*#பிரபஞ்சத்தோடு_கலந்து_எப்படி_உறவாடுவது...*
******************************************************************************************************************************************************
*பிரபஞ்சம் நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது என நிறைய கேள்வி பட்டிருக்கின்றோம்.*
*இதை எப்படி நடைமுறை படுத்துவது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. பிரபஞ்சத்திடம் எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், பணம் வேண்டும், கார் வேண்டும், வீடு வேண்டும், நகை வேண்டும் என கேட்டால் கிடைக்குமா? பிரபஞ்சத்தால் எப்படி இதையெல்லாம் எனக்கு தர முடியும் ? இப்படி பல கேள்விகள்.*
*முதலில் உள்ள அடிப்படை கேள்வி, பிரபஞ்சத்தின் மொழி எது ?*
*பிரபஞ்சத்திடம் என்ன மொழியில் பேசினால் அதற்கு புரியும் ? தமிழில் பேசவா, தெலுங்கில் பேசவா, கன்னடத்தில் பேசவா, அல்லது ஆங்கிலத்தில் பேசவா ? எப்படி பிரபஞ்சத்திடம் தொடர்பு கொள்வது ?*
*உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதை பிரபஞ்சம் எப்படி அறிந்து கொள்ளும் என நமக்கு சந்தேகம் வரலாம்.*
*அப்படி என்றால் பிரபஞ்சத்திற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்பது புலனாகிறது.*
*மொழி தேவை இல்லை என்றால் நாம் அதனுடன் தொடர்பு கொள்ள, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதனுடன் உறவாட பொதுவான ஒரு வழி இருக்க வேண்டுமல்லவா ?*
*மொழியை கடந்து, பல்வேறு கலாச்சாரங்களை கடந்து, அனைவராலும் இந்த பிரபஞ்சத்தோடு இணைய, நமது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைத்து பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் ?*
*இது ஒரு சூட்சுமமான கேள்வி. இதில் தான் இரகசியம் அடங்கி உள்ளது. இந்த இரகசியத்தை அறிந்து கொண்டால், பின் பிரபஞ்சத்தோடு நம்மால் தொடர்பு கொள்ள முடியும்.*
*முதலாவதாக, நாம் கேட்காமலேயே நமக்கு இந்த பிரபஞ்சம் அளித்துள்ளவைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்று, நீர், காடு, மலை, நமது இந்த உடல், நமக்கு தேவையான உணவிற்க்கான ஆதாரம், என நாம் இங்கு உயிர் வாழ தேவையானவற்றை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பது தானே முறையாக இருக்கும்.*
*இரண்டாவதாக , நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் பிரபஞ்சத்திடம் இறுதி பொருட்களை (end product ) கேட்பதை தவிர்த்து, அதன் மூல பொருட்களை கேட்ப்பதுதான் உத்தமமாக இருக்கும்.*
*உதாரணமாக நமக்கு நகை, வண்டி, வீடு என தனித்தனியாக கேட்பதற்கு பதிலாக, நிறைவான செல்வம் வேண்டும் என கேட்பதால், அதை கொண்டு நமது மேற்படி தனித்தனி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.*
*காதல் கைகூட வேண்டும், நல்ல மனைவி மக்கள் வேண்டும், நல்ல தொழில் வேண்டும் என கேட்பதை தவிர்த்து, மன மகிழ்ச்சியான வாழ்கை வேண்டும் என கேட்பதால், நமது சங்கடங்கள் நீங்கி , நம்மை மகிழ்சியாக இருக்க என்னென்ன தேவையோ அவையனைத்தும் நமக்கு இந்த பிரபஞ்சம் உருவாக்கி தரும்.*
*இவை உதாரணத்திற்கு தான் இங்கு குறிப்பிட படுகின்றது. ஆகவே நாம் பிரபஞ்சத்திடம் மூலமானவற்றை (source ) யை கேட்பது தான் சரியானதாக இருக்கும்.*
*மகிழ்ச்சியான, நிறைவான, ஆரோக்கியமான, மற்றவர்களுக்கும் உபயோகமான, சுற்றத்தார் போற்றும் உயர்நிலை வாழ்கை வேண்டும் என கேட்பதால், மற்ற எல்லா கோரிக்கைகளும் இதனுள்ளேயே அடங்கி விடுகின்றதல்லவா.*
*மூன்றாவதாக நாம் அறிந்துகொள்ள போவது தான் முக்கியமானது. இது தான் நமது ஆசைகளை அங்கு கொண்டு சேர்க்கும் மந்திரம். இதை யாரும் அவ்வளவு எளிதில் சொல்லி தர மாட்டார்கள் . ஏனென்றால் இந்த இரகசியம் நல்லவர்கள் கைகளில் மட்டுமே சென்றடைய வேண்டும். இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.*
*நம் தேவைகளை நான்கு நிலைகளாக பிரித்து கொள்ளவேண்டும்.*
*ஒன்றாவதாக, நமக்கு தோன்றும் ஆசைகளை, தவிர்க்க முடியாதது என்றோ, தேவையற்றது என்றோ பிரித்துக் கொள்ள வேண்டும்.*
*அத்தியாவசியமான தேவைகள் திரும்ப திரும்ப மனதில் ஆசையாக தோன்றுகின்றதா என்பதை கவனியுங்கள். ஒரே ஆசை பலமுறை மனதில் தோன்றினால் அல்லது ஒன்றை பற்றியே நாம் சிந்தித்து கொண்டு இருந்தால் அது நமக்கு தேவை என எடுத்துக்கொள்ளலாம் (Desire) . மற்ற சிறு சிறு, அவ்வப்போது தோன்றும் ஆசைகளை தவிர்த்து விடலாம்.*
*இரண்டாவதாக, நமது பலமான ஆசைகள் எண்ணங்களாக வலுபெற்று நமது மனதில் பதிந்துவிடும்.*
*எண்ணங்களுக்கு கற்பனை சக்தி அதிகம் உள்ளது. (Thoughts), இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் நமக்கு காட்சிப்படுத்த வல்லது.*
*மூன்றாவதாக, அவ்வாறு வலு பெற்ற எண்ணங்கள், நம் மனதில் பிம்பங்களாக, காட்சிப் பொருட்களாக ( image) வடிவம் பெறும். மனதில் தோன்றும் பிம்பங்கள் வலு பெற்று ஆழ்மனதில் பதிந்து விடும். நான்காவதாக, நம் மனதில் பதிவேறிய பிம்பங்கள், வடிவங்கள் ஆழப்பதிந்து, அதை குறித்து ஒரு உண்மைத்தன்மையை, மாய உலகை நம் முன்னே உருவாக்கி விடும். அது உண்மை என நம்மை நம்பவைத்து அந்த ஆசைகள் நிறைவேறியது போல தோன்றவைத்துவிடும். கிட்டத்தட்ட சினிமா போல்.*
*இது மிக வலுவான அதிர்வலைகளை நம் மனதில் உருவாக்கி, அந்த அதிர்வலைகள் இந்த பிரபஞ்சத்தை சென்றடையும்.*
*இந்த அதிர்வலைகள் மூலமாக தான் பிரபஞ்சத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்.*
*நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொப்புள் கொடி இந்த அதிர்வலைகள் தான். நம்மில் இருந்து எவ்வளவு அதிர்வலைகள் வெளிபடுகின்றதோ அது பிரபஞ்சத்தை சென்றடைந்து, பன்மடங்கு பெருகி, நம்மிடம் வந்து சேரும் போது, அது நடைபெறுவதற்கான, நிறைவேறுவதற்கான சாத்தியகூறுகளுடன் வந்தடையும். இதுவே சத்தியம்.*
*ஆரம்பத்தில் இந்த அதிர்வலைகள் நம்மிடமிருந்து மட்டுமே வெளிபட்டு கொண்டிருக்கும், அதை மட்டுமே நம்மால் உணரமுடியும், பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அதிர்வலைகளையும் நம்மால் அடையாளம் காணமுடியும். அவ்வாறு நாம் இங்கு உள்ள அதிர்வலைகளை உணர தொடங்கினால், பிரபஞ்சத்துடன் உள்ள தொடர்பு முழுமை பெற்று, பல அபரிதமான தகவல்களை, உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். அதிர்வலைகள் மூலமாக தான் நாம் பிரபஞ்சத்திடம் உறவாட முடியும்.*
*இதுவே பிரபஞ்சத்துடன் உறவு கொள்ளும் எளிமையான வழி. அனைவரும் பயனடைய வாழ்த்துக்கள்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*#வாழ்த்துக்கள்.*
*#வாழ்க_வளமுடன்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக