ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கந்தரலங்காரமும்...சிறப்புகளும்...

கந்தரலங்காரமும்...சிறப்புகளும்...
முருகன்
‘ முருகு’ என்றால் அழகு, முருகன் என்றால் ‘அழகானவன்’ என்று பொருள். அலங்காரம் என்றால் ஒப்பனை. எதுகையும், மோனையும் துள்ளி விளையாட அழகுற புனையப்படும் கவிநடைக்கும் அலங்காரம் என்றே பொருள். இது ஒரு வகை செய்யுளணி. இனிய தமிழ் சொற்களை இசை நயத்தோடு கோர்த்து அழகிய பாமாலையாக தொடுத்து அதை தமிழ்க்கடவுளான கந்தவேலுக்கு அணிவித்து அலங்காரம் செய்ய நினைத்தார் அருணகிரிநாதர்.

அவ்வாறே தான் இயற்றிய அந்த அழகிய பாமாலைக்கு கந்தரலங்காரம் என்ற திருப்பெயரையும் சூட்டினார். முருகப்பெருமானின் வாகனம் மயில், படை வேற்படை, கொடி சேவற்கொடி. அவரது அழகு, பெருமை, வீரம், படை, கொடி, வாகனம் இவற்றின் மேன்மைகளையும், அந்த அன்பு தெய்வத்தின் எண்ணற்ற திருநாமங்களின் சிறப்புகளையும் கவிநயத்தோடு எடுத்து இயம்புகிறது கந்தரலங்காரம்.

கந்தபெருமானின் பெருமையை பகிர்வதோடு அறவாழ்வின் மகிமை, மரண பயத்தை வெல்லும் தன்மை, உலக வாழ்க்கையின் நிலையாமை, செல்வத்தின் நிலையற்ற தன்மை, சிவயோகம் முதலான தத்துவங்களையும் விளக்குகிறது.

கந்தரலங்காரத்தை தினமும் படிப்பவர்களுக்கு மனதில் துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் பெருகாது. துன்பங்கள் தூளாகும். சொர்க்கம் கைக்கூடும். இவர்களுக்கு தீமை செய்ய எவராலும் இயலாது

கருத்துகள் இல்லை:

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...