#நிலங்கள்_பற்றி_சில_தகவல்கள்
♦♦வகைகள்
**நஞ்சை
**புஞ்சை
**கிராம நத்தம்
**நத்தம் புறம்போக்கு
**நீர்நிலை புறம்போக்கு
**மேய்ச்சல் புறம்போக்கு
**அனாதீனம்
**மயானம் புறம்போக்கு
**வண்டிப்பாதை புறம்போக்கு
**களத்துமேடு
**கோவில் நிலம்
♦பசலி :-
கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என அழைக்கப்படுகிறது.
♦ஜமாபந்தி / வருவாய் தீர்ப்பாயம் :-
அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய
வரி வசூல், நிலுவை,
வசூலான தொகைகள் சரியான கணக்குகளில் வரவு வைக்கப்படும் விபரம்
போன்ற சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளவும், சரி பார்க்கவும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜமாபந்தி அதிகாரி / வருவாய் தீர்ப்பாய அதிகாரி கிராமக் கணக்குப் பதிவேடுகள் அனைத்தையும் தணிக்கை செய்வதே ஜமாபந்தி ஆகும்.
♦வஜா / ரத்து :-
பருவநிலை மாறுபாடுகள் / கனமழை / வெள்ளம் / மழையின்மை / வறட்சி போன்ற காரணிகளால் பயிர்கள் சேதமாகும் போது அரசாங்கம் அந்த ஆண்டிற்கான நிலத்தீர்வையை வஜா/ ரத்து செய்து உத்தரவிடலாம்.
நிலஉரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஏற்படும் சேதாரங்களுக்கு இது பொருந்தாது.
♦ஜமீன் முறை :-
மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜமீன்தாரர் என்று பெயர்.
♦ஆயக்கட்டு:-
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து ( ஆறு/குளம்/கால்வாய்)
நீர் பெற பதிவு செய்யப்படும் நிலம்.
♦மகசூல்-விளைச்சல்
♦நன்செய்/நஞ்சை:-
பாசன வசதி கொண்ட நிலம்
♦புன்செய்/புஞ்சை :-
பாசன வசதி குறைந்த நிலம்/
மழையை நம்பி விவசாயம்
நடைபெறும் நிலம்
♦கிராம தானம் :-
ஒரு கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக (சத்திரங்கள்/சுகாதார மையம் போன்றவற்றிற்கு)
நிலத்தை ஒதுக்குவது கிராம தானமாகும்.
♦பட்டா:-
குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது காலிமனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஆவணம்.
♦சிட்டா:-
ஒரு கிராமத்தில் ஒரு உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம்.
♦அடங்கல்:-
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு/சர்வே எண்/பயன்பாடு/இடத்தின் அமைவிடம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம்.
♦புல எண் :-
சர்வே எண்/நில அளவை எண்
♦விஸ்தீரணம் :- பரப்பளவு
♦சுவாதீனம் :-
நிலத்தின் மீதான உரிமை
♦நத்தம் புறம்போக்கு :-
அரசுக்குச் சொந்தமான இடம் (தனிநபர் பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரி செலுத்தாவிடில் அந்த நிலம் புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாகப் பதிவு செய்யப்படுவது.
♦கிராம நத்தம் :-
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம்.
♦அனுபோகம் :-
பாத்தியதை/உரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக