வியாழன், 20 மே, 2021

கோரோனோவுக்கு சில டிப்ஸ்

நல்லதைப் பகிர்வோம்

கோரோனோவுக்கு சில டிப்ஸ்

முதலில் ct  ஸ்கேன் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள ct cevery score எடுத்து வைத்து கொண்டு.. 10 / 25 இருக்கு 9/25 இருக்கு என எல்லாம் கணக்கு பார்த்து பயப்பட அவசியம் இல்லை.
முக்கியமானது இரண்டே விஷயம் தான் நீங்க ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகனுமா வேணாமா என்பதை தீர்மானிப்பது அதுதான்

1. மூச்சு திணறல் இருக்க கூடாது

2. ஆக்சிஜன் லெவல் 94 கு கீழ் போக கூடாது..

அப்புறம் சின்ன சிம்படம்ஸ் இருந்தாலும் கண்டிப்பா செக் பண்ணி உறுதி பண்ணி கொள்ளுங்க.. 

கோரோனோ வந்தா வருத்த பட இப்ப ஒன்னும் இல்ல அதெல்லாம் முதல் அலைல தான் இப்போ கோரோனோ டேபிள் மேட் மாதிரி எதிர் வீட்ல இருக்கு பக்கத்து வீட்ல இருக்கு கீழ் வீட்ல இருக்கு. கிட்ட தட்ட எல்லார் கதவும் தட்டிட்டு தான் போகும்.

எனவே முதலில் உறுதி பண்ணி கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு வாசனை போகும் டேஸ்ட் போகும். சிலருக்கு போகாது. சிலருக்கு இருமல் இருக்கும் காய்ச்சல் இருக்கும் வயிறு புரட்டும்.சிலருக்கு பண்ணாது ஆனா பிறருக்கு அவரால் பரப்ப முடியும்.
எனவே உறுதி பண்ணி கொள்ள வேண்டியது முக்கியம்.

எனவே கோரோனோ பாசிட்டிவ் என தெரிந்ததும் நீங்க செய்ய வேண்டியது 700 ரூபாயுக்கு ஆக்சிமீட்டர் சொந்தமா வாங்கி கொள்ளுங்கள் 250 அல்லது 150 ரூ கு ஒரு தெர்மோ மீட்டர் வாங்கிகொங்க தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும்.

94கு கீழ் ஆக்சிஜன் லெவல் சென்றால் அல்லது மூச்சு திணறல் இருந்தால் மட்டும் உடனே ஹாஸ்ப்பிட்டல் செல்ல வேண்டும் அது அப்நார்மல்.
அடிக்கடி ஜுரம் வருவது.. தொடர்ந்து 5 மணி நேரம் ஜுரம் அடிப்பது வயிறு புரட்டுவது.. இருமல் உடல் அயர்ச்சி.. இதெல்லாம் பயப்பட வேண்டாம் . இது இருக்க தான் செய்யும் இது நார்மல்.

🔘பண்ண வேண்டிய folowups :

1.காலை மாலை இருவேளை வெது வெதுப்பான நீரில் உப்பு மஞ்சள் போட்டு வாயை காக்ளிங் பண்ண வேண்டும்.

2. கொதிக்க வைத்த நீரில் வேப்பிலை மஞ்சள் உப்பு துளசி போட்டு போர்வை போர்த்தி நாக்கை நீட்டி வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சு இழுத்து ஆவி பிடிக்க வேண்டும்.
70 டிகிரி வெப்பத்தில் கிருமி இறந்து போகும் என்பதால் ஆவி பிடித்தல் முக்கியம்.

3. நெல்லி காய் சூரணம் கிடைத்தால் ஒரு கிளாஸ் நீரில் காலை மாலை குடிக்க வேண்டும்.

4. காலை வெய்யில் மாலை வெய்யிலில் அரை மணிநேரம் அமருங்கள்.

🔘 தினம் குடிக்க வேண்டியவை : 

1. காலை மாலை இருவேளை கபசுர நீர் குடிக்க வேண்டும்

2. காலை மாலை இருவேளை மூலிகை டீ குடிக்க வேண்டும் அதாவது இஞ்சி மஞ்சள் துளசி மிளகு போட்டு எலுமிச்சை பிழிந்த டீ.

