புதன், 24 நவம்பர், 2021

முருங்கைக்கீரை

*_முருங்கை_* 

இதன் அனைத்து பாகங்களும் உபயோகம் ஆனது . 

இதன் விதை காய், இல்லை, இலையின் ஈர்க்கு, மரம், வேர், பூ அனைத்துமே பயனுள்ளவை.

முருங்கைக்கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கைல போக்குவது. 

மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். 

வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். 
பிற மருந்துகளின் பக்க விளைவுகைள அகற்ற இதன் சாறு உதவும். 

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 

சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகைள நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். 

கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். 

கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். 

முருங்கைக்கீரையின் இலைச் சாற்றைப் பிழிந்து 10மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். 
சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

 உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல்வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. 

குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். 

பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். 

உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.
முருங்கைப் பூ
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது புஷ்டி உண்டாகும்
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 

கருத்துகள் இல்லை:

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...