ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கந்தரலங்காரமும்...சிறப்புகளும்...

கந்தரலங்காரமும்...சிறப்புகளும்...
முருகன்
‘ முருகு’ என்றால் அழகு, முருகன் என்றால் ‘அழகானவன்’ என்று பொருள். அலங்காரம் என்றால் ஒப்பனை. எதுகையும், மோனையும் துள்ளி விளையாட அழகுற புனையப்படும் கவிநடைக்கும் அலங்காரம் என்றே பொருள். இது ஒரு வகை செய்யுளணி. இனிய தமிழ் சொற்களை இசை நயத்தோடு கோர்த்து அழகிய பாமாலையாக தொடுத்து அதை தமிழ்க்கடவுளான கந்தவேலுக்கு அணிவித்து அலங்காரம் செய்ய நினைத்தார் அருணகிரிநாதர்.

அவ்வாறே தான் இயற்றிய அந்த அழகிய பாமாலைக்கு கந்தரலங்காரம் என்ற திருப்பெயரையும் சூட்டினார். முருகப்பெருமானின் வாகனம் மயில், படை வேற்படை, கொடி சேவற்கொடி. அவரது அழகு, பெருமை, வீரம், படை, கொடி, வாகனம் இவற்றின் மேன்மைகளையும், அந்த அன்பு தெய்வத்தின் எண்ணற்ற திருநாமங்களின் சிறப்புகளையும் கவிநயத்தோடு எடுத்து இயம்புகிறது கந்தரலங்காரம்.

கந்தபெருமானின் பெருமையை பகிர்வதோடு அறவாழ்வின் மகிமை, மரண பயத்தை வெல்லும் தன்மை, உலக வாழ்க்கையின் நிலையாமை, செல்வத்தின் நிலையற்ற தன்மை, சிவயோகம் முதலான தத்துவங்களையும் விளக்குகிறது.

கந்தரலங்காரத்தை தினமும் படிப்பவர்களுக்கு மனதில் துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் பெருகாது. துன்பங்கள் தூளாகும். சொர்க்கம் கைக்கூடும். இவர்களுக்கு தீமை செய்ய எவராலும் இயலாது

பழைய சோறு போதும்.. அறுவை சிகிச்சை வேண்டாம்: அசத்தும் அரசு மருத்துவர்கள்

பழைய சோறு போதும்.. அறுவை சிகிச்சை வேண்டாம்: அசத்தும் அரசு மருத்துவர்கள்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைதுறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார்.
பழைய சோறு
அல்சர் காரணமாக குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குடல் அயற்சி தற்போது பரவலாக 100ல் 30 பேருக்கு காணப்படுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா நமது உடலின் ஆரோகியத்துக்கு தேவைப்படுகிறது. விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவை தயாரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்த பாக்டீரியாக்கள்.

ஆண்டி பயாடிக் பயன்பாடு, குடல் புழு, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை காரணமாக இந்த பாக்டீரியாக்கள் அழிந்து போகலாம். இதனால் வயிற்றுப்போக்கு முதல் தீவிர வயிறு வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் கூடும். ஆங்கில மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரை நோயின் தீவிரம் பொருத்து செய்யப்படும்.மேலும் படிக்க... பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா..?

குடல் சம்பந்தமான இந்த கோளாறுகளுக்கு பழைய சோறு பேருதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைதுறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார். நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துடன் சேர்த்து பழைய சோறும் கொடுப்பதால் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.

பழைய சோறு சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாவை எடுத்துக் கொள்ளும். அவைதான் உடலுக்கு தேவை. மண் பானையில் பழைய சோறு செய்தால் நல்ல பலன் கொடுக்கும். கடந்த நான்கு வருடங்களாக அல்சர் என வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க மூன்று ஆண்டு கால ஆய்வு 2.7 கோடி செலவில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.நோயாளிகள் மட்டுமல்லாமல் துறையில் உள்ள மருத்துவர்களும் பழைய சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தானும் தன் குடும்பத்தினரும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வருவதாக மருத்துவர் அமுதன் கூறுகிறார். தன் மனைவிக்கு ஏற்பட்ட குடல் அயற்சி சீராகியிருப்பதாகவும், தனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும், பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் கருவி கொண்டு இந்த ஆய்வு மார்ச் மாதம் முதல் நடத்தப்படும். கடல் பகுதி, மருத்துவமனை, கிராமப்புறம் என வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும் போது பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் என கணக்கிடப்படும். வெவ்வேறு வகைவகை அரிசி பயன்படுத்தப்பட்டு அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
First published: January 26, 2021

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

நிலவரைபடம் FMB

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி
எனக்கு பகிர்ந்தவர்க்கு நன்றி

புதன், 10 பிப்ரவரி, 2021

பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்கள்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். 

பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். 

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. 

அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு.

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்
(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 
எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 

20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். 

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

வியாழன், 4 பிப்ரவரி, 2021

என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்”



*அவர் ஒரு பிரபல ஜோதிடர்*

அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல.! அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  

எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.  

பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.  

கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  

அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.!

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?  

இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.!  

ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

தொழிலாளி தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது.? என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* 
அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.!

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. 
அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி.! ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது !

. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது.! தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு..!!

ஏதும் முடிவதில்லை நம்பிக்கையின் தொடக்கம் நாளும் சிறக்கும்..!!

 *கேட்டு வியந்தது..* 

வாழ்வு தரும் மரங்கள்!

வாழ்வு தரும் மரங்கள்!

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும், மூன்று யுகங்கள் தங்கி அருள் புரிவர்.

உங்களுக்காக மரங்கள் பற்றிய நூலிருந்து
மரங்களை பற்றிய சற்றே வித்தியாசமான
சுவாரசியமான தகவல்களை
தொகுத்து வழங்கியிருக்கிறோம்

கண்டிப்பாக படிக்கவும்

‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.

ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.

பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். 
அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன.

அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. 
புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.

ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே 
அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.

சாஸ்திர முறைப்படி, இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில்  இடம் உண்டு என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். 

தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.

அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி
ரைட்ஸ் உருவானது.

நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.

நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.

இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.

ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். 
அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லையம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார் ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது என்று மறைந்து விட்ட தில்லை மரத்தின் அருமைகளை அடுக்குகிறார். தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் என்றும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும் என்கிறார். செஞ்சந்தன மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் மோசஸ் சினாய் ஏரியில் வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத் தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும் என்கிறார். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம் என்ற யோசனையையும் அளிக்கிறார்  

நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம்,வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி,வேள்வேல்,தழுதாழை,ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் 
மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை அறிந்த நாம் 
அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது

மரங்களை பொறுத்து
அதன் தன்மையை சுறுக்கமாக அறியலாம்

நெல்லி-இந்தியாவின் எதிர்காலம்,

மருதம்-இதய நோய் நீக்கி,

வெப்பாலை-பல நோய் நிவாரணி,

முருங்கை-தாதுபுஷ்டி மரம்,

வேள்வேல்-மேக நிவாரணி,

கொய்யா-ஏழைகளின் ஆப்பிள்,

கருங்காலி-கருப்பு வைரம்

தொகுப்பு 
வாழ்வு தரும் மரங்கள்
 
இப்படி நமக்கு வாழ்வு
தரும் மரங்களைப் படித்து, 
அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை வளர்ப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
இனி ஒரு விதி செய்வோம்
அதில் வீதி எங்கும் மரம் வளர்ப்போம்.
   - பகிர்ந்த நண்பருக்கு நன்றி!

திங்கள், 1 பிப்ரவரி, 2021

அபிராமி அந்தாதி -100 பாடல் பலன்.

அபிராமி அந்தாதி -
100 பாடல் பலன்.

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள். 

2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள். 

4. உயர்பதவிகளை அடையலாம். 

5. மனக்கவலை தீரும். 

6. மந்திர சித்தி பெறலாம். 

7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும். 

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். 

9. அனைத்தும் கிடைக்கும். 

10. மோட்ச சாதனம் பெறலாம். 

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள். 

12. தியானத்தில் நிலை பெறுவார்கள். 

13. வைராக்கிய நிலை அடைவார்கள். 

14. தலைமை பெறுவார்கள். 

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள். 

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். 

17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம். 

18. மரணபயம் நீங்கும். 

19. பேரின்ப நிலையை அடையலாம். 

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். 

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும். 

22. இனிப்பிறவா நெறி அடையலாம். 

23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும். 

24. நோய்கள் விலகும். 

25. நினைத்த காரியம் நிறைவேறும். 

26. செல்வாக்கும் 
சொல்வாக்கும் பெருகும். 

27. மனநோய் அகலும். 

28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம். 

29. எல்லா சித்திகளும் அடையலாம். 

30. விபத்து ஏற்படாமல் இருக்கும். 

31. மறுமையில் இன்பம் உண்டாகும். 

32. துர்மரணம் வராமலிருக்கும். 

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும். 

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும். 

35. திருமணம் நிறைவேறும். 

36. பழைய வினைகள் வலிமை அழியும். 

37. நவமணிகளைப் பெறுவார்கள். 

38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள். 

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 

40. பூர்வ புண்ணியம் பலன்தரும். 

41. நல்லடியார் நட்புப்பெறும். 

42. உலகினை வசப்படுத்தும். 

43. தீமைகள் ஒழியும். 

44. பிரிவுணர்ச்சி அகலும். 

45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.

46. நல்நடத்தையோடு வாழ்வார்கள். 

47. யோகநிலை அடைவார்கள். 

48. உடல்பற்று நீங்கும். 

49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும். 

50. அம்பிகையை நேரில் காண முடியும்.

51. மோகம் நீங்கும். 

52. பெருஞ் செல்வம் அடைவார்கள். 

53. பொய்யுணர்வு நீங்கும். 

54. கடன்தீரும்.  

55. மோன நிலை கிடைக்கும். 

56. அனைவரையும் வசப்படுத்தலாம். 

57. வறுமை ஒழியும். 

58. மன அமைதி பெறலாம். 

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். 

60. மெய்யுணர்வு பெறலாம். 

61. மாயையை வெல்லலாம். 

62. எத்தகைய அச்சமும் வெல்லலாம். 

63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம். 

64. பக்தி பெருகும். 

65. ஆண்மகப்பேறு அடையலாம். 

66. கவிஞராகலாம்.

67. பகைவர்கள் அழிவார்கள். 

68. நிலம்,  வீடு போன்ற செல்வங்கள் பெருகும். 

69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள். 

70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம். 

71. மனக்குறைகள் தீரும். 

72. பிறவிப்பிணி தீரும். 

73. குழந்தைப்பேறு உண்டாகும்.

74. தொழிலில் மேன்மை அடையலாம். 

75. விதியை வெல்வார்கள். 

76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள். 

77. பகை அச்சம் நீங்கும். 

78. சகல செல்வங்களையும் அடைவார்கள். 

79. அபிராமி அருள்பெறுவார்கள்.  

80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 

81. நன்னடத்தை உண்டாகும். 

82. மன ஒருமைப்பாடு அடையலாம். 

83. ஏவலர் பலர் உண்டாகும். 

84. சங்கடங்கள் தீரும். 

85. துன்பங்கள் நீங்கும். 

86. ஆயுத பயம் நீங்கும்.

87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள். 

88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம். 

89. யோக சித்தி பெறலாம். 

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். 

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள். 

92. மனப்பக்குவம் உண்டாகும். 

93. உள்ளத்தில் ஒளியுண்டாகும். 

94. மனநிலை தூய்மையாக இருக்கும். 

95. மன உறுதி பெறும். 

96. எங்கு பெருமை பெறலாம். 

97. புகழும் அறமும் வளரும். 

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம். 

99. அருள் உணர்வு வளரும். 

100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.  

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...