3. புளிப்பு சுவை கோரோனோக்கு எதிரி எனவே ஆரஞ்சு சாத்துகுடி மற்றும் அண்ணாச்சி ஜூஸ் குடிக்க வேண்டும். 

4. நிறைய நீர் குடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம் எனவே ORS வாங்கி கலக்கி வைத்து கொண்டு வேண்டிய போது குடித்து கொண்டே இருக்க வேண்டும்.

🔘எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரைகள்

1) 6 மணி நேரத்துக்கு ஒரு முறை paracetamol 650 mg எடுத்தே ஆகணும். ஜுரம் இருப்பின் 4 மணிநேரத்துக்கு ஒரு முறை.

2) மல்டி வைட்டமின் டேப்லட் மற்றும் ஜிங்க் டேப்லட் காலை மாலை எடுத்து கொள்ள வேண்டும்.

3) ஆண்ட்டி பயடிக் கோரோனோவை கட்டு படுத்துவதில்லை ஆனால் கோரோனோவில் வரும் வேறு சில பாதிப்பை கட்டு படுத்தும் எனவே அதையும் எடுத்து கொள்ள வேண்டும்.

🔘உணவு 

1. நார்மலா நீங்க என்ன சாப்பிடுவீங்களோ அதை அனைத்தையும் சாப்பிடலாம்.

ஜிங்க் அதிகம் கொண்ட மற்றும் வைட்டமின் c அதிகம் கொண்ட உணவு வகை மற்றும் காய் கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சப்பாத்தி சாப்பிடலாம் இட்லி தோசை வெங்காய சட்னி.. மற்றும் சாதாரணமாக நீங்கள் உண்ணும் உணவு உண்ணலாம்.

குறிப்பாக நிறைய நீர் அருந்தவேண்டியது முக்கியம்.

அவ்வளவு தான் இதை செய்து வந்தால் போதும் வீட்டில் இருந்த படி 14 நாளில் முற்றிலும் குணம் ஆகிவிடும்.

சரியாயிடிச்சின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது. 

அறிகுறி இல்லாதவர்களுக்கு 14 நாள் டைம்.
அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஜுரம் வரலை என்றால் குணம் ஆகி விட்டது என்று அர்த்தம்...

 உறுதி பண்ணி கொள்ள இன்னொரு டெஸ்ட் எடுத்து கொள்ளுங்க அவ்வளவு தான்..

கோரோனோ எளிதில் வெல்ல கூடிய எதிரி தான்...படித்தேன் பகிர்கிறேன்

செவ்வாய், 18 மே, 2021

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண் !

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண் !
முகஸ்டாலின் – தமிழ்நாடு முதலமைச்சர் –
துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர் – 94445 29999
கே . என் . நேரு – நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் – 98424 66666
இ . பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் – 95853 66666
க . பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் – 94438 59983
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர் – 99444 69091
எம் . ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் – 94433 71590
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் – 98424 45899
தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர் – 97891 18449
எஸ் . இரகுபதி – சட்டத் துறை அமைச்சர் – 9943136888
சு.முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர் – 98410 17999
கே.ஆர் . பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் – 94433 68479
தா . மோ . அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை அமைச்சர் – 94440 70354
மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர் – 94449 66678
பி . கீதா ஜீவன் – சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – 94422 45210
அனிதா ஆர் . ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் – 98429 05111
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர் – 94440 81146
கா.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர் – 94435 66666
அர . சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – 94422 07777
வி. செந்தில்பாலாஜி – மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் – 94422 53345
ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – 94432 22770
மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – 91767 00000
பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – 9842122446
எஸ்.எஸ் . சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – 94431 42600
கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை அமைச்சர் – 98410 40026
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை – 94423 27251
சா.மு. நாசர் – பால்வளத்துறை அமைச்சர் – 98406 56565
செஞ்சி கோஸ்மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் | நலத்துறை அமைச்சர் – 94430 73085
அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – 97157 02222
சிவ . வி . மெய்யநாதன் – சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 98426 25119
சி.வி.கணேசன் அவர்கள் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 94434 45168
த . மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் – 94434 50150
மா . மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர் – 90037 95707
என் . கயன்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் – 94877 94952.....!!!!!

