துகள் பலன் தருமா?*

கண்டிப்பாக...

 ஹோமியோபதி மருந்துகள் நோய் பரவுவதை தடுப்பதிலும் இதற்கு சிகிச்சை அளிப்பதிலும் மிகச்சிறந்த பலனை கொடுத்து வந்திருக்கின்றன.

அன்புடன் 

மரு.ப.எழில் செல்வன் B.H.M.S.,
மலர் ஹோமியோபதி மருத்துவ மையம்.
நாமக்கல்-கரூர்
📱94432 65902

செவ்வாய், 4 மே, 2021

இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய்வாய்புற்றுநோய்குடல்புற்றுநோய்போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்

தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்        புற்றுநோய்
வாய்புற்றுநோய்
குடல்புற்றுநோய்
போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்

 முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில்உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...
இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்
ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்
நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்
நாம் விரும்பினால் அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம் 
 காலை உணவு மதிய உணவு இலவசமாக வழங்குகிறார்கள் 
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
மருத்துவரின்பெயர்
டாக்டர் சிவானந்தம் BSMS
 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 
நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு செல்லுங்கள்

அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு பஸ்ஸடாப் 
(கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய து*
நோயாளர் பெயர்
ஊர் இவற்றை கீழ்க்கண்ட நம்பரில் வாட்சப்பில் பதிவு செய்து கொள்ளவும் அவர்கள் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தருவார்கள் தினமும் நூற்று கணக்கான போண் வருவதால் போண்பேசுவதை தவிர்க்கறார்கள்
போணில் ஆலோசனை வழங்குவதில்லை 

 

PHONE :
☎ முன்பதிவு வாட்சப் நம்பர் 9385941299
📞6382525456

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... 👈👈👈  # health # தகவல்: காந்தி ஆசிரம முன்னாள் துணை தலைவர் திரு.S.ஆராவமுதன். செல்போன் எண்.9442435626. ஓய்வு. பெங்களூரு .

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...