அரிசியை உலையில் கொதிக்க வைத்து வடித்துச் சோறாக்குவது தமிழர்களின் மரபாக இருந்துவந்தது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், அதற்கு நேரமில்லை.
Pressure Cooker என்னும் உயர் அழுத்த கலனிலும், electric rice cooker எனப்படும் மின்-சமையற்கலனிலும் சோற்றை சமைத்து வேலையை முடிக்கிறோம்.
இதனால் விளைவது என்ன?
பிரஷர் குக்கர் எனப்படும் உயரழுத்த கலத்தில் சமைக்கும்போது அரிசி 15 பௌன்ட் அழுத்தத்தில் 121 °C (250 °F), வெப்பத்தில் சமைக்கப்படுகிறது.
ஆனால், எந்தப் பொருளும், 97 டிகிரிக்கு அதிகமான வெப்பத்தில் சமைக்கப்பட்டால், அதிலுள்ள உயிர் சத்துக்கள் அழியும் என்று அறிவியல் சொல்லுகிறது.
அரிசியில் 90% உள்ள கார்போஹைட்ரேட் தவிர, 8 சதவீதம் புரோட்டீனும், 2 சதவீதம் கொழுப்புச்சத்தும் உள்ளன. இது தவிர, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலெனியம், இரும்பு, ஃபோலிக் ஆசிட் எனப்படும் B-9 வகை வைட்டமின் சத்தும், தியாமின், நியாசின் என்னும் சத்துக்களும் உள்ளன.தியாமின் என்னும் சத்துப்பொருள், நமது இதயத்தைப் பாதுகாக்கும் அரிய பொருளாகும். தியாமின் குறைபாடு உள்ளவர்களுக்கே, ஹார்ட் அட்டாக் எனப்படும் இதயத்தாக்குதல் நிகழ்கிறது.
நியாசின் என்பது, B-3 வகை வைட்டமின் ஆகும். இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. நீரழிவு நோயை ஏற்படுத்தும் திறனை உடலுக்கு அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், மூளை செயல்பாட்டுக்கு உறுதுணையாகவும், நமது தோலின் ஆரோக்கியத்தைக் காக்கவும் தேவைப்படும் பொருளாக விளங்குகிறது.
இந்த சத்துக்களில், வைட்டமின் சத்துக்களும், தியாமின் என்னும் சத்துப்பொருளும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அழிந்துவிடுகின்றன. நியாசினும் அப்படியே.
கார்போ ஹைட் ரேட் எனப்படும் ஸ்டார்ச், 120 டிகிரி செல்சியசுக்கு சூட்டாக்கப்படும்போது, ஜெலட்டினைசேசன் (Gelatinization)
என்னும் பக்குவத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த ஜெலட்டின் என்பதன் பொருள் பசை என்பதே ஆகும். சோறு பசையாகிறது என்பதே இதன் பொருள்...
ஆகவே, 121 டிகிரி வெப்பத்தில் நாம் சமைக்கும் அரிசிச் சோறு, எந்த சத்துமில்லாத பசையே ஆகும். இந்த பசை, விரைவில் கரைந்து, ரத்தத்தில் சர்க்கரை உற்பத்திக்குத் துணை போகிறது.
நமது சர்க்கரை நோய்க்கும், இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் மூல காரணம், பிரஷர் குக்கர்களே ஆகும்.
சோற்றினை உலையில் இட்டு வடிக்கும் முறையில் வெப்ப அளவு 97 டிகிரியிலிருந்து 99 டிகிரிவரைதான் இருக்கும். இதற்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இங்கே இல்லை.
சோற்றினை குக்கர் என்னும் காலனிடம் கொடுத்து நஞ்சை சமைத்து உண்ணாதீர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக