ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தை கிருத்திகை

 தை கிருத்திகை 23-01-2021


இந்த வருடம் ஜனவரி 23-ம் நாள் தை கிருத்திகை திருநாள். ஸ்ரீ சார்வரி தை மாதம் 10ம் நாள்


கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் இணைந்து முருகப்பெருமானை வளர்த்ததால், அவர்களின் தியாகத்தைப் போற்றி அன்னை சக்தி ஆசீர்வதித்து வரமருளினார். அதன்படி மாதம்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாள், முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினமானது.


தை கிருத்திகையில் வெற்றிவேல் வீரவேல்!  கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு


அதிலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வரும் கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை: உத்தராயனத்தின் தொடக்கமான தை மாத கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை.


இந்த வருடம் ஜனவரி 23-ம் நாள் தை கிருத்திகை திருநாள். ஸ்ரீ சார்வரி தை மாதம் 10ம் நாள் இந்த நாளில் முறைப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் சேரும் என்பார்கள். உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு தை கிருத்திகை விரதம் இருந்தால் உவப்பான செய்தி வரும்; குறிப்பாக திருமண வரன் தொடர்பான நல்ல செய்தி விரைவில் தேடி வரும் என்பது நம்பிக்கை.


பிள்ளைச்செல்வம் வேண்டும் பெண்கள் தை கிருத்திகையில் பாலமுருகனை வழிபட்டால் கந்தவேளின் கருணை கிட்டும்; குழந்தை வரம் கிடைக்கும் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

இந்தத் திருநாளில் முருகப்பெருமானின் தலங்களில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். இதை தரிசிப்பதும் அபிஷேகத்துக்கான பால், விபூதி, பன்னீர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதும் சிறப்பானது.


கிருத்திகை விரதத்துக்கு முதல் நாளான பரணி நட்சத்திர நாளின் இரவன்று கொஞ்சமாக சைவ உணவு உண்டு விரதம் தொடங்க வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலை நீராடி, கந்தபுராணம் முதலான ஞானநூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.


கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.


‘அபிஷேகத்துக்குப் பழநி; அலங்காரத்துக்குச் செந்தூர்’ என்பார்கள் பக்தர்கள். இந்த நாளில் இந்தத் தலங்களை தரிசிப்பது வெகு விசேஷமானது. கிருத்திகை விரதம் கீர்த்தியை அளிக்கும். செவ்வாய்க் கிரகத்தால் உண்டாகும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ பிரச்னைகள், சொத்து பிரச்னைகள், எதிரிகளால் உண்டாகும் சங்கடங்கள் யாவும் இந்த விரதத்தால் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.

ரமண மகரிஷியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் ஒருநாள் அவரிடம் வந்து, தன்னை ஒருவர் அடிக்கடி திட்டுவதாகவும், அதனால் தனக்குக் கோபம் வருவதாகவும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான். ரமணர் அதற்கு, ‘‘நீயும் அவனோடு சேர்ந்து உன்னையே திட்டிக்கொள்!’’ என்றார்.

வாலிபன் திகைத்தான். அதற்கு பகவான் அவனைப் பார்த்து, ‘‘உன்னைத் திட்டுபவன் உன் உடம்பைப் பார்த்துத்தானே திட்டுகிறான். கோபதாபங்களுக்கு இடமான இந்த உடலைவிட நமக்குப் பெரிய விரோதிகள் யார் இருக்கிறார்கள்?! ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார், உஷார்படுத்துகிறார் என்று அர்த்தம். அப்போது நாமும் அவருடன் சேர்ந்துகொண்டு இந்த உடம்பைத் திட்டித் தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு திட்டியவரை நாம் திரும்ப திட்டுவதால் என்ன பயன்? நம்மைத் திட்டுபவர்கள் நமது நண்பர்களே. திட்டுபவர்களின் மத்தியில் நாம் இருப்பது நல்லது. அப்படியில்லாமல் நம்மைப் புகழ்பவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஏமாந்துதான் போக வேண்டும்!’’ என்று கோபத்தை வெல்லும் வழியைக் கூறினார் பகவான் ரமணர்.


விதிமுறைகளும் வழிபாடும்!


குரு ஒருவர் தன் சீடனுடன் மாட்டுவண்டியில் போனார். அவருக்குத் தூக்கம் வந்தது. ‘வண்டியிலிருந்து ஏதாவது விழுகிறதா என்று பார்’ என சீடனுக்கு உத்தரவு போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். கொஞ்சதூரம் போனதும் வண்டி தடதடவென தூக்கிப்போட்டது. உள்ளேயிருந்து புத்தக மூட்டை, தானிய மூட்டை என ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. சீடன் எல்லாவற்றையும் பார்த்தபடி வந்தான். சிறிது நேரம் கழித்து குரு கண்விழித்தார். சீடன் முகம் வெளிறியிருந்தது. காரணத்தை விசாரித்தார் குரு.

``ஒரு மைலுக்கு அப்பால் புத்தக மூட்டை விழுந்தது. சமீபத்தில் தானிய மூட்டை விழுந்தது” என்றான்.

“ஏன் எடுக்கவில்லை?” கோபத்தோடு கேட்டார் குரு.

“பார்த்துக்கொண்டிரு என்றுதானே சொன்னீர்கள்” என்றான் சீடன்.


முட்டாள் சீடனிடம் விளக்கமாகச் சொல்லாதது தன் தவறே என்று நினைத்த குரு, “வண்டியிலிருந்து எது விழுந்தாலும் எடுத்து வந்து வண்டியிலேயே வை” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார். கொஞ்சதூரம் போனதும் மாடு சாணம் போட்டது. சீடன், உடனே கீழே இறங்கிப்போய் அதை எடுத்து வண்டிக்குள் போட்டான். அது குருவின் முகத்தில் விழுந்தது. நாற்றம் சகிக்காத குரு எழுந்து பார்த்தார்.


“மாடு சாணத்தைக் கீழே போட்டது. அதான்” என்றான் சீடன். குருவுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கோபம் வந்தது. தன் தலையில் தானே அடித்துக்கொண்ட வராய் ஒரு பேப்பரில் எல்லாப் பொருள்களின் பெயரையும் எழுதி, “இவற்றில் எது விழுந்தாலும் திரும்ப வண்டியில் எடுத்துவை” என கர்ஜித்து திரும்பவும் தூங்கினார்.

அடுத்துவந்த திருப்பத்தில் மாடு எதிர்பாராமல் வேகமாக நகர, வண்டி தடுமாறி குரு தூக்கியெறியப்பட்டு, சாலையோரம் இருந்த வைக்கோல் போரில் விழுந்தார். சீடன் தவித்தான். தன்னிடம் இருக்கும் சீட்டைப் பதற்றமாகப் பார்த்தான். அதில் குருவின் பெயர் இல்லை. வண்டி தன் பயணத்தைத் தொடர்ந்தது. இந்த சீடனைப் போல பலர் விதிமுறைகளின்படி மட்டுமே செயல்படுகின்றனர்; வழிபடுகிறார்கள். பக்தி, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அது மனத்தின் அடி ஆழத்திலிருந்து வருவது!


தை கிருத்திகை விரதம்: செவ்வாய் தோஷ திருமணத்தடை நீங்கும், மூடிய கருப்பை திறக்கும்

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே திருமணம் நடைபெற வேண்டும், கடவுள் அருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏதாவது ஒரு தடையோ, தோஷமோ இருந்தால் இந்த இரண்டுமே அமையாது. தை கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.


சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.


உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.


செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.


கந்தர் சஷ்டி கவசம் கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள். விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

குணமுள்ள குழந்தைகள் வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான்.


குழந்தை செல்வம் திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பதைத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறினார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழி, தை பொங்கலோடும் தொடர்புடையது!


உப்பில்லா உணவு தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. தை கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.

இன்று தை கிருத்திகை! தை மாத்தத்தில் வரும் 


கிருத்திகை ஏன் சிறப்பு!!


தை மாத்தத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம்.

தை மாத்தத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம்.

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.


இதில் உத்தராயன புண்ணிய காலம் இன்றாகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது "தை' மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்.

எனவே இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

கிருத்திகை அன்று முருகன் கோயில்கள் அனைத்திலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் .ஆடிக் கிருத்திகை திருநாளில் 10 லட்சம் காவடிகள் எடுத்து மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாகக்கொண்டாட்ப்படுகிறது ...

அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளை கொண்டாடுகிறார்கள்.

மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.


வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது .

ஒரு லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் உற்சவர் சன்னதியாக உள்ளது

முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது.

ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம்.

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது.


இந்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள்.

இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, ஆடி கிருத்திகைமிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.

வள்ளியின் திருமணத்தலம் .

.

முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்று "திருத்தணி' என்று மாறியது.அசுரனோடு மோதியதன் காரணமாக மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது.


முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக் கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.


கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது.


இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் `சரவணபவ' என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது முருகனே என்பது அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள்.

சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.


மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.


விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கும் பொருந்தும். என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாகக் கருதுகின்றனர்.


உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாத கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.


ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

அதனால் தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.


ஞானத்தின் வடிவான முருகப் பெருமான், ஞானப் பழத்துக்காக அம்மா, அப்பாவான பார்வதி பரமேஸ்வரனிடம் சண்டை போட்டுக் கொண்டு திருப்பழநிக்குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


‘ஆறுமுக உருவாய்த் தோன்றி

அருளொடு சரவணத்தின்

வெறிகமழ் கமலப்போதில்

வீற்றிருந்து அருளினானே’


என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.


சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.


காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.

அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது.

திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மான சீகமாக வழிபட்டாலும், ‘திருத்தணிகை’ என்ற பெயரை சொன்னாலும் நம் தவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.முருகப் பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகனின் 16 வகையான திருக்கோலங்களில் இங்கு ‘ஞான சக்திதரர்’ என்னும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.


ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்மபுத்திர தோஷம், குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவோம்.


முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழும் ஆயுதங்களுள் மிகச் சிறப்புடையது வேல்!..

'' வெல்லுவது வேல்!..'' என்னும் சொற்குறிப்பினை உடையது.வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி

வெல்லாது எனக் கருதியே..

சங்க்ராம நீ சயித்து அருள் எனத்தேவரும்

சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே

தனிஆண்மை கொண்ட நெடுவேல்

என முருகனின் வேலாயுதத்தினை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகின்றார்.


வேல் - வெம்பகையை மட்டும் என்றில்லை!.. வெவ்வினையையும் வென்று தீர்ப்பது!.. அதனால் தான் -

''..வேலுண்டு வினையில்லை!..'' என்று இனிதாகச் சொல்லி வைத்தனர். வேலினை ஞானத்தின் அடையாளம் என வர்ணிப்பர்.

வேலனின் திருப்பெயர்கள் ஒன்றா!.. இரண்டா!.. - சொல்லச் சொல்ல இனிப்பவை. அல்லலுற்று - அவதுயுற்று அடைக்கலம் தேடி வரும் அன்பர் தம் மனக் குகையில் நித்ய வாசம் செய்து - இருளினை ஓட்டி ஞானப்பிரகாசமாக விளங்குபவன். அதனால் - குகன் எனப்பட்டவன்.


வேறு ஒன்றின் துணையில்லாமல் தானே ஒளிர்ந்து பிரகாசிப்பது எதுவோ அதுவே சுப்ரமண்யம்!.

''..சேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தனாக இருக்கின்றேன்!..'' - என்கின்றான் பரந்தாமன்!.

ஏரகப்பதியில் - எம்பெருமானுக்குக் குருவாக அமர்ந்து ப்ரணவப் பொருளினை உரைத்து,

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கெல்லாம் இனிது

எனும் குறள் தோன்றுதற்கு காரணனாக விளங்கிய பூரணன்!.. யோகக்கலையில் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சகஸ்ராரத்தை நோகி மேலேறும் போது மணி பூரகச் சக்கரத்திற்கு அதிபதி மயில்வாகனன்!.. அதுமட்டுமின்றி ஆக்ஞா (நெற்றி) சக்கரத்தில் ஆறு பட்டைகளுடன் கூடிய ஒளிரும் மணியாக விளங்குகின்றான் என்கின்றனர் கற்றறிந்தோர்.

வேதம் - ''சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!'' - என்று முழங்குவதாக - குருநாதராக விளங்கும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார்.


அருணகிரியார், அண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்க் கொள்ளப்பட்டு, சும்மா இரு சொல்லற என உபதேசம் பெற்று தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். அதன் பின்னர் முருகப்பெருமானால் - அட்சர தீட்சை பெறுகின்றார். முத்தைத் தரு எனும் முதற் பாடல் பிறக்கின்றது.

மீண்டும் தியானம். ''..வயலூருக்கு வா!..'' என பெருமானால் அழைக்கப்பட்டு அங்கேதான் திருப்புகழ் பாட அறிவுறுத்தப்படுகின்றார். அப்படிப் பாடுங்கால் - அங்கே வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியின் தாள் வணங்கிப் பாடுகின்றார். அந்தப் பாடல் தான் - ''..கைத்தல நிறைகனி..'' எனத் தொடங்கும் இனிமையான பாடல்.


அதிலே, ''..வள்ளிநாயகியின் மீது கொண்ட காதலால் துயருறும் சுப்பிர மணியனின் துயர் தீர, தினைக் காட்டுக்குள் யானையாகத் தோன்றி - குறவர் தம் குலக்கொடியாகிய வள்ளி நாயகியுடன், உனக்கு இளையோனாகிய முருகனை மணமுடித்து வைத்த பெருமானே!..''- எனப் போற்றுவது சிந்திக்கத் தக்கது.

அப்படி அருணகிரியாரால் உச்சரிக்கப்பட்ட திருப்பெயர் - மந்திரத்தின் மறு வடிவான சுப்ரமண்யம் என்பதாகும்!..


முருகன் - தமிழருடன் இணைந்த ஒரு சொல் என்று சொல்லி விட்டு என்ன - வடமொழியை கொண்டு வந்து புகுத்துகின்றீர்களே!..


தேவாரத்தில் அப்பர் பெருமான் அழகாகச் சொல்கின்றார்.ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்

மறைக்காட்டுறையும் மணாளன் தானே! (6/23/5)

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

ஆனவன்காண்...


சிவனவன்காண் சிவபுரத்து எம்செல்வன் தானே!

அப்பனே அப்படி - சர்வ வியாபியாகத் திகழ்ந்து பரிபாலிக்கும் போது, மகன் மட்டும் என்ன - தனித்தா இருப்பான்!... மொழிக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலப்பரம் பொருள் அல்லவா - முருகன்!..

அத்தகைய அரும்பொருள் - ஆறுமுகத்தரசு - அருள் மழை பொழிய வேண்டும் என்று அன்பரெல்லாம் கூடிக் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்றுதான் கிருத்திகை!..


அதிலும் ஆடிக்கிருத்திகை - அளவிடற்கரிய பெருமைகளை உடையது!..

ஐந்தாம் படைவீடாகிய திருத்தணிகையில் பெருந்திருவிழா நிகழ்கின்றது!.. லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடி மகிழ்கின்றனர்.


இருமலு ரோக முயலகன் வாத

எரிகுண நாசி விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத

படியுன தாள்கள் அருள்வாயே!..

வருமொரு கோடி அசுரபதாதி

மடிய அநேக இசைபாடி

வருமொரு கால வயிரவராட

வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு

தணிமலை மேவு பெருமாளே!...


- என, எல்லாம் வல்ல எம்பெருமானாகிய கந்தவேளின் மலர்த் தாமரைகளைச் சிந்தித்து - நோய் நொடியில்லாத நல்வாழ்வினைப் பெறுவோமாக!...

கருத்துகள் இல்லை:

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...