செவ்வாய், 15 ஜூன், 2021

பஞ்சபட்சி சாஸ்திரம் விதியை மாற்றும் தந்திரம்

பஞ்சபட்சி சாஸ்திரம் விதியை மாற்றும் தந்திரம்
விதியை மாற்றும் தந்திரம் 

 பஞ்சபட்சியில் தன்னுடைய பட்சி எதுவென அறிந்து - அந்த பட்சியின் மூலிகையை பஞ்சபட்சி முறைப்படி பூஜை செய்து எடுத்து ( அரசு வேளையில் எடுக்கலாம் ) ஊண் வேளையில் தாய்த்தாக்கி கொடுக்கலாம் . பஞ்சலோக தாயத்து நலம் பயக்கும் . இது மிகவும் அற்புதமான தாந்திரீக பரிகாரமாகும் . நன்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ! அனுபவம் பெற்றவர்கள் பட்சிகளின் சூட்சுமத்தில் எடுத்து - அணிந்து கொள்ள வாழ்வில் எதிலும் வெற்றிதான் , தொட்டுதெல்லாம் பொன்னாகும் ஆயுள் முழுவதும் நற்பலனைத் தரும் , 

அனுபவமுறை 

பஞ்சபட்சியில் தங்கள் பட்சிக்குரிய பட்சிகளின் சிறகுகளை அரசு நேரத்தில் தாயத்து செய்து அணிய சர்வ வெற்றியாகும். எதிரி இல்லை.   

இதுப்போல பல அறிய பிரசன்னம் ரகசியங்களை உள்ளடக்கிய கலை சக்கரா சாஸ்திரம். விரைவில் அனைவரும் அறிய கற்று தருகிறேன். 

கையாலும் முறைதான். 

பஞ்ச பட்சி 

மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.

மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.

எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.

கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.

கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?

பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.

அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.

கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக   இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.

கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.

இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்     

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.

அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். 

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே 

பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே 

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே 

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். 

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். 

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.....
.

பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டு 

                    ஒரு சிறிய விளக்கம் 

பஞ்ச பட்சி சாஸ்திரம்

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. 

      பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே 

வல்லூறு 

ஆந்தை

காகம்

கோழி

மயில் 

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-

வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்     
         
ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்    
              
காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்    
                           
கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்     
                        
மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி

 இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை

அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை

அ, ஆ - கோழி 

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள் 

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன் 

மயில் -வியாழன் 

தேய்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன் 

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி 

மயில் -வெள்ளி 

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி 

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்
2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7)   போட்டிகளில் வெற்றியடைதல்
 எதிரிகளை வெல்லுதல்
9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!

நன்றி குருமுனி

சிறியாநங்கை கசாயம் சர்க்கரை காய்ச்சல் பித்த நோய்கள் சரியாகும்

சிறியாநங்கை கசாயம் சர்க்கரை காய்ச்சல் பித்த நோய்கள் சரியாகும்
#சிறியாநங்கை கசாயம்
காய்ச்சல் பல வகைகளில் ஏற்படுகின்றது.

#வைரஸ் காய்ச்சல்  #பாக்டிரியா காரணமாக காய்ச்சல் தொற்று காரணமாக காய்ச்சல்  ஒவ்வாமை காரணமாகக் காய்ச்சல் என  பல  வகைகளில் காய்ச்சல் நம்மைப் பாதிக்கின்றது.

சில வகை காய்ச்சல்கள் உடலை விட்டுப் போகும்போது வெறும் அசதியை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறது.
சில வகை காய்ச்சல்கள்  நீங்காத மூட்டு வலி வேதனை உறுப்புகளின் செயல் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்திவிட்டுப் போகிறது
இன்னும் சில வகை காய்ச்சல்கள்  நிரந்தரமான ஊனங்களைக் கூட ஏற்படுத்தி விடுகிறது.
எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் உடலுடைய ஆரோக்கியத்தையும் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து உடலுடைய ஆரோக்கியத்தை  மேம்படுத்தக் கூடிய கசாயம் இது

சிறியாநங்கை ................ இரண்டு கிராம்
சுக்கு ................ இரண்டு கிராம்
திப்பிலி ................ இரண்டு கிராம்
சீந்தில் தண்டு ................ இரண்டு கிராம்

ஆகிய நான்கு  பொருட்களையும்
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு ,
சிறு தீயில் கொதிக்க வைத்து நன்கு காய்ச்சி,
நூறு மில்லி கசாயமாக சுருக்கி ,
இறக்கி வடிகட்டி,
ஒரு வேளை மருந்தாக,
வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் போட்டு குடித்து வர வேண்டும்.

காய்ச்சலைக் குணப்படுத்த மட்டுமல்ல
கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையைக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வர
செரிமானமின்மை, பசி இன்மை, நெஞ்சு எரிச்சல் ,வயிறு எரிச்சல், வாய் புண், குடல் புண், போன்ற பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் .

காய்ச்சலுக்குப் பின் மூட்டுக்களில் ஏற்படும் வலியும் வேதனையும் குறிப்பாக #சிக்குன்குனியா காய்ச்சலில் குணமானபின் வரும் முடக்குவாதம் போலவே வலிகளும், வீக்கங்களும் பரவி உடலின் இயக்கங்களைக் குறைத்து விடுகிறது.

இது தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் ,குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் உதவிக்கு வருவது இந்தக் கசாயம்.

எவ்வளவோ முயற்சி செய்தும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை
சர்க்கரையின் அளவு குறையவில்லை
சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையவில்லை.
சிறுநீரின் மூலம் புரதசத்து வெளியேறுதல்
என்ற பிரச்சினைகளைக் குறைப்பதற்கு
வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் கூட இந்த கசாயத்தை மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி வர நல்ல பலனைக் காண முடியும்.

உடலின் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் காண முடியும்.
#சர்க்கரை நோயின் பாதிப்புக்களான உடல் சோர்வு
உடல்  எரிச்சல்
குறிப்பாக  பாதங்களில் கைகளில் கால்களில் நிறைய எரிச்சல்
சிறுநீர் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு
கைகளில் கால்களில் வீக்கம் ஏற்படுவது,
போன்ற பாதிப்புக்களை குறைக்கக் கூடிய அழகான அருமருந்து இது
பசி இன்மை, செரிமானமின்மை, அதன் காரனாமக உடல் அசதி, சோர்வு, தூக்கமின்மை, கோபம், போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட
கை கொடுக்கும் கசாயம் இது.

#பித்தநோய்களுக்கு இது  மிகப் பெரிய மருந்து.

தோலில் ஏற்படும் அரிப்பு விஷக்கடி காணாக்கடி அத்திக்கேரியா அலர்ஜி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஆகியவற்றைக் குறைக்கக் கூடிய
உடம்பில் இருக்கக் கூடிய #ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய அழகான அரு மருந்து இது .

#தலைமுடி கருமையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப் படுகின்றனர்.
பித்தத்தினால் ஏற்படும் #இளநரையை போக்க வேண்டும், இருக்கக் கூடிய தலை முடியாவது ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,
இந்த கசாயத்தை பயன்படுத்தி படிப்படியாக நல்ல மாற்றங்களையும் ஆரோக்கியத்தையும் பெற முடியும்,
உடலில் ஏற்படும் எல்லா வகைக் காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து இது.

உடல் சோர்வு, உடலுடைய பலவீனம் ,பித்தத்தால் ஏற்படும் தொந்தரவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு
இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகை  தேநீராகப் பயன்படுத்தி உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமுடன் வாழ முடியும்.

நன்றி ; தங்கராஜ்.

பஞ்சகல்ப குளியல் சூரணம்

பஞ்சகல்ப  குளியல் சூரணம்:

       இந்த பஞ்சகல்பம் சித்தர்களால் புகழப்பட்டது.

இதை உபயோகித்தால் முடி தும்பி போலாகும்.கண்கள் ஒளி பெறும். பகலில் கூட நட்சத்திரம் காணலாமென்று சித்தர்கள் புகழ்ந்துள்ளனர்.இதை உபயோகித்து சரும வியாதிகளும் குணமானதுண்டு.மேக வியாதிகள் குணமாகுமென்று சித்தர்கள் சொல்கின்றனர்.

     இந்த பஞ்ச கல்பம் சிறப்பாக #பீனிசம் எனப்படும் சைனஸ் வியாதியை முற்றிலும் குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

      மேலும் இது தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல்,தலைமுடி கொட்டுவது, இளநரை, தலையில் வரும் புற்று, தலைமூளை நோய்கள், கண் நோய்கள், காது சீழ், காது இரைச்சல், காது மந்தம், மூக்கு நீர் வடிதல், மூக்கு சதை வளர்ச்சி, தொண்டை சதை வளர்ச்சி, மார்புச்சளி போன்ற எண்ணற்ற நோய்களை ஓட ஓட விரட்டும் ஓர் அருமருந்து இந்த கல்பம் ஆகும்.

மருந்து செய்முறை:

"பூநெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே- மானங்கேள்
ஒன்றரை யொன்றேகால் ஒன்று றுதிமுக்கால்
கன்றரைக் கையான் நீறிற் றேய்"

1.நெல்லிக்காய்              - 300கிராம் 
2.வெள்ளை மிளகு.        -250 ,,
3.கடுக்காய்.                       -200 ,,
4.கஸ்தூரி மஞ்சள்.        - 150 ,,
5.வேப்பமுத்து.                 - 100 ,, 

    இந்த அளவுப் படி எடுத்து அரைத்து சூரணித்து நன்கு கலந்து வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:

       இந்த பஞ்ச கல்ப சூரணத்தை தேவையான அளவு எடுத்து கரிசாலைச் சாறில் கரைத்து அல்லது பால் விட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்து அரைமணி நேரம் வைத்திருந்து பின் வெந்நீரில் குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது நிச்சயம்.

கிரகப்பிரவேசம் செய்யும் முறை

கிரகப்பிரவேசம் செய்யும் முறையும் நாள் நட்சத்திரம் போன்ற தகவல்களும்
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:..!!!
---------------------------------------------------------------

வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு
கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.

வீடு கிரகப்பிரவேசம் - சிறந்த மாதம் எது?
------------------------------------------------------------------------

சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது இயல்பு.

அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா?

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?

•• சித்திரை
•• வைகாசி
•• ஆவணி
•• ஐப்பசி
•• கார்த்திகை
•• தை

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது?

•• திங்கட்கிழமை
•• புதன் கிழமை
•• வியாழன் கிழமை
•• வெள்ளிக் கிழமை

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது?

அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?

•• ரிஷபம்
•• மிதுனம்
•• கன்னி
•• விருச்சகம்
•• கும்பம்

எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்?

ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.

ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் இராவணன் தனது கோட்டையை இழந்தார்.

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தன்து ராஜ்ஜியத்தை இழந்தார்.

மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்க முற்றார்.

பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை எரித்த மாதமாகும்.

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கிரகப்பிரவேசம் செய்யும் முறை :-
----------------------------------------------------------

 பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.

தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடையூறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும்
கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.

நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.

வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு
கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு,
பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.

கோபூஜை:-
------------------

பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து,
துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.

கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது. பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில்
காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்- மனைவி மாலை அணிந்து அமர்க.

முதலில் விநாயகர் பூஜை:-
----------------------------------------------

வானுலகும் மண்ணுலகும் வாழ மறை
வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை
விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி
நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி
செய்கிற்பாம் 
     - விநாயகரை வணங்கிய உடன்,

விச்சின்ன அக்னி சந்தானம்
       - என்ற விதிப்படி
ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.

கலச பூஜை:-
----------------------

மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம். மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர்போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.

கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம்.அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இட வேண்டும்.

யாக வழிபாடு:- 
--------------------------

இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார். நெய்,
நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.

ஓம் கம் கணபதியே நம. சுவாகா 
ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.

என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய
மந்திரங்களால்
ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா
- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம். 

லட்சுமி ஹோமம்-வெட்டிவேர்,
வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும்,

ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், 

ஓம் உனபதுமாம் கீர்திச்ச
மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு,
          அக்னி பூஜை நடத்தி வாஸ்து
பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.

சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி
பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல்
தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.

பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம்.

அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் "ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே
அஸ்மின் சின்னிதிம் குரு" என்று கூறி
தெளிக்க வேண்டும்.

பால் காய்ச்சுதல்:-
-------------------------------

ஒன்பது செங்கற்கள் அல்லது 4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின்
முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

கலசதாரை வார்த்தல்:-
----------------------------------------

மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு
கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும்
இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள்.
பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச
நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய
மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.

அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம்
செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க
வேண்டும்.

பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர்
வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும். கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.

சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.

கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம்.
அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமணி மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்.

மரங்களின் பெயர்கள் அவைகளின் தாவரவியல் பெயர்கள்.

மரங்களின் பெயர்கள் அவைகளின் தாவரவியல் பெயர்கள்.
#மரங்களின்_வகைகள்..!!!!!
(தாவரவியல் பெயர்களோடுடைய பட்டியல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#விழிப்புணர்வுபதிவு....

நம் #சித்தர்கள் பல மரங்களின் இலைதழைகள் மற்றும் மர பட்டைகள் மற்றும் வேர்களை பாரம்பரிய #மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

அக்கரோட்டு - (Juglans regia)
அகத்தி - (Sesbania grandiflora)
அத்தி - (Ficus glomerata)
அரசு - (Ficus religiosa)
அருநெல்லி - (Garuga pinnata)
அழிஞ்சில் - (Alangium lamarckii)
ஆசாரிப்புளி - (Antidesma diandrum)
ஆத்தி - (Bauhinia racemosa)
ஆமணக்கு - (Ricinus communis)
ஆயா - (Holoptelea integrifolia)
ஆல் - (Ficus bengalensis)
ஆவிமா - (Careya arborea)
ஆற்றிலுப்பை - (Bassia malabarica)
ஆற்றுப்பாலை - (Salix tetrasperma)
ஆற்றுப்பூவரசு - (Trewia nudiflora)
இச்சி - (Ficus tsiela)
இடலை - (Olea dioica)
இரச்சை - (Zanthoxylum rhetsa)
இரத்தி - (Ficus gibbosa tuberculata)
இராப்பாலை - (Doli chandrone arcuata)
இராமசீத்தா - (Anona reticulata)
இருட்பூ - (Cynometra rami flora)
இருவேல் - (Xylia dolabriformis)
இரேவற்சின்னி - (Garcinia morella)
இலங்கைக் கருங்காலி - (Dios pyros ebenum)
இலம்பிலி - (Eugenia munronii)
இலவு - (Bombax malabaricum)
இலுப்பை -
ஈரப்பலா - (Artocarpus incisa)
உதி - (Dolichandrone falcata)
உதிரவேங்கை - (Pterocarpus marsupium)
உரப்புப்பிசின் - (Hopea odorata)
உருத்திராக்கம் - (Elœocarpus ganitrus)
உலக்கைப்பாலை - (Mimu sops hexandra)
உலங்காரை - (Eloeocarpus serratus)
உறுப்பா - (Hopea decandra)
ஊழலாற்றி -
எட்டி - (Strychnos nux-vomica)
எண்ணெய் மரம் - (Dipterocarpus indicus)
எருமைமுன்னை - (premna latifolia)
எறுழ் -
ஏழிலைப்பாலை - (Alstonia scholaris)
கசங்கம் - (Sterculia foetida)
கடம்பம் - (Anthocephalus cadamba)
கடலிறஞ்சி - (Ximenia russeliana)
கடலை - (Melastoma malabaricum)
கடிச்சை - (Casearia tomentosa)
கண்டலங்காய் மரம் - (Carappa obvata)
கண்ணா - (Heptapleurum racemosum)
கண்ணாடியிலை மரம் - (Heritiera formes)
கபிலப்பொடி மரம் - (Mallotus philippinensis)
கம்பளிப்பிசின் மரம் - (Gardenia lucida)
கர்க்கவம் - (Elaeodendron glaucum)
கர்ப்பூரவில்வம் -
கரிக்கட்டை மரம் - (Diospyros hirsuta)
கருங்காலி - (Diospyros tupru)
கருந்துவரை -
கரும்பாலை - (Mimusops roxburghiana)
கருவா - (Cinnamomum zeylanicum)
கருவாகை - (Albizzia odoratissima)
கருவாலி - (Elæodendron glaucum)
கருவேம்பு - (Garuga pinnata)
கருவேலமரம்|கருவேல மரம்|கருவேல் - (Acacia nilotica)
கரைவிளங்கு - (Heynea trijuga)
கல்லத்தி - (Ficus tomentosa)
கலிக்கிமரம் - (Parkia biglandulosa)
கலிமருது - (Terminalia tomentosa)
கற்பொறுத்தல் - (Xylopia parvifolia)
கறிப்பாலை - (Putranjiva roxburghii)
காக்காய்ப்பாலை - (Gelonium lanceolatum)
காட்டத்தி - (Diospyros embryopteris)
காட்டாஞ்சி - (Gymnosporia emarginata)
காட்டிருப்பை - (Bassia latifolia)
காட்டுக்கருவா மரம் -
காட்டுக்கிளுவை - (Balsamodendron caudatum)
காட்டுக்குமிழ் - (Callicarpa lanata)
காட்டுக்கோங்கு - (Pygeum wightianam)
காட்டுச்சந்தனம் - (Erythroxylon mono gynum)
காட்டுத்துரியன் - (Cullenia excelsa)
காட்டுநொச்சி - (Vitex altissima)
காட்டுப்பச்சிலை - (Dalbergia lanceolaria)
காட்டுப்பிராய் - (Cœlodepas calyci num)
காட்டுப்புன்னை - (Calophyllum tomentosum)
காட்டுப்பூவம் - (Nephelium longana)
காட்டுமஞ்சரி - (Linociera purpurea)
காட்டுமா -
காட்டுமுருங்கை -
காட்டுவாகை - (Albizzia lebbek)
காண்டாமிருகரத்த மரம் - (Pterocarpus marsupium)
காராஞீலி - (Dipterocarpus bourdilloni)
காரைச்செங்காரி - (Canarium commune)
கானமயிலை - (Nephelium stipulaceum)
கித்தார் - (Citharexylon subseratum)
கிழுவை மரம் -
கீரி - (Pemphis acidula)
கீழாநெல்லி - (Phyllanthus polyphyllus)
குடைவேல் - (Acacia planifrons)
கும்பாதிரி - (Schleichera trijuga)
கும்பி - (Careya arborea)
குமி்ழ் மரம்
குரங்குப்பலா - (Artocarpus Lakucha)
குழிநாவல் - (Myrtus communis)
குறிஞ்சி - (Strobilanthes kunthianus)
கூழ்முன்னை - (Premna corymbosa)
கைப்பங்கொட்டை - (Strychnos ignatii)
கையாப்புடை - (Melaleuca leucadendron minor)
கொட்டைநாகம் - (Eugenia jambo lana)
கொட்டையிலந்தை - (Zizy phus xylopyra)
கொடித்தடக்கி
கொடிமாதுளை - (Limoni-medica)
கொடுக்காய்ப்புளி - (Pithecolobium dulce)
கொய்யா - (Psidium guyava)
கொவிள் - (Acacia suma)
கொன்றை -
கோங்கிலவு - (Cochlospermum gossypium)

சடைச்சி - (Grewia tiliaefolia)
சண்பகப்பாலை - (Litsaea zeylanica)
சண்பகம் - (Michelia champaca)
சந்தன மரம் -
சரலங்கா - (Flacourtia cataphracta)
சவ்வு - (Cycas circinalis)
சவண்டலை - (Berrya ammonilla)
சன்னத்துருக்குவேம்பு - (Cipadessa fruticosa)
சாப்பிரா - (Bixa orellana)
சாயல்வாகை - (Albizzia amara-wightii)
சிலந்தி மரம் - (Ochna squarrosa)
சிற்றிலைப்பொலவு - (Pterospermum suberifolium)
சிறுதேக்கு - (Clerodendrum serratum)
சிறுநாவல் - (Eugenia rubicunda)
சிறுநெல்லி - (Phyllanthus distichus)
சின்னமாவிலிங்கை - (Crataeva roxburghii)
சீமை ஆல் - (Ficus elastica)
சீமை கருவேலமரம் - (Prosopis juliflora)
சீமைக்கிழுவை -
சீமைக்கொட்டைக்களா - (Flacourtia inermis)
சீமைத்தேவதாரு - (Pinus longifolia)
சீமைநூக்கு - (Swietenia mahagoni)
சீமைநெல்லி - (Malpighia coccigera)
சீமைப்பிரப்பமரம் - (Schleichera trijuga)
சீமைமகிழ் - (Sideroxylon inerme)
சீமைமாதுளை - (Cydonia vulgaris)
சீமைவேல மரம் - (Acacia decurrens)
சீனப்பூ மரம் - (Lagerstroemia indica)
சீனி மரம் - (Tetrameles nudiflora)
சீனிப்பலா - (Artocarpus incisa)
சுண்டலி மரம் - (Gomphandra axillaris)
சுதலன் மரம் - (Phoebe paniculata)
சுந்தரி மரம் - (Heritiera littoralis)
சுருளி மரம் - (Mesua ferrea)
சுழுந்து மரம் - (Ixora parviflora)
செங்கடம்பு - (Barringtonia acutangula)
செங்கருங்காலி - (Acacia catechu-sundra)
செங்குமிழ் - (Gmelina asiatica)
செங்குறிஞ்சி - (Gluta travancorica)
செஞ்சந்தனம் - (Pterocarpus santalinus)
செம்புளிச்சை - (Hibiscus sabdariffa)
செம்பூவம் - (Nephalium longana)
செம்மயிற்கொன்றை - (Delonix Regia)
செம்மரம் - (Soymida febrifuga)
செம்முருங்கை - (Cassia marginata)
செவ்வகத்தி - (Sesbania grandiflora-coccinea)
சே மரம் - (Semecarpus anacardium)
சேலை மரம் - (Acacia suma)
சொத்தைக்களா - (Flacourtia ramontchisapida)
சொறிலை மரம் - (Mappia oblonga)
சோலைக் கொடுக்காய்ப் புளிய மரம் - (Garcinia spicata)
தகர மரம் - (Tabernae montana)
தம்பனை மரம் - (Mischidon zeylanicus)
தம்புகை - (Shorea tumbaggaia)
தமரத்தை - (Averrhoea carambola)
தலூரம் - (Shorea talura)
தவிட்டுக்கொய்யா - (Rhodomyrtus tomentosa)
தார்மரம் - (Pinus sylvestris)
தாளி மரம் - (Actinodaphne hookeri)
தாளிசபத்திரி - (Cinnamo muminers)
தான்றி - (Terminalia belerica)
திக்காமல்லி - (Gardenia gummifera)
திருக்கோண மரம் - (Berrya ammonilla)
திருவாத்தி - (Bauhinia tomentosa)
தில்லை மரம் - (Excoecaria agallocha)
துப்பாக்கி மரம் - (Guazuma tomentosa)
தும்பி மரம் - (Diospyros tomentosa)
தும்பிலி மரம் - (Diospyros melanoxylon)
துறட்டு மரம் - (Capparis grandis)
தூணா மரம் - (Cedrela toona)
தூர மரம் - (Datura fasciosa)
தெருணை மரம் - (Scolopia crenata)
தேக்கு -
தேவதாரு - (Erythroxylon monogynum)
தேவதாளி - (Lansium anamallaiyanum)
தேற்றா - (Strychnos potatorum)
தொண்டி - (Sterculia guttata)
தோதகத்தி - (Dalbergia latifolia)
நகரை - (Elæocarpus amoonus)
நஞ்சுண்டம் - (Gardenia turgida)
நஞ்சுண்டன் - (Balanites roxburghii)
நஞ்சுண்டை - (Pittospermum floribundum)
நரிவேங்கை - (Oujeinia dalbergioides)
நல்லமந்தனம் - (Canthium umbellatum)
நறளை - (Vitis lanata)
நறும்பிளி - (Podocarpus latifolia)
நறுவிலி -
நாக்குழிஞ்சான் - (Capparis grandis)
நாகசெண்பகம் - (Tecoma stans)
நாகதகனி -
நாகலிங்கம் - (Couroupita guianensis)
நாட்டக்கரோட்டு - (Aleurites triloba)
நாய்விளா - (Limonia acidissima)
நாய்வேம்பு - (Indigofera viscosa)
நாரத்தை - (Citrus aurantium)
நாவல் - (Eugenia jambolana)
நிருடை - (Acacia latronum)
நிலப்பாலை - (Cleistanthus collinus)
நீர்க்கடம்பு - (Stephegyne parvifolia)
நீர்நாங்கல் - (Mesuaferrea speciosa)
நீர்நாவல் - (Eugenia munronii)
நீர்நொச்சி - (Vitex trifolia)
நீர்ப்பருத்தி - (Hibiscus tiliaceus)
நீர்ப்புன்கு - (Pongamia glabra)
நீர்மருது - (Terminalia arjuna)
நீர்மூளி - (Aglaia minutiflora)
நூக்கம் - (Dalbergia sisoo)
நெட்டிலிங்கம் - (Polyalthia longifolia)
நெட்டைநாரத்தை - (Polyalthia cerasoides)
நெடுநாரை - (Polyalthia coffeeoides)
நெடுவாற்கோங்கு - (Hopea racophlæa)
நெய்க்கொட்டை மரம் - (Harpullia cupanoides)
நெய்ச்சிட்டி - (Grewia orbiculata)
நெரியாசிப்பால் மரம் - (Liquidambar orientale)
நெல்லி - (phyllanthus emblica)
நேர்வாளம் - (Croton tiglium)
நொக்கொட்டா - (Eriobotrya japonica)
நொளைதாளி - (Antidesma bunius)
பச்சிலை மரம் - (Garcinia xanthochymus)
பச்சைக்கோரான் - (Lixora notoniana)
பட்டிகை மரம் - (Symplocos recemosa)
பட்டிலுப்பை - (Diospyros sapota)
பட்டைதாளி - (Actinodaphne madraspatana)
பப்பரப்புளி - (Adansonia digitata)
பயரை - (Elaeodendron glaucum)
பலா - (Artocarpus integrifolia)
பலிசமரம் - (Grewia asiatica-domestica)
பவளமல்லிகை - (Nyctanthes arbor-tristis)
பறங்கிச்சக்கை - (Cinchona officionalis)
பறங்கிச்சாம்பிராணி - (Boswellia serrata typica)
பன்றிக்குத்தி - (Ceriops candolleana)
பன்றித்தாளி - (Litsaeac coriacea)
பன்றிமொத்தை - (Trapa bispinosa)
பன்னீர் மரம் - (Guettardā speciosa)
பாதிரி -
மஞ்சட்பூ வகை - (Stereospermum chelonoides)
ஊதாப்பூ வகை - (Stereospermum suaveoleons)வெள்ளைப்பூ வகை - (Stereospermum xylocarpum)
பாலை -
பாலையுடைச்சி - (Oroxy lum indicum)
பிசின்பட்டை மரம் - (Litsaa sebifera)
பிரம்புக்கொன்றை - (Cassia siamea)
பிராய் - (Streblus asper)
பில்லிபிச்சு - (Mappia foetida-oblonga)
பில்லைமருது - (Terminalia paniculata)
பீக்கருவேல் - (Acacia farnesiana)
பீநாறி - (Sterculia foetida)
பீவேல் - (Acacia farnesiana)
புரசு - (Butea frondosa)
புல்லமருது - (Terminalia paniculata)
புலிநகம் - (Martynia diandra)
புளி - (Tamarindus indicus)
புளிச்செவ்வந்தி - (Eriolœna hookeriana)
புளிமா - (Spondias mangifera)
புறங்கைநாறி -
புங்கம் - (Pongamia glabra)
புன்னை - (Calophyllum inophyllum)
பூக்கண்டல் - (Kandelia rheedii)
பூண்தேக்கு - (Klimnoria hospita)
பூத்தாளி - (Givotia rottleriformis)
பூதங்கொல்லி - (Poecilo neuron pauciflorum)
பூந்தேக்கு - (Kleinhovia hospita)
பூம்பாதிரி -
இளஞ்சிவப்புப் பூவகை - (Stereospermum snaneolens)
நீள்வட்ட இலை வகை - (Dolichandrone crispa)
பூமருது - (Terminalia paniculata)
பூலா மரம் - (Bombax malabaricum)
பூவந்தி -
Trijugate-leaved soapnut - (Sapindus tri foliatus)
Four-leaved soap-nut - (Hemigyrosa canescens)
பூவரசு - (Thespesia populnea)
பெரியதகரை - (Leucaena glauca)
பெரியலவங்கப்பட்டை மரம் - (Cinnamonum macrocarpum)
பெரியவாய் மரம் - (Saccopetalum fomentasum)
பெருகளர்வா - (Salvadora oleoides)
பெருங்காய மரம் -
பெருங்காயா - (Edule memecylon)
பெருநறுவிலி - (Cordia obliqua typica)
பெருமரம் - (Ailanthus excels)
பெருமூங்கில் - (Bambusa arundinaca)
பெருவிளா - (Salvadora persica)
பேய்க்கடுக்காய் - (Lagerstroemia parviflora-typica)
பேய்க்கண்டல் - (Rhizophora mucronata)
பேய்க்குருந்து - (Atalantia zeylanica)
பேய்முன்னை - (Trema orientalis)
பேரகத்தி - (Sesbania grandiflora typica)
பேரி - (Pyrus communis)
பேழைமரம் - (Careya arborea)
பொட்டுத்துவரை - (Diospyros insignis)
பொன்பாதிரி - (Sterospermum chelonoides)
பொன்னறுவிலி - (Cordia sebestena-speciosa)
மகலிங்கம் - (Schrebera swietenioides)
மகிழ் - (Mimusaps elangi)
மங்குஸ்தான் - (Garcinia mangastana)
மஞ்சட்கடம்பு - (Adina cordifolia)
மஞ்சட்காஞ்சி - (Garcinia timberti)
மஞ்சட்கொன்றை - (Cassia glauca)
மஞ்சணாறி மரம் - (Morinda citrifolia)
மஞ்சாடி மரம் - (Adenanthera paronina)
மட்டிப்பால் மரம் - (Ailanthus malabaricus)
மடையன்சாம்பிராணி மரம் - (Hardwickia pinnata)
மணிப்புங்கம் - (Erioglossum rubiginosum)
மதகரிவேம்பு - (Chickrassia tabularis)
மதனகாமேசுவரம் - (Cycas circinalis)
மதுக்காரை மரம் - (Randia dumetorum)
மந்தாரை - (Bauhinia purpurea)
மயிர்மாணிக்கம் - (Colubrina asiatica)
மயிலடி மரம் - (Vitex pube scens)
மயிலை மரம் - (Vitex alata)
மலப்பருத்தி - (Sterculia colorata)
மலாக்காசாம்பிராணி மரம் - (Styrax benzoin)
மலைக்கிளுவை - (Balsamodendron pubescens)
மலைக்குறட்டை - (Euonynous dichotomus)
மலைக்கொன்றை -
(Acrocarpus fraxinifolius)
(Cassia montana)
மலைத்தணக்கு - (Hymenodictyon obovatum)
மலைநாரத்தை - (Limonia alata)
மலைநாவல் - (Eugenia caryophyllaea)
மலைப்புன்கு - (Celtis wightii)
மலைப்பேரீச்சு - (Cycas beddomei)
மலைமா - (Balasamodendron caudatum)
மலையாத்தி -
(Bauhinia malabarica)
(Bauhinia variegata)
மலையிச்சி - (Ficus retusa)
மலையெருக்கலை - (Felicium decipiens)
மலைவட்டை மரம் - (Hydnocarpus alpina)
மலைவாகை - (Pithecolobium coriaceum)
மலைவிராலி - (Walsura piscidia)
மலைவேம்பு -
(Melia azedarach)
(Melia composita)
மாசக்காய் மரம் - (Quercus robur)
மா - (Mangifera indica)
மாரிமா - (Spondias dulcis)
மாவிலிங்கம் - (Crataeva religiosa roxburghii)
மான்சாரை -
(Semecarpus auriculata)
(Agrostistachys longifolia)
மீனா மரம் - (Spondia aurentalis)
முசுக்கட்டை மரம் - (Morus indica)
முட்டைக்கோங்கு - (Gyrocarpus jacquini)
முதிரை - (Chloroxylon swietenia)
முந்திரி - (Anacardium occidentale)
முருக்கன்மரம் - (Butea frondosa)
முருங்கை - (Moringa pterygosperma)
முள்வேல் - (Gymnosporia emarginata)
முள்ளுக்காரை - (Randia dumetorum)
முள்ளுச்சீத்தா மரம் - (Anona muricata)
முள்முருக்கு - (Erythrina indica)
முள்ளுமுருங்கை - (Berberis nepalensis)
மேப்பிள் -
மேனா மரம் - (Fraxinus ornus)
யா
வாகை மரம்
வாத நாராயண மரம்
வாழை
விசிறி வாழை
வில்வம்
விளா
வெண்கடம்பு -
வெள்ளால் - (Ficus benjamina)
வேம்பு -
வேங்கை மரம்
வேர் பலா
கமுகு
தென்னை
மூங்கில்
பனை
மஞ்சகடம்பு
வில்வம்
சில வாகை 
சிசு 
குரங்கு பலா
கரும் பொரசு
அவுரிநெல்லி  (Blue Berry)
பூமருது
முட்சங்கான் 
வேல் நாகு
விளிம்பிப்பழம் / Pulichikai ( Star fruit)
ஆட்டுத்தலை மரம் 
சீமை கொன்றை
கருப்பு சாம்பிராணி மரம்
கருவை
தேற்றான்கொட்டை
வாதநாராயணன்
சிவா குண்டல மரம்
சிறு நாக பூ மரம்
அளிஞ்சி மரம்
ஈச்ச மரம்
ருத்ராட்சை மரம்
ஊதா கொன்றை மரம்
மஞ்சள் இழவு மரம்
கருங்காலி மரம்
பன்னீர் மரம்
வாஞ்சி மரம்
மலம்புளுவன்  பாலைவன தேக்கு
முல்பெர்ரி
சீனி மரம்
கண்ணீர் மரம்
உலக்கை பாலை மரம்
நாகலிங்க மரம் 
மடையன் சாம்பிராணி மரம்
வன்னி மரம்
நொச்சி
புன்னை
பிக்சா
பாகுனியா
அர்ஜுனா
கொடைத்தோண்டி
ஆய மரம்
வில்வம்
ஆச்சான்
தேன் பழம்
சிருகிலா
நீர்கடம்பு
கத்திவேல்
பிலானிச்
விளா
கடப்பா
உன்னை
திருகி
கருவாகை
சிகப்பு பருத்தி
பிரயன் பிராய்
குண்டுமணி
கடம்பு
கடுக்காய்
இச்சி,
ஈச்ச மரம்,
தானி மரம்,
ஆச்ச மரம்
பெரிய தகரை....

#வயலும்வரப்பும்....

மூலிகை பற்பொடி

மூலிகை பற்பொடி
மூலிகை பற்பொடி

கடுக்காய் 25 கிராம்
தான்றிக்காய்25 கிராம்
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
மாசிக்காய்25 கிராம்
அதிமதுரம்25 கிராம்
காசு கட்டி 20 கிராம்
ஏலக்காய் 20 கிராம்
மருதம் பட்டை 100 கிராம்
இந்துப்பு 20 கிராம்

செய்முறை:

முதலில் கடுக்காய் தான்றிக்காய் ஆகியவற்றை கொட்டை நீக்கி தோலை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்

பிறகு அனைத்து மூலிகை பொருட்களும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்

பயன்கள்:

பல்வலி, பல்லசைவு, ஈறுவீக்கம், பற்சொத்தை முதலிய பிரச்சினைகள் தீரும்

நாட்டு மருந்து கடைகளில் அனைத்து மூலிகை பொருட்களும் கிடைக்கும் வாங்கி உபயோகித்து பயன்பெறுங்கள்.

வீட்டில் பயன்படுத்தும் மசாலா பொடிகள் செய்முறை

வீட்டில் பயன்படுத்தும் மசாலா பொடிகள் செய்முறை
வீட்டில் பயன்படுத்தும் அனைத்து  மசாலா பொடிகள் செய்முறை ... 

அனைத்தையும் காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும்...

சாம்பார் பொடி


ரசம் பொடி

சென்னா மசால் பொடி

இட்லி பொடி

புளிசாதம் பொடி 

சிக்கன் பிரியாணி கறி மசாலா பொடி

மட்டன் பிரியாணி மசாலா பொடி

கரம் மசாலா பொடி

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...