செவ்வாய், 27 செப்டம்பர், 2022

உச்சிஷ்ட கணபதி வசியம்


உச்சிஷ்ட கணபதி வசியம்


உச்சிஷ்ட கணபதி யந்திரம்




உச்சிஷ்ட கணபதி மூலமந்திரம் :
ஓம் க்லீம் ஸ்ரீம் க்ரீம் நமோ பகவதி
ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டாய மகாத்மனே
க்ரீம் க்லீம் ஸ்ரீம் தேர்தோ உச்சிஷ்டாய சிவா .
(உரு 12000)
பூஜை முறை :

வளர்பிறை வெள்ளிக்கிழமை இந்த பூஜை துவங்கலாம் .வெற்றிலை பாக்கு பழம் ,அவல் பொறி ,கடலை ,பிச்சிபூ சந்தன அத்தர் தேங்காய் ,எலுமிச்சை ,எள்ளுருண்டை பயறு வகைகள் ,ஊதுபத்தி ,சாம்பிராணி ,கற்பூரம் ,இவ்வளவு பொருட்களும் படைக்க வேண்டும் .

அதற்கு முன் ஒரு அமாவாசை தினத்தில் ஊரின் முச்சந்தி பகுதியில் சென்று அல்லது சுடுகாட்டில் சென்று ஒரு தேங்காய் ,கன்னி கோழி முட்டை ,சிவப்பு சேவல் ,இளவங்காய் அல்லது வெண்பூசணி ,இவைகளை தன்னையும் பூஜை செய்யும் இடத்தையும் சுற்றிக்கொண்டு அங்கெ சென்று ஒரு படையல் போட்டு நான் இந்த உச்சிஷ்ட கணபதி பூஜைக்காக இருக்கிறேன் எனக்கு பூஜையின் பொது எந்த பாதிப்புகளும் வராமல் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் சீக்கிரம் சித்தி கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி  அதன் பிறகு சாம்பிராணி தூபம் காட்டி பலி கொடுக்க வேண்டும் .

இந்த வேலைகளை முடித்து விட்டு அதன் பிறகு பூஜை செய்தால் தான் சித்து உடனடியாக கிடைக்கும் .இதனால் அஷ்ட கர்மங்களும் ஆடலாம் மற்றும் பேய் முதல் பிரம்மா ராட்சசி வரை  விரட்டலாம் .பேய் பிசாசு உள்ள வீடுகளில் நம் பெயரை கூறினாலே அனைத்தும் ஓடி விடும் .நமக்கு எதிரிகளால் எந்த ஆபத்துகளும் வராது நம்மை எதிர்க்க நினைப்பவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே உங்கள் கண் முன்னே அழிவதை காணலாம்


எந்த வேலை செய்ய வேண்டுமானாலும் ஒரு சீட்டில் நடக்க வேண்டிய காரியத்தை எழுதி ஒருநாள் பூஜையில் வைத்தால் போதும் அடுத்த கணமே அந்த காரியம் நடந்து விடும் .உச்சிஷ்ட கணபதியால் நமக்கு சகல வசீகர தன்மையும் ஏற்படும் ,எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும் .

எப்படி ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .

ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .


இம்மந்திரத்தை சித்தி செய்யாமல் மந்திர பிரயோகம் செய்தால் அதன் அனுபவ முறைகளை  கூறுகின்றேன் .

ஏதாவது இடத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த உடற்கட்டு போடாமல் பூஜைகள் செய்தால் அந்த போச்சி வெற்றியடையாது .அந்த தேவதைகளுக்கு தேவையான படையல் போடவில்லை என்றால் அது நம்மை தாக்கும் அதன் அறிகுறி அந்த நேரமோ அல்லது மறுநாள் காலையிலோ நமக்கு உலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டு பிடிக்கலாம் அதனை போக்க அதற்கான உச்சாடன மந்திரம் கொடுத்து அதை விரட்ட வேண்டும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .

கன்னி நூல்

கன்னி நூல் 

நிறைய சாஸ்திரங்களில் கன்னி நூல் என்று குறிப்பிட்டிருப்பார்கள் அது என்னவென்று யாரும் குறிப்பிட மாட்டார்கள் அதனுடைய உண்மை பொருளை நான் உங்களுக்கு விளக்கு கிறேன் 

 கன்னி நூல் என்பது கன்னிகழியாத பிள்ளை கையால் நூல் நூற்க சொல்லி அந்த நூலில் மஞ்சள் தடவி வைத்துகொள்ள வேண்டும் இதுதான் கண்ணிநூல் இந்த கன்னி நூல் காப்புகட்டிதான் மூலிகை பிடுங்குவார்கள் .இதற்கு இன்னொரு முறையும் கூறுவார்கள் தாமரை தண்டை உடைத்தால் அதிலும் நூல் வரும் அதையும் உபயோகப்படுத்தலாம் .

சரி இனி வசியத்திற்கான முறையைப்பார்ப்போம் 

வெள்ளை எருக்கலன் வேர் 
செம்பருத்தி வேர் 
செவ்வகத்தி வேர் 

இந்த மூன்றையும் சாபம் நிவர்த்தி செய்து வேர் அறாமல் பிடுங்கி கொண்டுவந்து அந்த வேரை மேற்படி நூலால் தாயத்து போல சுற்றி கட்டி அதில் ஒரு கோழி அறுத்து ரத்தம் தெளிக்கவும் 

இதனை இப்போது உடலில் அணியக்கூடாது தேவைப்படும் பொது மட்டும் அணியவேண்டும் இதனால் சர்வ வசியமும் உண்டாகும் ஆண் பெண் வசியம் முதற்கொண்டு சகலமும் உங்களுக்கு வசியமாகும் 

இந்த தாயத்தை எப்போதும் அணிந்தால் விந்து நஷ்டமாகும் 

இதனை இடுப்பில் தொப்புளுக்கு நேராக கட்டிக்கொண்டு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் விந்து இறங்காது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் அந்த தாயத்தை முதுகு பக்கம் தள்ளிவிட்டால் உடனே விந்து வெளியேறும் .இதனை அடிக்கடி உபயோகிப்பது உடல் நலத்திற்கு கேடு விளையும் .

மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.

(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்.

(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
-----------------------------
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்

செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரகதூப பொடி.

செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக
தூப பொடி.
லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி க்கான பட முடிவு1.அரசு,                              2.மருதாணி,               3.கஸ்தூரி,   
    
 4.சாம்பிராணி,              5.செந்நாயுருவி,       6.இலுப்பை,
 
 7.புனுகு,                          8.புங்கன்,                     9.முந்திரி, 

10.குங்கிலியம்,          11.வெள்ளெருகு,      12.ஏலக்காய்,
 
13.வெண்கடுகு,          14.கோராசனை,       15.கோஷ்டம், 
 
16.நொச்சி,                    17.ரோஜா இதழ்,      18.ஆலமரம், 
 
19.சந்தனம்,                  20.அகில்,                   21.தேவதாரு, 

22.துளசி                         23.தாமரை

மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும். இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும். செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம், சந்தோசம் எப்போதும் இருக்கும்.
இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு அதிகரிக்க செய்யும். வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும். வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர, கல்வி சிறப்பாக அமையநினைவாற்றல் மேம்பட செய்யும்.  அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால்  குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்..

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...