அதிகமாக ஷேர் செய்யவும் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்...

திங்கள், 17 மே, 2021

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை  அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு)  மூக்கிரட்டை சாறு கலந்து"  1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். 
நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S. 
கிளினிக்
கறம்பக்குடி 
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

சனி, 15 மே, 2021

மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும்

சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்...

மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை. ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்மவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை. ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும். தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும்.

தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது.

ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ---------மேலும் , இது போன்ற  சட்ட தகவல்களுக்கு  call -  K.K. Palanisaami BA,BL , advocate , Namakkal  9443266789 .

வியாழன், 13 மே, 2021

அரசியல்வாதிகளை அலறவிட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்- யார் இவர்?

அரசியல்வாதிகளை அலறவிட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்- யார் இவர்?

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அவர் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகள் பேசும்பொருளாகின்றன. பாராட்டும் விமர்சனமும் வந்தாலும், குறிப்பிட்ட சிலவற்றில் முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக தெரிகிறது. அவற்றில் மிக முக்கியமானது அதிகாரிகளின் தேர்வு. 

கடந்த ஆட்சிக்காலங்களில் ஓரங்கட்டப்பட்ட மிஸ்டர் கிளீன் அதிகாரிகளை தனது செயலாளர்களாக நியமிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்ற, பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இறையன்பு ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதும் பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்நிலையில் காவல்துறையிலும் அதிரடியான மாற்றங்கள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மாற்றம் என்ன தெரியுமா? லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐபிஎஸ்ஸின் நியமனம் தான். 

பலருக்கும் இதிலென்ன இருக்கிறது என தோன்றலாம். அதற்கான காரணத்தை் உங்களுக்கு கடைசியில் சொல்கிறேன். 

கந்தசாமி – இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். ஏனெனில் அவரின் செய்கை அப்படி. தமிழக பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ஐபிஎஸ், ஆரம்பத்தில் சிபிஐயில் பணியாற்றி வந்தவர். 

இப்போதும் சிபிஐ அதிகாரிகளிடம் கந்தசாமி என பெயர் சொன்னால், மாணிக் பாட்ஷா பெயரைக் கேட்டதும் ஒரு நடுக்கத்தைக் காட்டுவார்களே, அப்படி நடுங்குவார்கள். கந்தசாமியா? அவரா? என புருவங்கள் உயரும். காரணம் அவரது நுண்ணறிவும், வழக்குகளை கையாளும் திறனும் தான். 

முடிக்க முடியாத, விஐபிக்கள் தொடர்பு வழக்குகளை விசாரிக்க எந்த அதிகாரியை போடலாம் என சிபிஐ இயக்குநர்கள் யோசிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் முதல் சாய்ஸ் கந்தசாமியாகத்தான் இருந்தார். 

கந்தசாமி ஐபிஎஸ் ஹிஸ்டரியில் முக்கிய கேஸ் என்றால் அது கேரளாவில் நடந்த ஊழல் வழக்கு. கேரள முதல்வர் பினராயி விஜயனை அக்யூஸ்டாக சேர்த்து அதிரடி காட்டியவர். 

2007- இல் சிபிஐயில் சேர்ந்த கந்தசாமிக்கு வந்து சேர்ந்தது கேரளா லாவ்லின் ஊழல். மின் கட்டுமான திட்டம் தொடர்பாக கனடா நிறுவனத்தோடு உரிய முறையில் ஒப்பந்தம் போடாமல் 375 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது சிஏஜி. 

மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழ சிபிஐக்கு சென்றது அந்த வழக்கு. ஆவணங்களைத் திரட்டி பினராயி விஜயனை விசாரிக்க அனுமதி கேட்டார் கந்தசாமி, கேபினட் மறுத்தது. அதற்குப் பின் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் பல்வேறு தடைகள்.. தாமதங்கள்.. கடைசியில் பினராயி விடுவிக்கப்பட்டார். ஆனால் கந்தசாமி என்ற பெயர் கேரளாவில் நிலைத்தது. 

இதற்கிடையில் வழக்கு நடக்கும் போதே கோட்டயத்தில் மற்றொரு வழக்கு. 1992-இல் பிணமாக கிடந்த 19 வயது கன்னியாஸ்திரி வழக்கை கையில் எடுத்தார் கந்தசாமி. 

எப்போது தெரியுமா ? குற்றம் நடந்து 16 ஆண்டுகள் கழித்து.. இரவு பகல் பாராது உழைத்து பாதிரியார், கன்னியாஸ்திரி என இருவரை கைது செய்து குற்றத்தை நிரூபித்தார். 

”பத்து பேர அடிச்சு டான் ஆகல.. நான் அடிச்ச பத்து பேருமே டான்” என்னும் வசனத்தைப்போல, கைவைத்த இடமெல்லாம் டாப் ஆட்கள் தான். அதற்கான வெறுப்பையும் கூடவே சம்பாதித்து வைத்திருந்தார்.

2010-ஆம் ஆண்டு பதவி உயர்வு கிடைத்து. சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் கந்தசாமி. திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு. 

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பைக்கு மாற்றுகிறோம், சிபிஐயிடம் ஒப்படைக்கிறோம், வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பறந்தது. 

அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அதிகாரிகள் பலரும் இந்த வழக்கு நம்மிடம் வரக்கூடாது என எண்ணிக் கொண்டிருக்க, விசாரணையை கந்தசாமி நடத்துவார் என உத்தரவு வந்தது. 

அடுத்தடுத்து நடந்தது எல்லாம் அதிரடி ரகம்தான். அமித்ஷாவை விசாரணைக்கு வரச்சொன்னார் கந்தசாமி, பாஜகவினர் கொதித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. மீண்டும் சம்மன். விசாரணை சூடுபிடித்தது. 

மீடியாக்கள் கந்தசாமி ஐபிஎஸ் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. அப்போது அடுத்தடுத்து நடந்தது யாரும் எதிர்பார்க்காதது. 

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கந்தசாமிக்கு கிடைத்தது. இன்னும் காத்திருக்க முடியாது, நீதிமன்றம் சென்றார் , வாரண்ட் பெற்றார். அமித்ஷாவை கைது செய்தார். 

சிபிஐ அலுவலகம் கல்வீசப்பட்டது. ஆனால் விடிய விடிய விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார் கந்தசாமி. இந்த சம்பவம் பற்றி பேசிய கந்தசாமியின் ஜூனியர் அமிதாப் தாகூர், சொராபுதீன் என்கவுண்டர் நடந்து எங்களிடம் வழக்கு வந்தபோது 6 ஆண்டுகள் ஆகியிருந்தது. 

என்ன செய்யப் போகிறார் என நாங்கள் தவித்துக்கொண்டிருந்த போது 5 ஆண்டுகளுக்கு முந்தைய சில ஆதாரங்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்து அமித்ஷாவை அரெஸ்ட் பண்ணாரு” என சொன்னார். 

ஆனால் திடீரென கந்தசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஓய்வுக்கு அனுப்பப்பட்டார். நலமானதும் மீண்டும் விசாரணையை தொடங்குவார் என சொன்னது சிபிஐ. அதன் பின்னர் அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது சிபிஐ. ஏன் என கேட்டால் அதுதான் உத்தரவு என்றார்கள். இப்போது வரையிலும் அது மர்மம் தான்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமியை நியமித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கந்தசாமியின் ஏரியா ஃபைனான்ஷியல் கிரைம். அதாவது பணம் சார்ந்த குற்றங்களை டீல் செய்வது தான். 

தேர்தலுக்கு முன்பு ஆளுநரை சந்தித்த திமுக ஒரு ஊழல் பட்டியலை கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தூசு தட்டப்படும் அந்த பட்டியலில் ஆரம்ப விசாரணைக்கு நீதிமன்றம் ஓகே சொல்லியிருக்கிறது. அவை அனைத்துமே கந்தசாமியின் ஃபேவரைட்டான ஃபினான்சியல் கிரைம் வகைகள் தான். 

முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கம்போல தனது நுண்ணறிவை தூண்டி விட்டிருக்கிறார் கந்தசாமி. மாட்டப் போகும் நபர்கள் யார் என்பது விரைவில் தெரியும்.

- ஜெயம்முரசு

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...