புதன், 21 ஜூலை, 2021
வியாழன், 8 ஜூலை, 2021
வேப்பம் பூ
SIDDHA HEALTH CARE:9047225560....
இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.
வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி... என்பதெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம்..
எப்படி சாப்பிட..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..
இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும் சாப்பிடுங்க...
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும்.. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்....
சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....
திங்கள், 28 ஜூன், 2021
புதன், 16 ஜூன், 2021
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி
**வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி***
நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின் பொருள்களை வாங்குகிறோம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் அது நம் அறியாமை என்றே சொல்ல வேண்டும்.
குப்பைமேனி மஞ்சள் தேய்த்து அரைத்து குளித்த காலம் பின்னுக்கு தள்ளப்பட்டு. இன்று குளியல் பொடி அரைத்து குளிக்க சோம்பல் பட்டு குப்பைமேனி சோப், மஞ்சள் சோப், என்று திடப்பொருளாக உபயோகித்து கொண்டு இயற்கைக்கு மாறிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மக்களின் அறிவுத்திறனை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..
இன்று சோடியம் ஹைட்ராக்சைடையை சேர்த்து திடமாக்கப்பட்டு குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..
சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு, காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium hydroxide, lye) அல்லது எரி சோடா (caustic soda) என்பது NaOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.இது ஒரு வலிமை மிகுந்த எரி காரம் ஆகும். இது திறந்த சூழ்நிலையிலும், சாதாரண வெப்பநிலையிலும் புரதங்களை சிதைத்து வேதிக்காயங்களை உருவாக்குகின்றது.
சோடியம் ஹைட்ராக்சைடு தொடர்பான பண்பு குறித்து ஸ்பென்சா் அம்ஃபெர்வில்லெ என்பவா் 1893 ஆம் ஆண்டில் ஒரு விாிவான அறிக்கையளித்துள்ளாா்.அதன்படி சோடியம் ஹைட்ராக்சைடு எந்தெந்த வெப்பநிலையில் என்ன செறிவுகள் உண்டாகும் என்று கூறிப்பிட்டிருக்கிறார்.அதன் படி பார்த்தால் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக செய்யும் போது அதில் சேர்க்கும் மூலிகைகளை பொருத்து பலவாறான வினைப்புரிந்து எந்த தன்மை அடைந்து எதுவாக மாறும் என்று வரையருத்து கூறுவது மிகவும் கடினம் ஏன் என்றால் சோடியம் ஹைட்ராக்சைடு ஒவ்வொரு வெப்பநிலையில் ஒவ்வொரு வேதியல் மாற்றம் அடைகிறது..
அது நம் உடலில் வினைப்புரிந்து எப்படி மாறும் அதன் விளைவுகள் என்ன என்பதை பத்து வருடத்திற்கு பின்புதான் தெரியவரும்..தெரியவரும் போது காலம் கடந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சிலர் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு தேங்காய் எண்ணெய்யுடன் சேரும் போது அது அதன் தன்மை மாறிவிடுகிறது என்கிறார்கள்..
சரி அப்படி என்றால் எதற்காக சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகிறோம்?? அது கட்டி தன்மையாக மாறுவதற்காக.அப்படி என்றால் கூட்டு வினைபுரியும் போது சோடியம் ஹைட்ராக்சைடு தன்மை இழக்கிறது என்றால் மறுபடியும் அந்த சோப்புக்கட்டி திடத்தன்மையில் இருந்து மீண்டும் திரவநிலையில் மாறி இருக்க வேண்டும் அல்லவா???

தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக மாற்றும் போது அது சோப்+கிளிசரினாக மாறுகிறது என்று..கிளிசரின் மட்டும் நல்லதா என்ன?? கிளிசரின் இரண்டு வகைப்படும் அது தாவரத்தில் இருக்கும் எடுக்கும் கிளிசரின்.இன்னொன்று செயற்கையாக மற்றபொருளோடு வினைபுரியசெய்து கிடைக்கும் கிளிசரின் எப்படியானது என்று உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..
எது எப்படியானதாக இருந்தாலும் மூலிகைகளை கொண்டு தயாரிக்கும் குளியல் பொடியே சிறந்தது..ஆனால் என்ன நமது அவசர வாழ்கையில் இன்றைய சோப் கட்டிபோலவே இயற்கை கட்டியும் வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நமது சோம்பேரித்தனம் தான்.
என்னதான் சொன்னாலும் இயற்கை சோப் என்ற பேரில் தயாரிக்கும் நபர்கள் நான் சொல்வதை ஏற்க மாட்டார்கள்..
நமது முன் தலைமுறையினர் அரப்பு சீகைக்காய் இன்னும் சில மூலிகை இலைகளை தான் குளியலுக்கு உபயோகித்தார்கள்..அக்குபிரசர் சொல்கிறது உடலில் உள்ள அக்குபிரசர் புள்ளிகளில் தலையில் தான் அதிகம் உள்ளது என்று.ஆம் உண்மை தான் அதனால் தான் நம் முன்னோர்கள் தலைக்கு அரப்பு சீகைக்காய் போட்டு பத்து விரல்களை கொண்டு நன்றாக தலை முழுவதும் அழுத்தம் கொடுத்து பின் உடம்பிற்கு கல்லைகொண்டு தேய்ப்பார்கள்..ஆனால் இன்றோ நம் முன்னோர்கள் செய்ததை அக்குபிரசர் என்ற புது வடிவம் கொடுத்துள்ளது..
தலைமுதல் பாதம் வரை அழுத்தம் கொடுத்து குளிக்கும் முறை இன்றோ சோப் என்ற வடிவில் வந்து நம் முன்னோர்கள் வகுத்த முறையை காணாமல் போக செய்துவிட்டது..நமது முன்னோர்கள் ஒரு மருத்துவ துரையையே ஒர் குளியல் முறையில் கொண்டு வாழ்துள்ளனர் என்று நினைக்கையில் பிரமிக்க வைக்கிறது..

சில எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன்..நான் ஒரு முறை பொள்ளாசி சென்றிருந்த போது கந்தகம் (Sulpher) உபயோகித்து தேக்காய் சிரட்டையில் இருந்து பருப்பை பிரிப்பதும் மீண்டும் பருப்பை உலர்த்த கந்தகத்தை உபயோகிப்பதுமாக செய்துகொண்டு இருந்தார்கள்.அதை பற்றி கேட்ட போது அது பருப்படன் அவ்வளவாக வினைப்புரியாது என்றும் கந்தகம் உடம்புக்கு நல்லது என்றும் சித்த மருத்துவத்தில் கந்தகம் மருந்தாக உபயோகிக்க படுத்துவதையும் எடுத்துக்காட்டாக சொன்னார்கள். சித்த மருத்துவத்தில் கந்தகம் உபயோகிக்கப்படுத்துவது உண்மை ஆனால் அந்த கந்தகத்தை பல முறை சுத்தி செய்து அதில் உள்ள நஞ்சை நீக்கியப்பின் தான் மருந்தாக அது பயன்படுத்தப்படும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்புகள் இல்லைதான்.
அந்த காலத்தில் கந்தகம் இயற்கையாய் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் சுவையற்றி அலோகம்.ஆனால் இன்று அதை செயற்கையாகவே தயாரிக்கப்பட்டு வியாபிரம் ஆக்கப்பட்டுவிட்டது..கந்தகம் செம்பின் எதிரி என்ற பெயரும் உண்டு..இதைப்பற்றி விளக்கினால் பதிவு நீண்டுவிடும்..இப்படி எத்தனையோ..தேன்,வேம்பு எண்ணெய், நெல்லிக்கனி, பால்,உப்பு.....
அதை போல் இரசமணியும்..இப்போது உள்ள இரவாதிகள் பாதரசத்தை கடையில் வாங்கி அதை மணியாக கட்டி இரசமணி என்று சொல்கிறார்கள்..சித்தர்கள் சொன்ன இரசம் என்பது செயற்கை பாதரசம் கிடையாது.
சித்தர்கள் தாம் சொல்லியுள்ள மருத்துவமுறையில் மணி,மந்திரம்,ஒளடதம் எனும் முப்பிரிவினைக்கூறி அதில் மணி என்பதை முதலிடம் பெறச்செய்து சிறப்பித்துள்ளனர்.அப்படிப்பட்ட மணியான இரசமணியை சரியாக முடித்தல் வேண்டும்.என்னை பொருத்த வரையில் உண்மையான இரமணியை சரியாக முடிக்க ஆறு மாத காலம் ஆகும்.

லிக்கம் என்கின்ற கல்லில் இருந்து இரசம் என்ற பாதரசத்தை பல முறை சுத்தி செய்து கிடைப்பது இரசம்..அந்த திரவ இரசத்தை திடமான மணியாக கட்டுவதே இரசமணி ஆகும்..இன்னும் இதை பற்றி சொல்ல மறைத்த கதை நிறையவே உள்ளது..
(நேரம் கிடைப்பெற்றால் இரசமணி vs இரவாதம் சொல்ல மறந்த கதை என்ற தலைப்பில் இதை பற்றி பதிவிடுகிறேன்..)
இப்படியான உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆகையால் இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. நன்றியும் வணக்கமும்..
இயற்கையை இயற்கையாய் வாழவிடுங்கள்.இயற்கையை நீங்கள் போகும் வேகத்திற்கு தயவுசெய்து வளைக்க நினைக்காதீர்கள்..
முடிந்தால் இயற்கையோடு இசைத்து செல்லுங்கள்.இல்லையேல் இயற்கையை விட்டு விழகி நில்லுங்கள்..
முடிந்தால் இயற்கையோடு இசைத்து செல்லுங்கள்.இல்லையேல் இயற்கையை விட்டு விழகி நில்லுங்கள்..
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.
மஞ்சள் காமாலை ஏன் வருகிறது
மஞ்சள் காமாலை ஏன் வருகிறது
எதன் காரணமாக மஞ்சள் காமாலை வருகிறது
மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே.
இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன.
அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி விடுபட……
வராமல் தடுப்பது எப்படி...
#பிளிருபின்
(Bilirubin)
(Bilirubin)
நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் சுமார் 120 நாட்கள். அதன் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள இரும்புச் சத்து உடலுக்குள்ளே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு (பிளிருபின்)வெளியேற வேண்டும்.
மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும். இந்த பிளிருபின் நீரில் கரையாததன்மையில் (Unconjugated/ Indirect) இருக்கும். இதை கல்லீரல் உள்வாங்கி, கரையும் (Conjugated) தன்மையுள்ளதாக மாற்றி, பித்தநீர் வழியாக பித்தப்பையில் சேகரிக்கும். உணவு செரிமானத்தின்போது, பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு பிளிருபின் சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும்.
பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.
பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..

சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.
ஃபீகல் (Fecal) ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும்.
ஒருவர் மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.
பொதுவாக, சுகாதாரமற்ற இடத்தில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வகை மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகம்.
ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது.
ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.
ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு……
பசி குறையும்,
உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும்.
கண்கள் மஞ்சளாக இருக்கும்,
சிறுநீர் மஞ்சளாகப் பிரியும்,
ரத்தப் பரிசோதனை செய்தால் எந்த வைரஸ் தொற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
மஞ்சள் காமாலை நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் போதும், குணமாகிவிடும்.
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும்.
ஹெபடைட்டிஸ் பி-யைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மருந்து
மருந்து
நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.
சாதாரணமாக, சளிக்குச் சாப்பிடும் மருந்துகள் முதல் உயர் சிகிச்சை மருந்துகள், உணவுகள், மூலிகைகள் என எதன் காரணமாக வேண்டுமானாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம். புதிதாய் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்ட பின்னர், மஞ்சள் காமாலை வந்தால், எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.
குறிப்பிட்ட மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தை மாற்றிக்கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும்.
ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும்.
கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர் பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தீர்வு என்றாலும்கூட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான செலவு, அதன்பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் பக்கவிளைவு மிக அதிகம். எனவே, மதுவை அறவே நிறுத்துவதுதான் ஒரே சிறந்த தீர்வு.
வீடுகளில் குப்பையைத் தினந்தோறும் அகற்றிவிடுவோம். ஒரு சிலர், நான்கைந்து நாட்கள் சேர்த்துவைத்து, பின்னர் வெளியேற்றுவார்கள். அதுபோல வெகுசிலருக்கு கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதைத்தான் ‘**கில்பர்ட் சிண்ட்ரோம்**’ என்கிறோம்.
100-ல் 3 பேருக்கும், பெண்களில் இரண்டு பேருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், கல்லீரல் பரிசோதனை செய்யும்போது கரையும் பிளிருபின் வகை குறைவாகவும், கரையாத பிளிருபின் வகை அதிகமாகவும் இருக்கும்.
சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.
சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.
கில்பர்ட் சிண்ட்ரோம் இருப்பின் மஞ்சள் காமாலையால் உடல் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டாம். இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் தேவைப்படாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
#பித்தக்குழாய்_அடைப்பு (Obstructive Jaundice)
பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் உருண்டு இறங்கி பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை ஏற்படும்.இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக இருக்கும். சிறப்பு எண்டோஸ்கோப்பி (E.R.C.P) சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.
பித்தக்குழாய் சிறுகுடலில் சேரும் இடத்தில் கணையம் இருக்கிறது. கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். உடனடியாகக் கல்லீரல் பரிசோதனை செய்து கணைய நோயைக் கவனித்து, பித்த நாளத்தை பைபாஸ் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

#அதீத_சிவப்பணு_அழிவு (Increased Hemolysis)
ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு சிவப்பணுக்கள் மட்டுமே உடைய வேண்டும். மாறாக, அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் தானாகவே மஞ்சள் காமாலை போய்விடும்.
இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
சிலர், பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுக்கிறார்கள். இது தவறு. கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (#LFT) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
மஞ்சள் காமாலை
வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை.
வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை.
எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது.
கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா.
பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்.
பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும்.
பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.
சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது.
கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது.
நகம் கடிக்கக் கூடாது.
பசிக்கு சாப்பிட வேண்டும்.
குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய……
பிரஷ்,
ஷேவிங் செட்
போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம் செய்முறை
உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம் செய்முறை
உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம் செய்முறை :
தேவையானவை பொருட்கள் :
1.பாதாம் - 100 கிராம்
2.முந்திரி - 100 கிராம்
3.பிஸ்தா - 100 கிராம்
4.கசகசா - 100 கிராம்
5.கற்கண்டு - 200 கிராம்
6.நெய் - 250 கிராம்
7.சோற்றுக்கற்றாழை - 200 கிராம்
8.பால் - அரை லிட்டர்
செய்முறை :
சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும். பாதாம், முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை
தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு சட்டியில் பாலை ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு
கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம், முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறவும். பிறகு நெய் ஊற்றி 40 நிமிடங்கள் வரை கிளறவும். லேகியம் பக்குவமடையும் போது நெய் பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்.

பயன்படுத்தும் முறை :
நன்றாக ஆறியவுடன் பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் சிறியவர்களுக்கு அரை ஸ்பூன், பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் அளவு
சாப்பிட்டு வரவும். நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
சாப்பிட்டு வரவும். நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
பயன்கள் :
1.உடலுக்கு நல்ல வலிமையை தரும்.
இது உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி
உண்டாக்கும்.
இது உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி
உண்டாக்கும்.
2.அனைத்து மூல நோய்களும் தீரும்.
நரம்பு தளர்ச்சி குணமாகும். மெலிந்த உடல் பலம் பெறும்.
நரம்பு தளர்ச்சி குணமாகும். மெலிந்த உடல் பலம் பெறும்.
3.ஆண்மை குறைவினால் ஏற்படும்
குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
4.வெட்டை நோய் குணமாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...
-
தயவு செய்து அதிகமாக பகிரவும் !! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற...
-
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி **வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி*** நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின்...
-
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது...