செவ்வாய், 15 ஜூன், 2021

பாம்பு எலி பல்லி கடிக்கு பாரம்பரிய விஷ வைத்தியம்

பாம்பு எலி பல்லி கடிக்கு பாரம்பரிய விஷ வைத்தியம்

பாரம்பரிய விஷ வைத்தியம்!

தொடர் :- 1

விஷ தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல்!!

உங்கள் தோல் நோய் ஏன் குணமடையவில்லை?

    நோய் தோன்றிய உன்மையான காரணத்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்காத கரணத்தால் அந் நோய்  குணமாகால் இருக்கலாம்!

( எலி. பாகம் 1 )

     தோல் நோய்கள் உருவான காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சரியான சிகிச்சையை எடுத்து கொள்ளாததால்......
     பல ஆண்டுகள் ஆகியும் பல வகைகளில் மருத்துவம் பெற்றும் உங்களுக்கு நிரந்தர குணம் கிடைக்காததே உன்மை காரணம்...
     இதோ..... யாருக்காவது தோல் நோய் உருவானதுக்கு.....யாராவது இப்படி ஒரு காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை வழங்கியிருந்தால் கூறுங்களேன்!
     
      நம் வீட்டில் நம்முடைய அனுமதியில்லாமல் வாழும் எலிகள் தங்களது புணர்ச்சி நேரத்தில் உடனே இணைவதில்லை. 
   ஆண் பெண் இரண்டும் சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தங்களை மறந்து அவைகளுக்கு வசதியாக கிடைக்கும் இடங்களில் ஓடி விளையாடி வியர்த்து ஒழுகிய பின்னரே இணையும்! 
இது வீட்டில் மட்டுமல்ல அலுவலகங்களில், மண்டபங்களில் எங்கு வேண்டுமானாலும் நம் கவனத்திற்க்கு தெரியாமல் நடை பெறலாம்!
       அவ்வாறு உயரத்தில் இணையும் போது இதை அறியாமல் கீழே நிற்பவரின் உடலின் மீது.....
எலியின் புணர்ச்சியினால் வெளிப்படும் ஒருசில  துளி சுக்கிலம் தெறித்து பட்டால்....
         சில மணி நேரத்திற்க்கு பின் அவ்விடத்தில் சிறு நமைச்சல் உண்டாகி, ஒருவாரத்தில் ஒரு ரூபாய் துண்டு அளவு படர் தாமரை ( இது படர் தாமரை அல்ல ) போல் தோன்றி பின் நாளடைவில் உடலில் உள்ள தோல் முழுவதும் பரவி பல ஆண்டுகளாக நீங்காத துன்பத்தை கொடுக்கும்!
         இந் நோய் உருவாகிய காரணத்தையும், இதை விரைவில் குணப்படுத்தும் பாரம்பரிய சிகிச்சையும்....
     பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்துவரும் பாரம்பரிய வைத்திய குடும்பத்தினரின் கையடக்கத்திலேதான்  இன்றும் உள்ளது!
      







பாரம்பரிய விஷ வைத்தியம் தொடர் 2

எலி  விஷயம் பிரிவு 2

நேற்று வெளியிட்ட எலி பாகம் 1ல் எலிகளின் புணர்ச்சியின்  நேரத்தில் வெளியேறும் சுக்கிலம் சிதறி மனித உடலில் வெளிப்பகுதியில்  படுவதால் என்ன நிகழும் என்பதை பார்த்தோம். 
 
 இன்று...
      இந்த சுக்கிலமானது மனிதனின் வாய் வழியாக உடலின் உள்ளே சென்றால் என்ன நிகழும் என்பதை பார்ப்போம்!
    புணர்ச்சி வேளையில் எலிகள் ஓடி பிடித்து விளையாடும் போது அவைகளின் வியர்வை துளிகளும் அதன்பின் அவைகள் ஆவேசமாக புணரும் போது அதன் சுக்கிலமும் தரையை நோக்கி கீழே வரும். 
      அந்த நேரத்தில் நாம் பயன் படுத்தக்கூடிய நீர் அருந்தும் குவளை, உணவருந்தும் தட்டு குடிநீர் சேகரிப்பு பாத்திரங்கள் , திறந்திருந்த  பழங்ங்கள்.  போன்றவைகளிலும் உண்பதற்க்கு திறந்து வைத்த உணவுகளிலும் 100•/• விழ வாய்ப்புண்டு....
      இவ்வாறு அறியா தன்மையுடன் இப்  பாத்திரங்கள் பழங்கள் போன்றவற்றை கழுவி சுத்தபடுத்தாமலும் உணவை மூடிவைத்து பாதுகாக்காமல் பயன் படுத்துபவர்களின் குடலில் இந்த சுக்கிலம் நீருடனோ பழச்சாறுடனோ உணவுடன் கலந்து சென்று குறுகிய நாளிலே தோல் நோயை உருவாக்கும்.

     உடலில் சத்துக்குறைவால் வரும் வெண் புள்ளி நோயை போல் காட்சியளிக்கும் . வெண்புள்ளிக்கான சிகிச்சை இதற்க்கு பயன் தராது.
சுந்தரி என்னும் எலி ( நச்செலி, முஞ்சீறு) கடிப்பதாலும் இந்நோய் தோன்றும். ஆனால் இரண்டுக்கும் சிகிச்சை விதிமுறைகள் வேறு வேறு.
     இந்நோய்களை இனம் கண்டறிந்து தனி சிகிச்சை கொடுத்து குறுகிய நாளில் குணப்படுத்த பாரம்பரிய வம்சா வழி வைத்தியர்களால் மட்டுமே முடியும்!






விஷ வைத்தியம்!

 விஷ வைத்தியம் தொடர் 3

தோல் நோய்களை உருவாக்கும் விஷ கடி என்னும்  உன்மை காரணங்கள்!

உங்கள் தோல் நோய்கள் வெகு நாட்களாகியும் குணமாகாத காரணம்...? 

 நோய் உருவான காரணம் தெரியாமல் சிகிச்சைகள் பெறுவதால்  தோல் நோய்கள் குணமாக100 •/• வாய்ப்பில்லை! 

     நீர் பாம்பு, பாகம் 1
 
      இது பாம்பு இனத்தில் ஒன்றாகும் எவ்வளவு நேரமும் தண்ணீரினுள் இருக்கும் தரையிலும் உலா வரும் பல்லில் பெரிய அளவில் விஷம் ஏதும் கிடையாது! சில் விஷமே இருக்கும். அந்த விஷம் அமாவாசை, பவுர்ணமி தினங்களில், சோர்வுடன் சில உடல் நலக்குறைவுகளை காண்பிக்கும்.

     குழம் ஏரி ஆறு போன்ற நீர் நிலைகளிலும், நீரை தேக்கம் செய்து விவசாயம் செய்யப்படும் நெற் பயிற் போன்ற நீகட்டு நிலங்களிலும் இவைகள் நீரினுள் காணப்படும்.!

     இவைகள் மிதிபடும் போது தன்னை மிதித்துள்ள காலசுற்றி அழுத்தம் கொடுத்து  தன்னை விடுவிக்க  முயற்ச்சி செய்யும்.

      அவ்வாறு அழுத்தும் போது அதன் வால் நுனிக்கும் சற்று மேலாக வயிற்றுக்கு சற்று கீழாக....

    உடலின் உள்ளே சென்று வெளியே வரும் வகையில் இரண்டு முள்கள் இருக்கும்....

     நீர் பாம்புகள் யாருடைய காலையாவது சுற்றிய  வேளயில். தன்னுடைய பிடி இறுகுவதற்காக இம் முள்களை வெளியே இறக்கி அழுத்தும்...

   அவ்வாறு அழுத்தும் நேரத்தில் அந்த முள்களிலிருந்து எண்ணை பசை போன்ற ஒரு திரவம் வெளியேறி ஒரு சில துளிகள் காலில்  குத்துப்பட்ட பகுதியினுள் சென்றுவிடும்...

     பின்னால் தொல்லை தரக்கூடிய இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை கணக்கில் கொள்ளாத அப்பாவிகள்....

   ஏதோ சிலேப்பி மீன் கடித்தது , கெழித்தி மீன் கொட்டியது என பிறரிடம் கூறி வேடிக்கை பேசுவார்கள்....
 
   சில காலங்களில்....இந்நிகழ்வு மறந்து போக.....

     அந்த குத்துபட்ட இடங்களில்  தோல்களில் புள்ளி புள்ளியாய் ஆரம்பித்து....

     அடுத்து கீழே வரைந்து காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் ஆரம்பித்து......

  அதன் பின் அடைஅடையாக பொருக்கை பொருக்கையாக உடல் முழுவதும் பரவிவிடும்.....

     பாதிக்கப்பட்ட நபரும் ஏவனோ மாந்திரீகம் செய்துவிட்டான் என அதற்க்கான பரிகாரம் தேடுவதும்..... 

    பலர் கூற சிகிச்சை தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து நிவாரணம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக அலைவதுமாக இருக்கும்....
 
அனால் இந்நோய் காரணத்தை கண்டறிந்து குறுகிய காலத்தில் குணப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள் பாரம்பரிய வைத்திய வம்சத்தில் பிறந்த வைத்தியர்களே.





பாரம்பரிய விஷ வைத்தியம்! 

தொடர் 4

     விஷ வைத்திய நோய் குறிகுணம்!

      பல அண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் குணமாகாத காரணம்......

         அது உருவாவதற்க்கான காரணம் என்ன வென்று கண்டறிந்து.....

        தனிபப்பட்ட வகையில் அதற்குரிய வைத்தியம் செய்யாததே!
 
       தலைப்பு :- 
                       பாம்பு இனம் 1 

       பாம்பன் பெயர் :-
                               சாரைப்பாம்பு......

       கேரளாவில்  ஒரு சில வகுப்பினரிடையே.....
     சாரை பாம்புகளால் வீட்டில் கார் பங்களாவுடன் செல்வம் கொழிக்கும்  குழந்தைபாக்கியம் உண்டாகும்  என பல்வேறு ஐதீகங்கள் உண்டு! 
      இரவில் ஒருவர் போர்வையை மூடி அயர்ந்து  தூங்கும் போது சாரைபாபாம்பானது அவரது கால்மீது ஏறி ஊர்ந்து தலை வழியாக கீழிறங்கினில் மேற்க்கூறியுள்ளபடி ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் என்பது அவர்களது நம்பிக்கை!
    ஆகவே அவர்கள் வீட்டில் சாரைப்பாம்பு புகுந்ததால்....
      சாரைபாம்புக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வீட்டில் வளர்ந்து வந்த  நாய் பூனை போன்றவற்றை அன்றைய தினமே மீண்டும் திரும்பி வராத வகையில் வீட்டை விட்டு விரட்டி விடுவார்கள்!





பாரம்பரிய விஷ வைத்தி தொடர் 5
    
   
    
     எலி விஷயம் பிரிவு 3 

      தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல் ! 
    
    பல ஆண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் ஏன் குணமாகவில்லை என தாங்கள் அறிந்து கொள்ள இம் முயற்சி!

      எலிகள் புணர்ச்சிக் கொள்ள இணைவதற்க்கு....
முன் சில மணி நேரங்கள் ஓடி பிடித்து விளையாடிய பின்னரே.....
   உச்சநிலை அடைந்து புணரும் என இதற்கு முந்தைய பாகங்களில் கூறி இருக்கிறேன்.
   
  அவ்வாறு புணர்ச்சியின் போது மேலிருந்து தவறி கீழ் நோக்கி வரும்போது....
  கீழே திறந்திருக்கும் உணவுகள், குடிநீர் பானை, போன்றவைகளில் விழுந்தால்....
    அந்த உணவு தண்ணீர் போன்றவற்றில் பயத்தில்அங்கும் இங்கும் ஓடி அல்லது நீச்சல் அடித்து  சிறுநீர் கழித்தவாறு முயற்சி செய்து 
தப்பி ஓடி விடும்! 
    ஆக அந்தநேரத்தில் அந்த எலிகளின் சுக்கில துளிகள், வியர்வை, சிறுநீர் என மூன்று விஷங்களும் கலந்த தண்ணீர் மற்றும் உணவுகளை தெரியாத்தனமாக உண்பவர்களுக்கு.....

     ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மூன்று ஆண்டுகளுக்குள்ளால்...
 
   தலையில் ஓரிடத்தில் சிறு பொடுகு போன்று தோன்றி....

   பின் அது அடை அடையாக தலை முழுவதும் பரவி...
    
    சிறுக சிறுக சாலையிலிருந்து கீழ் இறங்கி உடல் முழுவதும் பரவி தீராத துன்பத்தை கொடுக்கும்....
   
  எலிகள் கூட்டமாக தங்கி வாழும் சிறையிலிருந்து வெளிப்படும்  ஒருவித கெட்டவாடை  இவர்கள் உடலில் பார்த்தவுடன் வெளிப்பட்டு அருகில் நிற்பவர்களை மூக்கை பிடிக்க வைக்கும் என்பது சங்கடத்துக்குரிய விஷயம்! அன்றைய தினம் அந்த எலிவிழுந்தபண்டத்தை குடும்பத்தினர் சேர்ந்து தொண்டர்கள்தான்....
அவர்கள் அனைவருக்கும் இந்நோய் உருவாகும்.....
ஆக.....
 யாரோ மாந்திரீகம் செய்து விட்டார்கள் என மடத்தனமாக கொவில் குளங்களுக்கு அலைந்தால் நோய்குணமாகாது....

    இந் நோயின் காரணம் மற்றும் தன்மைகளை கண்டறிந்து அதற்குண்டான சிகிச்சை கொடுத்து நிரந்தர தீர்வு வழங்க உண்மையான  பாரம்பரிய வைத்தியர்களால் மட்டுமே இயலும்!






பாரம்பரிய விஷவைத்திய தொடர் 6

   பல்லி விஷம் பிரிவு  1
  
   தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல் !

  பல ஆண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் குணமாகாத காரணம் ஏன் என்பதையும் அறிந்து  கொள்ளுதல்...
    
   பல்லி வீட்டில் வளருவதுதான்!
  
       வீட்டினுள்ளே நுளையும் ஈ கொசுக்களை  முடிந்த அளவு பிடித்து சாப்பிடும். 
  யாத்திரை செல்பவர்களுக்கு சகுணம் கூறும் என்ற ஐதீகம் உள்ளது.
    அப்படி பல்லியினால் நல்ல செயல்கள் இருந்தாலும்....
  ல்லியின் சிறு நீர் நமது உடலில் எங்காவது பட்டாலும் வாய் உதட்டில்   அருகில் சிறு கொப்பளங்கள் ஆரம்பித்து...
அப்புறம் அந்த கொப்பளங்கள் விரிந்து.... உதடுகள் முழுவதையும் ஆக்கிரமிக்கும்!
  
   இந்த கொப்புளங்களை ஆரம்ப கட்டத்தில் காலையில் புல்களில் படிந்திருக்கும் பனி நீரை விரலால் தொட்டு நனைத்து  குணப்படுத்துவர்.

   திறந்திருக்கும் பழங்கள் உட்பட உணவுகளில் பல்லியின் சிறுநீர் பாடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது ! 
 அந்த உணவுகளும் விஷ தன்மை கொண்டவைகளே!
 
     பாத்திரங்களை திறந்து வைத்து உணவு சமைக்கும் போது, மேல ஊர்ந்து செல்லும் பல்லி தவறி விழுந்து வெந்து குழைந்து உணவோடு உணவாக கரைந்துவிடும். 

 அறியாதனமாக அவ்வுவணவை  உண்பவருக்கு முன்றுமணி நேரத்தில் கடுமையான வாந்தியும் தலை சுற்றலும் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம். 
    இன்னும் சிலருக்கு நாற்பது நாட்கள் கடந்ததும் உடலில் அங்கங்கே றோஸ் நிறத்தில் சிறு வட்ட வட்டமாக இதுதொடர்பாக அடையாளங்கள் தோன்றும்!

     அப்போது பல்லி உணவுதான் காரணம் என்று தெரியாததாலும், தெரிந்தாலும் இதற்க்கு இதுதான் வைத்திய சிகிச்சை என தெரியாமலும் சிகிச்சை ஒழுங்கில்லாத காரணத்தால்... 

 அந்த றோஸ் நிறுத்தின்  வட்டங்கள் கரு நீல நிறத்திற்கு மாறி, விரிந்து பெரிதாகி பின் துர் நாற்றத்துடன் கறுப்பு நிறமாக அடை அடையாக உடல் முழுவதும் பரவி தாங்காத துன்பத்தை கொடுக்கும்!

  அனுபவம் வாய்ந்த உன்மையான பாரம்பரிய வைத்தியர்கள் இந்நோய் எதனால் வந்தது என கண்டறிந்து.....

 முற்றிய நோயையும் தொன்னூறு நாட்களிலிருந்து நூற்றி இருபதுநாட்களில் பூரணமாக குணப்படுத்துவார்கள்! 





பாரம்பரிய விஷவைத்திய தொடர் ...7 
  
 கொம்பேறி மூர்க்கன் என்னும் பெயருடன் கடும்  விஷம் கொண்ட நாகப் பாம்பு...

இது ஒருவரை தீண்டினால்...

அந் நபர்  மரணம்  எய்தி அவரை புதைத்து அல்லது எரித்து இறுதி சடங்கு  செய்யப்பட்டதை நேரில் பார்த்த பின்னரே  இப் பாம்பு சாந்தியடையும்! 

   அந்த காலங்களில்  இப்பாம்பு தீண்டி உயிர் சேதம் ஏற்ப்படும் வகையில் இருப்பவரை....
வைத்தியன்  வந்து சிகிச்சை செய்து குணப்படுத்துவதை தடுக்க வைத்தியன்  வரும் வழிப்பாதையில் அமர்ந்து சீறும்!
  
     வைத்தியத்திற்கு என பிறவி எடுத்த வைத்த்தியர்கள் விஷ வைத்தியத்திய  பயற்சியின்போது தவம் இருந்து தீட்ச்சை பெற்றிருக்கும் காரணத்தால் இந்த பாம்பு  விலகி சென்றுவிடும்...

    ஆயினும் வேகமாக அங்கும் இங்கும் சென்று மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்து உயரமான ஏதாவது மரத்தில் ஏறி உச்சி கொம்பில் உட்கார்ந்து கடி பட்டவரை படுக்க வைத்து சிகிச்சை வழங்கும் வீட்டை பார்த்து படம் எடுத்தபடி சீறிக் கொண்டே  இருக்கும்!

 அது சீறச்சீற விஷமானது கடிபட்டவரின் மூளை மண்டலத்திற்கு ஏறி உயிர் பிரியும் தருவாய்க்கு செல்லும்!
 ( விஞ்ஞான பிரியர்கள் நம்பமாட்டார்கள் )

    சிகிச்சை வழங்கிக்கொண்டு இருக்கும் வைத்தியன் தீட்ச்சை பெற்ற பாரம்பரிய வைத்தியராக  இருந்தால் நிலமையை உணர்ந்து கொண்டு கருட மந்திரம் ஜெயிக்க.... 

   ஒருசில நிமிடங்களில் கருடன் ஒலி எழுப்பியவாறு அப்பகுதியில் வட்டமிடும்!
  
   உடனடியாக மரத்தின் உச்சி கொம்பில் அமர்ந்திருந்த பாம்பானது, தன் உயிரை காப்பாற்றி கொள்ள கருடனுக்கு தெரியாமல் மெதுவாக இறங்கி ஏதாவது பொந்துக்குள் நுளைந்துவிடும்.
 
 அதன் பின் வைத்தியர் தன் சிகிச்சையை தொடர்ந்து செய்து உயிரை காப்பாற்றுவார்!
  
  கிராம புறங்களில் தீட்சை பெறாத வைத்தியர்களும் இச்சிகிச்சை  செய்யும்போது பாம்பு மரத்தின் உச்சியில் இருந்து சீறுகிறது என்று தெரிந்தால்....

 மர நிழல்கள் இல்லாத வெட்டா  வெளியில்  சிறு கோழி குஞ்சிகளை கட்டியிட  அக் கோழிக்குஞ்சிகளை பார்த்ததும் செம்பருந்துகள் வட்டமிடும் உடனே பாம்பு பயந்து அடங்கி இடமாறிவிடும்!
 
    தற்போதைய விஞ்ஞான மருத்துவத்தில் இந்த கொம்பேறி மூர்க்கன் என்ற பாம்பு தீண்டினால் உயிர் காப்பாற்றும் வாய்ப்பில்லை! 

  இப் பாம்புக்கு கருநாகம்,  கார்க்கோடன் என்ற வேறு பெயர்களும் உள்ளன! 

இது சுதந்திர குல வம்சத்தை உடையது!

   ஓணான் எலி தவளை நத்தை நண்டு குருவிகள் கோழிக்குஞ்சி போன்ற அசைவ உணவுகளை உண்டு முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து இயற்க்கை எய்யும். 

    இது தீண்டியவரை பாரம்பரிய வைத்தியர்களால் காப்பாற்ற இயலும்!

  இவற்றின் ஒரு தனித்தன்மை என்னவென்றால்...
 
     பழமை வாய்ந்த ஆலயங்களில் உள்ள பொருட்களையோ ஆபரணங்கள்யோ யாராவது திருடிச்சென்றால்.... அங்கே வீற்றிருக்கும் தெய்வங்களின் உத்தரவுபடி.....
அந்த நபரை தேடிச்சென்று கண்டவுடன் நேர்  எதிரே முன்னோக்கி ஏறிச்சென்று கடித்து படுகொலை செய்யும்! அவருக்கு வைத்தியம் செய்தால் பலன் கிடைக்காது! 
   அந்தநேரத்தில் அப் பாம்பை தனி மனிதனாகவோ அல்லது கும்பலாகவோ அடித்து கொன்றால்....
 அவர்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் விமோசனம் இல்லாத  பெரும் சாப தீடுவந்து சேரும்!

  அன்புடன்:- பாரம்பரிய சித்த வைத்தியர் நெல்சன் ராஜ் உரிமையாளர் ராஷியா சித்த வைத்திய சாலை ( ராஷியா சித்தா பாலி கிளீனிக் )ஆலமூடு ஜங்சன் எட்டணி கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம்  9514284915. 7598080021,W app 7598684915

எளிய மருத்துவ குறிப்புகள் 1

எளிய மருத்துவ குறிப்புகள். எபநேசர் ஐயா

எளிய மருத்துவ குறிப்புகள்
.. நன்றி ; எபநேசர்..
........
3வயது குழந்தை திக்கி திக்கி பேசுகிறது அது சரியாக புது மண் பானையில் துளசியை ஊற வைத்து அதிகாலையில் பருக கொடுக்க சரியாகும்..
..........

கருப்பை நீர்க்கட்டிகள் சரியாக மருந்து கருவேப்பிலை கசாயம் இரவில் பருக சரியாகும்..

..........
மூக்கடைப்பு, சைனஸ், தலை  நீர் கோர்வை சரியாக சரியாக மருந்து நீர் பிரம்மி ஆயில் பயன்படுத்தி கொள்ளலாம்..

..........
தைராய்டு சுரப்பி பாதிப்பு உள்ளவர்கள் முட்டைகோஸ், முள்ளங்கி உணவில் தவிர்த்தல் நலம்..

......

டான்சிலிட்டிஸ் தொண்டைப்புண் சரியாக பூண்டு அரைத்து சாறை தொண்டைப் பகுதியில் தேய்க்க சரியாகும்.. 
.........
இரத்தத்தில் Eosinophis அளவு 16 உள்ளது. குறைய ஏதாவது தீர்வு என்ன கூறுங்களேன்...

தினமும் பீட்ரூட் 30ml சாறு பருக சரியாகும்..

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்
அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

1.வசியம்:-

*1.* சீதா செங்கழுநீர் - ராஜவசியம்
*2.* நீல ஊமத்தை - ஸ்திரீ வசியம்
*3.* வெள்ளை எருக்கன் வேர் - லோக வசியம்
*4.* விஷ்ணுகிரந்தி - சொர்ன வசியம்
*5.* கருத்தபாசம்பை - சர்வ வசியம்
*6.* வெள்ளை குன்றிவேர் - மிருக வசியம்
*7.* பொற்றலை கையான்தகரை - தேவதை வசியம்
*8.* செந்நாயுருவி - மனித வசியம்

2. மோகனம்:-

*1.* பொன் ஊமத்தை - ஸ்திரி மோகனம்
*2.* கோரைக்கிழங்கு - மிருக மோகனம்
*3.* வெள்ளை ஊமத்தை - பதவி மோகனம்
*4.* ஆலம் விழுது - ராஜ மோகனம்
*5.* கஞ்சா - சொர்ண மோகனம்
*6.* நன்னாரி - ஜனமோகனம்
*7.* மருள் ஊமத்தை - தெய்வ மோகனம்
*8.* கிராம்பு - சர்வ மோகனம்

3. ஸ்தம்பனம்:-

*1.* கட்டுக்கொடி - ஜல ஸ்தம்பனம்
*2.* பாலக்குரண்டி - அக்னி ஸ்தம்பனம்
*3.* பிரண்டை - கிராணி  ஸ்தம்பனம்
*4.* நத்தை சூரி - காய  ஸ்தம்பனம்
*5.* சக்தி சாரணை  - ஆயுத ஸ்தம்பனம்
*6.* பூமிசர்க்கரைகிழங்கு -சுக்கில ஸ்தம்பனம் 
*7.* குதிரை வாலி - கெர்ப ஸ்தம்பனம்
*8.* நீர்முள்ளி - வியாதி ஸ்தம்பனம்

 4‌. உச்சாடனம் :-

*1.* நரி விரட்டி - மிருக உச்சாடனம்
*2.* மான்செவிக் கண்ணி - நாலி உச்சாடனம்
*3.* சுண்ட வேர் - பூத உச்சாடனம்
*4.* கண்டன் கத்திரி - ராஜ உச்சாடனம்
*5.* தேள் கொடுக்கு செடி - விஷ உச்சாடனம்
*6.* நாறுகரந்தை - வியாதி உச்சாடனம்
*7.* கொட்டான் கரந்தை - மோகன உச்சாடனம்
*8.* பெரும் கிலு கிலுப்பை - தெய்வ உச்சாடனம்.
  
5.வித்வேசனம் :-

*1.* கருத்தி காக்கிலை - தெய்வ  எச்சனை
*2.* வெள்ளை காக்கிலை - சர்வ தெய்வ எச்சனை
*3.* திருகு கள்ளி -பூத எச்சனை
*4.* செங்கன்தாரி - சர்வ எச்சனை
*5.* காட்டாமணக்கு - சர்வ பூத எச்சனை
*6.* கீழ் நெல்லி - பூமி எச்சனை
*7.* ஆடு தீண்டபாளை - சர்வ வித்துவேசனம்
*8.* பீனைக்காலி- வியாதி எச்சனை

6. ஆக்ருஷணம் :-

*1.* சிறு முன்னை - தெய்வ ஆக்ருஷணம்
*2.* குப்பைமேனி - துட்டருக ஆக்ருஷணம்
*3.* சிறிய நங்கை - பிசாசு ஆக்ருஷணம்
*4.* அழுகண்ணி - சர்வ ஆக்ருஷணம்
*5.* துடரி - மிருக ஆக்ருஷணம்
*6.* தலை சுருளி - ராஜ ஆக்ருஷணம்
*7.* உள்ளொடி விடிவெர்வு - பெண் ஆக்ருஷணம்
*8.* கார்திகை கிழக்கு - விஷ ஆக்ருஷணம்

7.பேதனம் :-

*1.* கோழி அவரை - தெய்வ பேதனம்
*2.* காட்டு செம்பவளை -  லோக பேதனம்
*3.* வட்டத் துத்தி - அக்னி பேதனம்
*4.* சங்கம் வேர் - பூத பேதனம்
*5.* மாவிலங்கு - தெய்வ பேதனம்
*6.* நீர்மேல் நெருப்பு - பிசாசு பேதனம்
*7.* சீந்தி - சத்ரு பேதனம்
*8.* பாதிரி -ரோக பேதனம்

8. மாரணம் :-

*1.* கார்த்திகை கிழங்கு - பிசாசு மரணம்
*2.* நெறிவிகம் - சர்வ மாரணம்
*3.* ஒடிவை - மிருக மாரணம்
*4.* கொடிவேலி - வியாதி மரணம்
*5.* நச்சுப்புல் - விச மாரணம்
*6.* மறு தோன்றிய  - பூத பிசாசு மாரணம்
*7.* பச்சை நாவி - மனித மாரணம்
8. எட்டி - விஷ மாரணம்.

36 மலர் மருத்துவம் பயன்கள்

36 மலர் மருத்துவம் பயன்கள்
 மலர்_மருந்து

மனம் சம்பந்தப்பட்ட
 பிரச்சினைகளுக்கு தீர்வு
மலர் மருந்துகளின் தன்மையும் 
அதன் பயன்களும்

1. அக்ரிமோனி- Agrimony

"கவலை, கடுமையான வேதனை"

 வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஆழ்ந்த கவலை மற்றும் மன வேதனையை போக்கி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிது. மது மற்றும் புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றாமல் செய்கிறது.

1. பார்ப்பதற்கு மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் ஆனால் மனதிற்குள் வேதனை படுவார்கள்.
2. தனக்கு உள்ள நோயையும் மன வேதனையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பார்கள்.
3. மற்றவர்களிடம் சகஜமாக பழகுவார்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.
4. தனிமையை விரும்பாதவர்கள்
6. வேடிக்கையாகவும் தமாசாக பேசும் குணம் படைத்தவர்கள்.
7.சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள்.
8. கவலைகளை போக்க புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாவார்கள்.
9. துன்பத்தை மறக்க கோமாளித் தனமாக நடந்துகொள்ளுதல்.
10.தனிமையில் இருக்க பயந்துகொண்டு யாருடனாவது இருக்க விரும்புதல்.
11.இளமையை விரும்புதல், எதிர்காலத்தை எண்ணி வருந்துதல்.

 ஹீதர் நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர் ஆனால் அக்ரிமோனி நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை யாரிடமும் கூறமாட்டார்கள்.
 
 
2. ஆஸ்பென் - Aspen
"காரணம் இல்லாத பயம்"

சிலருக்கு காரணமே தெரியாமல் அடிமனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய பயத்தைப் போக்கி மனதிற்குள் தைரியத்தை கொடுக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மையை போக்கும்.

1. காரணமே இல்லாமல் எப்போதும் ஒருவித பயத்துடனே இருப்பார்கள்.
2. இருட்டைக் கண்டு பயப்படுதல்.
3. இயற்கை சீற்றங்களை கண்டு பயப்படுதல்.
4. நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுதல்.
5. கெட்ட கனவைக் கண்டு பயப்படுதல்.
6. மரணத்தை கண்டு பயப்படுதல்.
7. இடி, மின்னலுக்கு பயப்படுதல்.
8. ஊசி போட்டுக்கொள்ள பயப்படுதல்.
9. விபத்து நடந்து விடுமோ என்ற பயம்,
10. இவர்கள் தாம் பயப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்.
11. ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும். மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.
12. பயத்தால் அமைதியின்றி இருத்தல், செயல்களில் பின்வாங்குதல், நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு தயங்குதல்.
 மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும் ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.

 
 3. பீச் - Beech

"எல்லா விஷயங்களிலும் சட்ட ஒழுங்கை எதிர்பார்த்தல்"

   சிலர் எல்லாவற்றிலும் ஏதோ குறை கூறிக்கொண்டே இருப்பர். எதிலும் திருப்தி இருக்காது. அத்தகைய நபர்கள் பீச் எடுத்துக்கொண்டால் எல்லாவற்றிலும் ஒரு நிறைவையும், திருப்தியையம் காணும் மனநிலையில் ஏற்படும்.
 
1. எல்லா செயல்களிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
2. எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
3. நீதி நேர்மை தவறி நடந்துகொள்பவர்கள் மீது கடுமையாக கோபப் படுவார்கள். அவர்களைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள்.
4. வீடு மற்றும் பணியிடங்களில் ஒரு அழகையும் ஒழுங்கையும் கடைபிடிப்பார்கள். அந்த அந்த பொருள் அந்த அந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். மீறினால் கோபப்படுவார்கள். இதனால் நண்பர்கள் உறவினர்கள் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
5. கடுமையான சொற்களை பிறயோகித்தல், துருவித்துருவி குற்றம் கண்டுபிடித்தால்.
6. தலைக்கனம், திமிர், தற்பெருமை கொள்ளுதல்.
7. உடுத்தும் உடை அணிகலன்கள் ஆகியவற்றில் ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள்.
8. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றால் அங்கே அலங்கோலமாக இருக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்துவார்கள் அவர்களுக்கு ஒழுங்கு பற்றி அறிவுரை கூறுவார்கள்.

4. சென்டாரி - Centuary
 
"கோழைத்தனம், அடிபணிந்து போதல்"

 இது மனதில் தோன்றும் கோழைத்தனமான எண்ணங்கள் மற்றும் மற்றவர்களுக்கு அடிமைபோல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை போக்கி எல்லாச் செயல்களையும் தைரியமுடனும் வீரத்துடனும் ஈடுபடச் செய்யும்.
1. இவர்கள் மிகவும் கோழைத்தனமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள்.
2. யார் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார்கள்.
3. இவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு மற்றவர்கள் சொன்ன வேலைகளை செய்வதில் கருத்தாக இருப்பார்கள்.
4. இவர்கள் மனவலிமை குன்றியவர்கள்.
5. எதையும் எதிர்த்து பேசத் துணிவின்றி அடிமையாக நடந்து கொள்வார்கள்.
6. தனது உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் அடக்கி எப்போதும்சோர்வுடனே கானப்படுவார்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு சென்டாரி நல்ல மருந்து
.வைன் நபர்கள் மற்றவர்களை வேலை வாங்குவார்கள். சென்டாரி நபர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்வார்கள்.

 
 
5. செராட்டோ - Cerato
"தன்னம்பிக்கை இன்மை, பிறர் ஆலோசனையை எதிர்பார்த்தல்"

இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். மற்றவர்கள் உதவியை நாடாமல் சொந்தமாக ஆலோசிக்கும், முடிவெடுக்கும் திறனை ஊக்குவிக்கும்.

1. தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
2. எந்த காரியத்திலும் சரிவர முடிவு எடுக்கத் தெரியாதவர்கள்.
3. அப்படியே முடிவெடுத்தாலும் அதில் நம்பிக்கை இல்லாமல் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
4. எல்லா விஷயங்களிலும் கேள்வி கேட்டுக்கொண்டேஇருப்பார்கள்.
5. மற்றவர்களின் ஆலோசனையின் படியே காரியங்களை செய்வார்கள். இதனால் தோல்வியும் அடைவார்கள்.
6. தனக்கு எந்த வகை மருத்துவம் தேவை என்பதுகூட தெரியாமல் மற்றவர் ஆலோசனையின்படி மாறிமாறி கடைசியில் தவறான முடிவை எடுப்பார்கள்.
7. எந்த இடத்தில் என்ன பேசவேண்டும் எதைப் பேசவேண்டும் என்று தெரியாதவர்கள்.
8. எடுத்த காரியங்களை சரியாக முடிக்கும் முன்பே அடுத்த காரியங்களில் ஈடுபடுபவர்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு செராட்டோ நல்ல மருந்து.

6. செர்ரி ப்ளம் - Cherry plum

"கோபம், சகிப்புத்தன்மை இன்மை, உணர்ச்சி வசப்படுதல்"

  எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், சகிப்புத்தன்மை இல்லாமல் இருத்தல், உடலில் ஏற்படும் வலிகள், எரிச்சல் ஆகிய பிரச்சனைகளை போக்கி மனதில் அன்பு, அமைதி, நிதானத்தை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணத்தை போக்கும். 

1. அதிக கோபம் உணர்சிவசப் படுதல் ஆகியவற்றிற்கு செர்ரி ப்ளம் நன்கு வேலை செய்யும். கோபத்தையும் உணர்சிவசப்படுவதையும் கட்டுப்படுத்தும்.
2. கைகால் வலி, உடல் வலி, காயங்களினால் ஏற்படும் ஏற்படும் வலிகள் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் புலம்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தரும். எல்லா வலிகளையும் கட்டுப்படுத்தும்.
3. கோடையில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தை தணிக்கும்.
4. உணர்ச்சி வசப்பட்டு கண்டபடி கத்துவது, கையில் கிடைத்த பொருள்களை எடுத்து வீசுவது போன்ற குணங்களை கட்டுப்படு
கட்டுப்படுத்தும்.
5. மனைவி குழந்தைகளைஅடித்து துன்புறுத்தி மனநிறைவு கொள்ளும் நபர்களுக்கு இது சிறந்த மருந்து.
6. காபி, புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்ட நினைப்பவர்களுக்கு இது நல்ல பயன்தரும்.
7. கோபம், ஆத்திரம், வெறித்தனமாக எல்லைமீறிய செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்திமனதிற்கு அமைதியைத் தரும்.

7. செஸ் நட் பட் - Chest Nut Bud
"ஞாபகமறதி, சோம்பல்"

 இது உடல் சோர்வு மன சோர்வு மற்றும் ஞாபகமறதியை போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கும். எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அதிகரிக்கும்.

1. அதிக சோம்பலும் ஞாபகமறதியும் கொண்டவர்கள்.
2. ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.ஊன்றி கவனிக்க மாட்டார்கள்.
3. இவர்களுக்கு ஒரு விஷயத்தை ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி புரியவைக்க வேண்டும்.
4. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்வார்கள். செய்யும் தவறுகளை அன்றே மறந்துவிட்டு மீண்டும் அதே தவற்றை திரும்ப செய்வார்கள்.
5. எடுத்த காரியத்தை முடிக்காமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.
6. உழைக்காமல் சுலபமான வழியில் அல்லது குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள்.
7. படிக்கும் பாடங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் பள்ளிக்கு செல்ல மறுப்பவர்கள். பள்ளிக்கு அல்லது பணிக்கு செல்லாமல் ஊர்சுற்றுபவர்கள்.
 ஹனிசக்கிள் நபர்கள் கடந்தகால தவறுகளை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவர். ஆனால் செஸ்ட் நட் பட் நபர்கள் கடந்தகால தவறுகளை மறந்துவிடுவர்.

 
8. சிக்கரி - Chicory

"மற்றவர் கவனிப்பை எதிர்பார்த்தல், பிறர் துணையை நாடுதல்"

 இது மனதில் தோன்றும் சுயநல எண்ணங்களை போக்கி பொது நலனின் அக்கரை கொள்ளச் செய்கிறது. ஒரு காரியத்தில் பிறர் துணையை நாடும் எண்ணத்தை போக்கி தன்னால் சுயமாக செய்யமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

1. எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று கவலைப்படுவார்கள்.
2. எப்போதும் மற்றவர் துணையை எதிர்பார்ப்பார்கள்.
3. எங்கேயும் வெளியில் செல்லவேண்டி இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்கள் துணையுடன் செல்வார்கள். தனியாக செல்ல அச்சப்படுவார்கள்.
4. அதிக சுயநலம் கொண்டவர்கள்.
5. மற்றவர்கள் தன்மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்க்காக உடல் நிலை சரியில்லாத நோயாளிபோல் காட்டிக்கொள்வார்கள்.
6. தனிமையை போக்க நாய் பூனை போன்ற பிராணிகளிடம் பழகுவார்கள்.
7. பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள், கஞ்சத்தனம் கொண்டவர்கள்.
8. மற்றவர்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள்.
9. மற்றவர்கள் விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள். 10. ஒரு செய்தியை மிகைப்படுத்தி கூறும் தன்மையை கொண்டவர்கள்.

 
9. க்ளமெட்டீஸ் - Clematis

"கனவு,கற்பனை, மூர்சையடைதல், சுயநினைவிழத்தல்"

மயக்க நிலை, சுய உணர்வு இல்லாமை இருத்தல், மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றுதல், செயலில் கவனமின்மை போன்ற சூழலில் கிளமெட்டிஸ் பயன்படும்.

1. இவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல் எப்போதும் ஆகாய கோட்டை கட்டி வாழ்பவர்கள்.
2. எப்போதும் எதைப்பற்றியேனும் பகல் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.
3. அதிகமாக ஞாபகமறதி இருக்கும்.
4. செய்யும் தொழிலில் ஈடுபாடு இருக்காது.
5. எப்போதும் ஏதாவது சிந்தனையில் இருப்பார்கள்.
5. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
6. கடினமான சிக்கலான வேலைகளை தவிர்ப்பார்கள்.
7. ஆடம்பரமாக பணக்காரராக இருப்பது போல் கற்பனை செய்து மகிழ்வார்கள்.
8.தூக்கத்தை அதிகம் விரும்புவார்கள்.
9. தனக்கு மிகவும் பிரியமானவர்கள் இறந்துவிட்டால் தானும் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று எண்ணுவார்கள்.
10. தனிமையை விரும்புவார்கள்.

 
10. க்ராப் ஆப்பிள் - Crab Apple

"சுத்தம் விரும்பி, அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் "

எந்த பொருளை பார்த்தாலும் அருவெருப்புக் கொள்ளுதல் ,எரிச்சலடைதல், மிகவும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கவனம் செலுத்தி மனதை வருத்திக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். 

1. சின்ன சின்ன அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
2. அசுத்தத்தைக் கண்டால் இவர்களுக்கு பிடிக்காது. வாயையும் மூக்கையும் பொத்திக் கொள்வார்கள்.
3. அசுத்தமான இடங்களுக்கு போவதை தவிர்ப்பார்கள். அருவெருப்பு கொள்வார்கள்.
4. அடிக்கடி வீட்டை சுத்தம் செய்தல், கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டே இருத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
5. அடிக்கடி குளிப்பது கழுவிய பொருள்களை மீண்டும் மீண்டும் கழுவுவது.
6. அடுத்தவர்கள் பயன்படுத்திய தொடவோ பயன்படுத்தவோ மாட்டார்கள்.
7. வெளியிடங்களில் ஹோட்டலில் சாப்பிட்ட தயங்குவார்கள்.

 
11. எல்ம் - Elm

"சந்தேகம், கவலை "

 தங்கள் திறமையின் மேல் சந்தேகம் கெள்ளுதல். தனக்கு போதுமான திறமை இல்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றுதல், எந்த செயல்களிலும் ஈடுபட தயக்கம் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த மருந்து பயன்படுகிறது.

1. தாம் செய்கின்ற செயல்களைப் பற்றி சரியாகத்தான் செய்கின்றோமா என்ற எண்ணத்துடனே செய்வார்கள்.
2. செய்த செயலில் முழு திருப்தி இருக்காது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணுவார்கள்.
3. பொறுப்புகள் அதிகமாகும்போது ஐயோ இவற்றை சமாளிக்க முடியுமா என்று திகைத்து போவார்கள்.
4. அரசியல், மருத்துவம், பொதுப்பணியில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்க யோசிக்கும்போது இந்த மருந்து கைகொடுக்கும்.

 
12. ஜென்ஷன் - Gentian

"எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் துயரமான சம்பவங்களைமட்டுமே நினைத்தால், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது"

எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களை மட்டும் எண்ணி வருந்துதல், மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றுதல், தோற்றுவிடுவோமோ என்ற சிந்தனை. ஆகிய குணமுடையவர்கள் ஜென்ஷன் எடுத்துக் கொள்ளாலாம். 

1. எப்போதும் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. ஒருவித சோகமாகவே காணப்படுவார்கள்.
2. எதிர்மறையான எண்ணத்துடன் சிந்திப்பார்கள். எதிர்மறையான பேச்சுக்களையே பேசுவார்கள்.
3. எதிலும் நம்பிக்கை இன்றி உற்சாகம் இல்லாமல் காணப்படுவார்கள்.
4. எனக்கு விதித்தது இவ்வளவுதான், நான் நினைத்தது எதுவுமே நடக்காது எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்புவார்கள்.
5. வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் எண்ணம் இருக்காது. தோற்றுத்தான் போவோம் என்று நினைப்பார்கள்.
இத்தகைய எண்ணம் உடையோர் ஜென்சன் எடுத்துக்கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் மாறி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

13. கோர்ஸ் - Gorse

"நம்பிக்கையின்மை, விரக்தி"

நம்பிக்கையின்மை ,எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இனி நம் நோய் குணமடைய போவதில்லை என்று அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு கோர்ஸ் சிறந்த மருந்து.
 
1.இனி இறந்து விடுவோம் என்று கருதுபவர்கள்.
2. எத்தனையோ டாக்டர்களை பார்த்தாச்சு எல்லாம் வேஸ்ட் என கருதுபவர்களுக்கு இது தன்நம்பிக்கை கொடுக்கும்.
3. நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள்.(ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் )
4. இந்த மருந்து மட்டும் நம்மை காப்பாத்தவா போகுது என்று எதோ கடமைக்கு மருந்து சாப்பிடுவது. போன்ற அவநம்பிக்கை எண்ணம் உடையோருக்கு இம்மருந்து நம்பிக்கை கொடுக்கும்.

 
14. ஹீதர் - Heather

"அதிக கவலை, மன வேதனை அதை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்"

அளவுக்கு அதிகமாக கவலை மற்றும் மனவேதனை கொண்டோர். அதை மற்றவர்களிடம் சொன்னால் மனதில் உள்ள பாரம் குறையும் என கருதுவோர் ஹீதர் எடுத்துக் கொள்ளலாம். 

1. இவர்கள் தங்களுடைய வேதனை, கவலை, வறுமை, நோய் பற்றி எப்போதும் மற்றவர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
2. அப்படி சொல்வதினால் மன பாரம் குறைத்ததாக கருதுவார்கள்.
3. மற்றவர்கள் தமது பேச்சை கவனிக்கிறார்களோ இல்லையோ அதைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.
4. மற்றவர்கள் சொல்வதை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். அக்கறை படவும் மாட்டார்கள்.
5. தனிமையை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
6. மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எல்லோரிடமும் சகஜமாக தொட்டுப் பேசும் பழக்கம் உடையவர்.
ஊர் சுற்றுவதில் விருப்பம் கொண்டவர்.
7. அறுவை கேஸ் என்று பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் ஹீதர் சாப்பிட்டால் பேச்சில் அடக்கம் அமைதி உண்டாகும் தன் பணியில் சிறப்பாக ஈடுபடுவர்.

 
15. ஹால்லி - Holly

"பொறாமை, வெறுப்பு, விரோதம், போன்ற எதிர்மறை குணங்களை கொண்டவர்"

 மற்றவர்கள்மீது அதிக பொறாமை, வெறுப்பு, விரோதம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தால் அவர்கள் ஹால்லி எடுத்துக் கொள்ளலாம் இதனால் தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும்.

1. ஹால்லி தேவையில்லாமல் அதிகமாக உணர்சி வசப்படுபவர்களுக்கான மருந்தாகும்.
2. போட்டி, பொறாமை, சந்தேகங்களால் எப்போதும் மனதில் நிம்மதி இல்லாமல் கடுகடுப்புடன் இருப்பார்கள்.
3. நண்பர்கள், உறவுகளுக்குள் பிரிவினை உண்டாக்குவார்கள்.
4. தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பேசி அடுத்தவர்களை நிம்மதி இழக்கச் செய்து தானும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
5. விட்டுக்கொடுக்கும் தன்மையோ பணிவுடன் நடந்து கொள்ளும் தன்மையோ இவர்களிடம் இருக்காது.
6. எப்போதும் கோபத்தோடும் பொறாமை எண்ணத்துடன் இருப்பதால் உடல் நலன் குன்றி கானப்படுவார்கள்.
இத்தகைய குணமுடையோர் ஹால்லி எடுத்துக்கொண்டால் மனதில் அன்பு பாசம் கருணை சகிப்புத்தன்மை அதிகரித்து எல்லோரிடமும் பிரியமுடன் நடந்தது கொள்வார்கள்.
கணவன் மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டைக்கு இது ஏற்ற மருந்து.

 
16. ஹனிசக்ள் -Honeysuckle

"கடந்த காலத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால்"

 தினமும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட விருப்பு வெறுப்புகள், சம்பவங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்போருக்கு ஹனிசக்ள் ஏற்றது.

1. கடந்த காலத்தில் தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பர்.
2. நடக்க வேண்டியதை விட்டுவிட்டு கடந்தகால நிறைவேறாத ஆசைகள் கனவுகள் பற்றி பேசி புலம்பிக்கெண்டிருப்பர்.
3. உடன் இருப்பவர்களை மறந்துவிட்டு இறந்து போனவர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்.
4. சிறுவயதில் நான் ராஜா மாதிரி இருந்தேன் ராணி மாதிரி இருந்தேன் என்று புலம்புவார்கள்.
இப்படிப்பட்டமனிதர்கள் ஹனிசக்ள் எடுத்துக் கொண்டால் கடந்தகால நினைவுகளை துயரங்களை மறந்து நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ்வார்கள்.

 
17. ஹார்ன் பீம் -Hornbeam

"சோர்வு, கலைப்பு, மலைப்பு"

தனக்கு போதுமான ஆற்றல் இல்லை என்று கருதி சோம்பேரித் தனமாக இருத்தல், காலையில் எழும்போதே கடும் சோர்வு, ஏதாவது ஊட்டச்சத்து பானம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுவோர் ஹார்ன் பீம் எடுத்துக்கொள்ளலாம். 

1. வேலை செய்ய தொடங்கும் முன்பே அய்யோ இதை என்னால் செய்ய முடியுமா என்று மலைத்துப் போவார்கள்.
ஆனால் வேலை செய்ய தொடங்கிவிட்டால் திறம்பட செய்து முடிப்பார்கள்.
2. காலையில் எழும்பொழுதே இந்த வேலையை எப்படி செய்வேனோ என்று ஒரு சோர்வுடன் கானப்படுவார்கள்.
3. இவர்கள் மனதாலும் உடலாலும் சோர்வு மிக்கவராக கானப்படுவார்கள் ஆனால் வேலை செய்ய தொடங்கினால் படபடவென்று உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள்.
இவர்களுக்கு ஹார்ன் பீம் கொடுத்தால் எந்த வித சோர்வும் இன்றி உற்சாகமாக வேலை செய்வார்கள் இவர்கள் நல்ல திறமைசாலிகள்.

18. இம்பேஷன்ஸ் - Impatiens

"அவசரம், நிதானம் இன்மை, எரிச்சல்"

எரிச்சல் அடைதல், எதிலும் நிதானமின்மை, எல்லாவற்றிலும் அவசரம். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டோர் இம்பேஷன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். 

1. இம்மருந்து பொறுமை இல்லாத எதை எடுத்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வேலை செய்யும் அவசர காரர்களுக்கு ஏற்ற மருந்து.
2. எந்த காரியத்திலும் நிதானம் இல்லாமல் அவசர அவசரமாக தவறான முடிவுகளை எடுப்பார்.
3. எப்போதும் பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் இருப்பார்கள்.
4.எந்நேரமும் டென்ஷனாக அடுத்தவர்களை அதட்டிக் கொண்டும் இருப்பார்கள்.
5. தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்வார்கள். மற்றவர்கள் உதவியை நாடமாட்டார்கள்.
6. இவர்கள் நடை உடை பாவனையில் ஒரு அவசரம் இருக்கும். மற்றவர்களையும் அவசரப் படுத்துவார்கள்.
7. வேகமாக பேசுவதும் விரைவாக புரிந்துகொள்ளும் தன்மை உடையவர்கள்.
இவர்கள் இம்பேஷன்ஸ் மருந்தை எடுத்துக் கொண்டால் மனதில் பொறுமை நிதானம் ஏற்படும் எடுக்கப்படும் காரியம் எல்லாம் வெற்றி பெரும் .

 
19. லார்ச் - Larch

"தன்னம்பிக்கை இன்மை, தோல்வி மனப்பான்மை"

தன்னம்பிக்கை சிறிதும் இல்லாமல் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல்; நமக்கு தோல்விதான் கிட்டும் நமக்கு திறமை போதாது என்று கருதிக் கொண்டிருப்போர் லார்ச் எடுத்துக்கொள்ளலாம். 

1. பல திறமைகள் இருந்தும் தன்நம்பிக்கை இல்லாமல் இருப்பாவர்களுக்கு இம்மருந்து கைகொடுக்கும்.
2. திறமை இருந்தும் தன்னால் முடியாது என்ற எண்ணத்தால் முன்னுக்கு வராமல் இருப்பவர்கள்.
3. பணியை தொடங்கும் முன்பே தோல்வி பயத்தில் பின்வாங்குபவர்.
4. ஒரு விஷயத்தை தாங்களே சொல்ல பயந்து கொண்டு நண்பர்களிடம் சொல்லி சொல்லச் சொல்லுவார்கள்.
5. சபையில் பேச அஞ்சுவார்கள். தடுமாறுவார்கள்.
இத்தகைய குணமுள்ளோர் லார்ச் எடுத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். தைரியம் பிறக்கும்.
நேர்முகத் தேர்வுகளில் பங்குகொள்ள இது மிகவும் உதவும்.

 
20. மிமுலஸ் - Mimulus

"பயம்"

 தெளிவாக தெரிந்த காரணங்களினால் ஏற்படும் பயம் அதை வெளியே சொல்ல வெட்கப்படுதல் இத்தகைய மனப்போக்கு உடையோர் மிமுலஸ் எடுத்துக்கொள்ளலாம்

1. குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடிகின்ற பயம்.
2. மேடையில் பேச பயம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள பயம், தனியாக வெளியூர்களுக்கு செல்ல பயம்,
நாய், பூனை, கரப்பான் பூச்சியை கண்டு பயம்.
3. பரிட்சை எழுத பயம், ஆசிரியர் அடித்துவிடுவாரோ என்று மாணவர்களுக்கு ஏற்படும் பயம்.
இப்படி சொல்லத் தெரிந்த பயங்களுகு மிமுலஸ் நல்ல மருந்து. இது இவ்வித பயங்களை போக்கி தைரியத்தை தன்னம்பிக்கையை கொடுக்கும்
மாணவர்களுக்கு பெண்களுக்கு இம் மருந்து அதிகம் பயன்படும்.

21. மஸ்டர்டு Mustard
"காரணம் இல்லாத கவலை, சோர்வு"

 காரணம் ஏதும் இன்றியே சிலர் எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பர் அதனால் சோர்வாகவும், உடல்நலக் குறைவாகவும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் காணப்படுவர் .மஸ்டர்டு அவர்களுக்கு ஏற்ற மருந்து.

1. இவர்கள் எதற்காக கவலைப் படுகிறோம் என்று தெரியாமல் கவலைப் படுவார்கள்.
2. என்னமோ தெரியலை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பார்கள்.
3. மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழக மாட்டார்கள். எப்போதும் எதையயோ பரிகொடுத்த மாதிரி ஊம் மென்று இருப்பார்கள்.
4. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் அவர்களை அறியாமலேயே கண்ணீர் வடிப்பர்.
5. மகிழ்ச்சியான சூழ்நிலையை கூட துயரமான சூழ்நிலையாக மாற்றிவிடுவர்.
இவர்கள் இம் மருந்தை எடுத்துக் கொண்டால் தேவையற்ற கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்.

22. ஓக் - Oak

"விடா முயற்சி, அதீத நம்பிக்கை"

 செய்ய முடியாது என்று தெரிந்தும் விடாமல் தன் தகுதிக்கு மீறீய ஒரு காரியத்தில் இறங்கி தன் உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள்.தோல்வி மீது தோல்வி வந்தாலும் விடாமல் அதே காரியத்தில் ஈடுபடுவார்கள் அத்தகைய பிடிவாதக் காரர்களுக்கு ஓக் ஏற்ற மருந்து

1. இவர்கள் ஒரு காரியத்தை எடுத்தால் வெற்றி அடையும் வரையில் விட மாட்டார்கள். தோல்வி ஏற்படும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் கூட எப்படியாவது வெற்றி அடையவேண்டும் என்று தன்நம்பிக்கையுடன் செயல்படுவார்.
2. முடியாது! நடக்காது! என்ற பேச்சுக்கே இடம்தர மாட்டார்கள். துணிந்து செயல் படுவார்கள்.
3. சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அளவுக்கு அதிகமாக உழைத்து உடம்பை வருத்திக் கொள்வர்.
4. இம்மருந்து அனாவசியமான வேலைகளில் ஈடுபடுவதை தடுக்கிறது.வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற சிரமங்களை குறைக்கிறது.

23. ஆலிவ் - Olive

"சோர்வு, களைப்பு"

 இனிமேல் முயற்ச்சி செய்ய சக்தி இல்லை என்று கருதி உடலாலும் உள்ளத்தாலும் வலிமையற்று தளர்ந்துபோய் கிடப்பவர்களுக்கு ஏற்ற மருந்து.

1. சிறிதுநேரம் வேலை செய்தாலும் களைத்து விடுபவர்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது.
2. இவர்கள்எடுத்த பணியை உடனே முடிக்க முடியாது. இடையிடையே ஓய்வெடுத்து பணிகளை செய்வர்.
3. உடல் பலகீனம் கொண்டவர்.
4. மாணவர்கள், வீட்டில் கடுமையாக உழைக்கும் பெண்கள், உடற்பயிற்சி செய்வோர், நீண்ட நேரம் உழைப்பவர்கள்
ஆகியோருக்கு இம்மருந்து நல்ல பலன் தரும்.

24. பைன் - Pine

"தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு"

காரணமின்றி ஏதோ குற்ற உணர்வால் தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டும் கடிந்துகொண்டும் மனதளவிலும் உடலளவிலும் நிம்மதியின்றி காணப்படுவார்கள் .பைன் இவர்களுக்கு ஏற்றது.

1. இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழு திருப்தி இருக்காது இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
2. மற்றவர்கள் செய்த குற்றம் குறைகளை தாம் செய்த குற்றமாக தன் மேல் பழிபோட்டுக் கொள்வர்.
3. மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள்.
4. எப்போதும் நான் அதிஷ்டம் இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று புலம்புவார்கள்.
5. சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள். மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
7. எப்போதும் ஏதாவது குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
பைன் குணம் உள்ளவர்கள் வில்லோவின் குணத்திற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார்கள்.

25. ரெட் செஸ்ட் நட் - Red Chest Nut

"மற்றவர்களைப் பற்றிய கவலை, பயம்"

காரணமின்றி உறவினர்,நண்பர்களுக்கு அல்லது தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஆபத்து  நேர்ந்துவிடுமோ என்ற கவலையில் முழ்கிக் கிடப்பவர்களுக்க்கு

1. பிறர் நலனில் தேவைக்கு அதிகமாக அக்கறை கொள்வார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.
2. வேண்டியவர்கள் யாராவது வெளியூர் சென்றால் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொண்டே இருப்பார்கள்.
3. மனதில் எதிர்மறையான சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கும்.
4. சுயநலம் இன்றி பிறர் நலனில் அக்கறை கொண்டவர்.

26. ராக் ரோஸ் - Rock Rose

"திகில், பீதி"

 அச்சம், பயம், பதற்றம் போன்ற காரணங்களால் உணர்வற்று கிடப்பவர்களுக்கு ராக் ரோஸ்.

1. உடைகளில் தீ பற்றிக்கொண்டாலோ,ஏதாவது விபத்து நடந்தாலோ, நண்பர்கள் இறப்பு செய்தியை கேட்டாலோ இந்த மாதிரி சம்பவங்களில் மிகவும் பயங்கரமாக பீதி அதிர்ச்சி அடைவர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிடுவர்.
2. ஏதாவது விபத்தை நேரடியாக பார்த்தால் அதிர்ச்சியில்மயங்கி விழுந்து விடுவார்கள்.
அப்போது ராக் ரோஸ் இரண்டொரு துளி கொடுத்தால் உடனே மயக்கம் தெளியும்.
3. யாராவது பயமுறுத்தினாலோ, இரத்தத்தை பார்த்தாலோ பேரதிர்ச்சிக்கு உள்ளாவர்.
இவர்களுக்கு இம்மருந்து நல்ல பலன் கொடுக்கும்.

27. ராக் வாட்டர் - Rock Water

"கொள்கை வாதிகள், பிடிவாதக்காரர்கள்"

 எதற்கும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிடிவாதக் காரர்களுக்கு இது ஏற்ற மருந்து

1. இவர்கள் சிறந்த கொள்கை வாதிகளாக இருப்பார்கள். எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தனது கொள்கையை அடுத்தவர்கள் மீது தினிக்கவும் மாட்டார்கள்.
2. இவர்கள் சுயநலம் இல்லாது சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள்.
3. எளிமையாகவும் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று கருதுபவர்கள்.
4. மிகவும் பிடிவாத காரர்கள்.
5. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மருந்து.

28. ஸ்க்ளெராந்தஸ் - Seleranthus

"உறுதியற்ற தன்மை, சந்தேகம், குழப்பம், சோம்பேரித்தனம்"

ஒரு செயலில் தகுந்த முடிவெடுக்கத் தெரியாமல் குழம்புதல், உறுதியில்லாமல் தள்ளிப்போடுதல் ஆகிய குணமுடையோர்

1. இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று முடிவு எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார்.
2. சோம்பேறித்தனம் கொண்டவர்கள். பிறகு பார்த்துக் கொள்வோம், நாளை செய்து கொள்வோம் என்று ஒத்திப் போடும் தன்மை கொண்டவர்கள்.
3. திடமான ஒரு முடிவை எடுக்க முடியாமல் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
4. வேலைகளை சேர்த்து வைத்துக்கொண்டே போய் கடைசியில் எதைச் செய்வது எப்படிச் செய்வது என தடுமாறுவர்.
"ஆற்றில் ஒரு கால்! சேற்றில் ஒரு கால்!"
என்னும் பழமொழி இவர்களுக்கு பொருந்தும்.
5. கடைகளுக்கு சென்றால் வீட்டைப் பூட்டினோமா!? சுவிட்ச் ஆப் செய்தோமா! என்ற குழப்பத்தில் இருப்பர்.
6. பள்ளி மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிக்க இது உதவும்.

29. ஸ்டார் ஆப் பெத்லகேம் - Star of Bethlehem

"அதிர்ச்சி, உடல் நலக்குறைவு"

 அதிர்ச்சியின் காரனமாக உள்த்தால் உடம்பால் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்போர்.

1. விபத்தில் அல்லது அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பாவர்களை உடனே மயக்கம் தெளியச் செய்கிறது.
2. காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கிடப்பவர்களை இது குணப்படுத்துகிறது.
3. பலகீனமான மனம் கொண்டவர்களுக்கு இம்மருந்து பெரிதும் உதவும்.
4. சிறுவயதில் ஏற்ப்பட்ட அதிர்ச்சியினால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்.
5. பழைய விரும்பத்தகாத சம்பவங்களை நினைத்து பயப்படுதல்.

30. ஸ்வீட் செஸ்ட் நட் - Sweet Chest Nut

"அளவுக்கு மீறிய துன்பம், நம்பிக்கை அற்ற நிலை"

அளவுக்கு மீறிய துன்பத்தாலும் அவநம்பிக்கையாலும் தளர்ந்து தனிமையில் இருத்தல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஏற்ற மருந்து. 

1. பல வருடங்களாக துன்பத்தை அனுபவித்து மனம் ஒடிந்து விட்ட நிலை
2. தனிமையில் முடங்கிக் கிடத்தல்
3. எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்ற மனப்போக்கு.
4. இனி கடவுள்தான் நமக்கு துணை என்று ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ளுதல்.
5. இனி நமக்கு எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்று எண்ணி மிகுந்த துன்பம் வேதனை அடைபவர்கள்.
இது மனச்சோர்வு, நம்பிக்கை இழந்த நிலை கவலையை போன்றவை ஏற்கப்படாமல் பாதுகாக்கும்.

31. வெர்வைன் - Vervaine

"பேரார்வம், அதிக உழைப்பு, சக்திக்கு மீறிய செயல்"

கடுமையான உழைப்பால் மன அழுத்தம் மற்றும் மன இருக்கமாகவும் சோர்வாகவும் காணப்படுபவர்களுக்கு 

1. அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.
2. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வது. நேரம் போதவில்லை என்று புலம்புவது.
3. மற்றவர்களைவிட தமக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது.
4. எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை நேரம் இல்லை என்ற வார்த்தையை பிரயோகிப்பது.
5. பயனை எதிர்பாராமல் திறமையாக பணிகளை செய்து முடிப்பது.

32. வைன் - Vine

"அதிகாரம், ஆணவம், ஆதிக்கம்"

எதற்கும் விட்டுக்கொடுத்து போகாமல் அதிகாரம் செசெய்துகொண்டு சண்டையிட்டுக் கொண்டும் இருப்பவர்கள்

1. எப்போதும் எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.
2. வீட்டில் கணவன் மனைவி குழந்தைகளை அதட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் இருப்பார்கள்.
3. தமக்கு கீழே வேலை செய்பவர்களை துச்சமாக மதிப்பார்கள்.
4. மற்றவர்கள் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்கள்.
5. இவர்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசினால் கோபம் கொள்வார்கள்.

இவர்களுக்கு வைன் கொடுக்கப் பட்டால் மற்றவர்களிடம் அன்புடனும் அனுசரனையுடனும் நடந்தது கொள்வார்கள்.

33. வால்நட் - Walnut

"தீய பழக்க வழக்கங்கள்"

  டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தட்பவெட்ப நிலை மாறுபாடு மற்றும் இடமாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

1. டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட்ட வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
2. பல ஆண்டுகளாக மது புகையிலை பயன்படுத்தினாலும் வால்நட் எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
3. குழந்தைகள் பால் குடி மறக்க, கை சூப்பும் பழக்கத்தை மறக்க.
4. புதிய இடங்களில் குடிபுகுதல், புதிதாக பணிக்கு செல்வோர். பள்ளி கல்லூரி மாற்றிச் செல்வோர் அந்த புதிய இடங்களில் இயல்பாக பழக வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
5. புதிதாக பூனை நாய் கிளி போன்ற செல்லப் பிராணிகள் வாங்குவோர் அதற்கு வால்நட் குடுத்தால் இடத்திற்கு தக்கவாறு இயல்பாக பழகும்.

34. வாட்டர் வைலெட் - Water Violet

"கர்வம், தனிமை"

1. இவர்கள் தனியாக ஏதாவது செய்துகொண்டு இருப்பார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் தலையிடுவதை விரும்பமாட்டார்கள்.
2. இவர்களுக்கு சும்மா இருக்க பிடிக்காது. எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
3. உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டாலும் சரியான சிகிச்சை எடுக்க மாட்டார்கள். தானாகவே சரியாகிவிடும் என்று இருந்து விடுவார்கள்.
4. இவர்கள் தனிமை விரும்பி. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
5. மனதை ஒரு நிலைப்படுத்தி கவனமாக செயல்படுவார்கள்.

35. ஒயிட் செஸ்ட் நட் - White Chest Nut

தேவையற்ற எண்ணங்கள், வாக்குவாதம்"

தேவையற்ற சிந்தனைகளாலும் எண்ணங்களாலும் மனதலவில் நிம்மதியற்ற நிலையில் இருப்பவர்கள். 

1. ஒரே செயலை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள்.
2. தேவையற்ற சிந்தனைகளை சிந்தித்து சிந்தித்து மனதை வருத்திக் கொள்வார்கள்.
3. மனதை ஒருநிலைப் படுத்த முடியாமல் அவதிப்படுவர்.
4. பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்.
5. எங்காவது வெளியே சென்றால் தேவையில்லாமல் அங்கே உள்ள மரங்களை எண்ணிப் பார்பது மாதிரி செயல்களில் ஈடுபடுவர்.
6. தேவையில்லாத விஷயங்களை மனதில் இருந்து அகற்ற முடியாமல், இரவில் தூக்கம் இன்றி தவிப்பர்.

இவர்கள் ஒயிட் செஸ்ட் நட் எடுத்துக் கொண்டால் மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றாது. மனம் ஒருநிலைபடும்.

36. வைல்ட் ஒட் - Wild oat

"நிலையில்லாமை,தடுமாற்றம், திருப்பதி இன்மை"

தமது செயல்களில் பற்றோ உறுதியோ இல்லாமல் இருத்தல் அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்

1.இவர்களுக்கு தனக்கு எது சரியான வழி என்று தீர்மானம் செய்ய தெரியாது.
2. செய்யும் வேலைகளை திறம்பட செய்வார்கள். ஆனால் ஒரே வேலையில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.
3. நல்ல லாபம் ஈட்டும் தொழிலாக இருந்தாலும் தன் வியாபாரத்தையும் தொழிலையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் வைலெட் ஒட் எடுத்துக் கொண்டால் எது சரியான வழி என குழப்பம் இல்லாமல் தீர்மானம் செய்ய முடியும்.
ஒரு தொழிலில் பற்றுடன் நிலையாக ஈடுபட முடியும்.

37. வைல்ட் ரோஸ் - Wild Rose

"எதிலும் அக்கறை இன்மை"

எந்த செயலிலும் அக்கரையோ ஆர்வமோ பற்றோ இல்லாமல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவர்கள்

1. இவர்களை தன் வேதனையை துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன் மனதிற்குள் வைத்தே பூட்டிக் கொள்வார்கள்.
2. தன் உடல் நலன் பற்றியோ ஆரோக்கியம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். வந்தா வருது போ என்பார்கள்.
3. வாழ்க்கையில் எந்த பிடிப்பும் லட்சியம் இல்லாமல் வாழ்வார்கள்.
4. எப்போதும் சுறுசுறுப்பு இன்றி சோர்வாக இருப்பார்கள்.
5. கையில் பணம் கிடைத்தால் தாம் தூம் என்று செலவு செய்வார்கள்.
6. எல்லாம் என் தலைவிதி,
வெந்ததை தின்னுட்டு விதிவந்தா சாவோம்,
என்ற சிந்தனையோடு வாழ்வார்கள்.
இத்தகைய போக்கு கொண்டோர்கு வைல்ட் ரோஸ் கொடுத்தால் வாழ்க்கையில் ஒரு நல்ல பிடிப்பு ஏற்படும். உற்சாகம் சுறுசுறுப்போடு செயல்படுவர்.

38. வில்லோ - Willow

"பிறர்மேல் குற்றம் சாட்டுதல்"

தனது குறை நிரைகளை உணராமல் எல்லாவற்றிற்கும் பிறர்மீது குற்றம் சுமத்தும் மனம் கொண்டவர்கள்

1. இவர்கள் தனக்கு வரும் துன்பம் அனைத்திற்கும் மற்றவர்களையே குற்றம் சாட்டுவர்.
2. தானும் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார் மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் இவருக்கு பிடிக்காது.
3. எப்போதும் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்.
4. எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.
5. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவார்.
6. நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள்.
இத்தகைய குணம் உடையவர்களுக்கு வில்லோ ஏற்ற மருந்து.

 
39. ரெஸ்க்யூ ரெமடி - Rescue Remedy
        பாச் மலர் மருத்துவத்தில் மொத்தம் முப்பத்தி எட்டு மருந்துகள் உள்ளன என்று பார்த்தோம். இந்த முப்பத்தி எட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஐந்து மருந்துகளின் கலவை தான் ரெஸ்க்யூ ரெமடியாகும்.(Rescue Remedy)இதனை சுருக்கமாக RR என்று அழைப்பார்கள். அவை 1. செர்ரிப்ளம், 2. க்ளமாட்டிஸ் 3. இம்பேஷன்ஸ் 4. ராக்ரோஸ் 5. ஸ்டார் ஆப் பெத்லகேம்.
இதையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி ஒன்பது மலர் மருந்துகள் உள்ளன. அவசர நேரங்களில் இந்த மருந்து முதலுதவியாக செயல்பட்டு பல நேரங்களில் உயிர் காப்பாற்றும் அளவிற்கு பயன்படும். விபத்து, விஷக்கடி, நெருப்பு காயம், விபத்தினால் ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, அதிர்ச்சி, அதீதமான பயம், மயக்கம், கோமா என்று எந்த விதமான அவசர நேரமாக இருந்தாலும் முதலுதவியாக அநேகமாக இந்த மருந்து பயன்படும்.
ரெஸ்க்யூ ரெமடி பல நேரங்களில் உயிரைக்கூட காக்க கூடிய ஆற்றல் கொண்ட மருந்தாகும். சாதாரணமாக அவசர நேரம் அல்லது விபத்தின் பொழுது பாதிக்கப்பட்டவரின் மனநிலை அநேகமாக கீழே கொடுத்துள்ள ஐந்து விதமாக இருக்கும்.
இந்த ஐந்து விதமான மனநிலைக்கு ஏற்றபடி, (ரெஸ்க்யூ ரெமடி)
விபத்து நடந்த உடனே இந்த மருந்து கொடுத்தால், சில நிமிடங்களில் இரத்தப் போக்கு கட்டுக்குள் வந்து, வலியும் குறைந்து, பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பதட்டம் குறைந்து மயக்கம் தெளியும் பொழுது டாக்டரிடம் செல்வதற்கு முன்பே அநேகமாக முழுமையாக நிவாரணம் பெற்று விடுவார்.
ரெஸ்க்யூ ரெமடி எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டிய மருந்தாகும். பல நேரங்களில் இந்த மருந்து கொடுத்தவுடன் வேறு மருத்துவ உதவி இல்லாமலே பாதிக்கப்பட்டவர், சில நிமிடங்களில் எழுந்து நடந்து செல்வதை காணலாம். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், சரியான மருத்துவ உதவி கிடைக்கும் வரை இந்த மருந்து மூலமாக பாதிக்கப் பட்டவரின் உயிரை 
காப்பற்றாலாம்...

மலர் மருத்துவத்தின் பயன்கள்

மலர் மருத்துவத்தின் பயன்கள்:-

1 விரைவில் திருமணம் ஆக = மஸ்டார்டு பெற்றோர்களுக்கு ஸ்வீட்செஸ்ட்நட் + வால்நட்
2 மாமியார் மருமகள் சண்டை தீர = சிக்கரி +
3 உன் கடையில் கூட்டம் நிரம்பி வழிய = ஓக் + ஜென்ஷன்
4 உன் கல்லா பெட்டி நிரம்பி வழிய = வைன்
5 காதல் தோல்வி தேவதாசுக்கு = சிக்கரி
6 துரதிர்ஷ்டம் நீங்கி பண வரவு அமைய  = வாட்டர் வயலட்
7 உன்னை மறந்து தூங்க = மஸ்டர்டு + ஆப்ஸ்பென் அல்லது மஸ்டர்டு +அக்ரிமனி +ஜென்ஷன் + வைல்டுரோஸ் +(ஒயிட் செஸ்ட்நட் அல்லது ஸ்க்ளெரான்த்தஸ் )
8 வலி உயிர் போகிறது உயிரை வாக்குகிறது என்றால் = மஸ்டர்டு
9 வலி தாங்க முடியாமல் அழுதால் கத்தினால் = செர்ரி ப்ளம்
10 வலி தாங்க முடியாமல் வீறிட்டால் = ராக் ரோஸ்
11 வறுமை மாறி பணப் புழக்கம் உண்டாக-= செர்ரிப்ளம்
12 வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து= அக்ரிமனி
13 பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு = ராக் ரோஸ்.
14 தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது = செர்ரி ப்ளம்.
15 ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது = கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.
16 கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை =ஒய்ட்செஸ்நட் + க்ளிமாடிஸ்.
17 நாள்பட்ட சில நோய்களால் உடல் நலிந்து மனதளவிலும் வலுவிழந்துவிடும். அந்தச் சூழலில், `ராக்ரோஸ்' என்னும் மருந்து நல்ல தீர்வைக் கொடுத்து மனச்சோர்வை நீக்கும்.
18 வளரும் குழந்தைக்கு ‘வால்நட்’
19 கற்கும் திறன் மேம்பட ... ‘செஸ்ட் நட் பட்’
20 சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு  =  `அக்ரிமனி'
21 காதலில் தோல்வி என்றால் சிக்கரி.
22 அகம்பாவம், மண்டைக்கனம் போக = வைன்.
23 இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் =மிமுலஸ்
24 போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு= வால்நட்.
25 தன்னம்பிக்கை  கூடுவதற்கு =லார்ச்+ செல்வம் சேர கார்ஸ்.
26 சகிப்புத்தன்மை போக்கக்கூடியது = பீச்'
27 அடிமை உணர்வு மற்றும் குற்ற உணர்வு உடையவர்களுக்கும் தீர்வு = `சென்டாரி'
28 வீடுகள் விற்க , வாங்க நாம் சாப்பிட வேண்டிய மருந்து = ஸ்வீட் செஸ்ட்நட்
29 முதுமை யை தடுக்க காயகல்பம் = வால்நட் + ஆலிவ்
30 செலவு செய்த பணம் மிண்டும் வரும் = வாட்டர் வயலட்
31 எந்த பிரச்சினைக்கும் அழுதால்  நபர்களுக்கு = செர்ரிப்ளம்
32 நெடிதுயர்ந்தம் தற்கொலை மனநிலை = செர்ரிப்ளம்
33 குழந்தைகள் அலுகைக்கு = சிக்கரி
34 அருவருப்பு மனநிலை = கிராப் ஆப்பிள்
35 எதுவும் நடக்கவில்லை எல்லத்திலும் மனசு விட்ட நபர்களுக்கு= கார்ஸ்
36 பகல் கனவு = கிளமாட்டிஸ்
37 தனிமையில் பயம் = ஹீதர்
38 பெறமை உனர்வு = ஹால்லி
39 பலசை நினைத்துக்கொண்டு இருப்பது = ஹனிசக்கிள்
40 வேலையை செய்யமுடியுமா என நினைபவர்கள் பன்னமுடிமா என நினைப்பது = ஹார்ன்பீம்
41 செய்யமுடியாத வேலை செய்ய முடியும் என நம்பும் நபர்களுக்கு =  ஓக்
42 பெறுமை இல்லதவர்களுக்கு = இம்பேசன்
43 தன்நம்பிக்கை இல்லதவர்களுக்கு = இம்பேசன்
44 பயம் உனர்வுக்கு = ராக்ரோஸ்
45 நேர்மையான உனர்வு = ராக் வாட்டர்
46 எந்த விசையத்தையும் தல்லி வைக்கும் நபர்களுக்கு எந்த முடிவும்கூட எடுக்கு முடியாத நபர்களுக்கு =  ஸ்கிளராந்தஸ்
47 மென்டல் டயடு = ஆலிவ்
48 முன்னேற்றம் இல்லை என்ற மனநிலை மற்றம் ஆரோக்கியமான மனநிலைக்கு = ஸ்வீட் செஸ்ட்நட்
49 நான் செல்லுவதை செய் என்பவர்களுக்கு இட்லர் கேறட்டர் =வைன்
50 மற்றம் தரும் மனநிலை = வால் நட்
51 மனதில் நிங்கதா இலப்பு = ஒயிட் செஸ்ட்நட்
52 மற்றவர்களை குறைகூறுபவர்களுக்கு -= வில்லோ
53 மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் = ரெஸ்கியூ ரெமடி
54 மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் = ரெஸ்கியூ ரெமடி
55 வாழ்க்கையில் முன்னேற = செஸ்ட்நட்பட் + ஹனிஸக்கில் அல்லது கார்ஸ்+லார்ச் +எலம்
56 வெற்றி நிச்சயம் அடைய = லார்ச் மற்றவர்கள் தடையில்லாமல்  இருக்க கார்ஸ்
57 எங்கும் எதிலும் வெற்றி பெற = வாட்டர் வயலட் +கார்ஸ் +லார்ச் +ஜென்ஷன் அல்லது ஹால்லி+
58 எல்லோராலும் போற்றப்படும் ஹரேவாக நீ ஆக = ராக்ரோஸ்
59 சுகபோக வாழ்வு பெற= ராக்ரோஸ்+வைல்டு ரோஸ்+கார்ஸ் + வாட்டர் வயலட் ஸ்வீட் செஸ்ட்நட்
60 சொர்க்க வாழ்வு பெற =  எல்ம்
61 நீ முடி சூடா மன்னன் விளங்க = எல்ம்
62 கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க = எல்ம் + கார்ஸ்
63 இழந்த பணம் 6 மாதத்தில் கிடைக்க(ஏதொ ஒரு விதத்தில்) = கார்ஸ்
64 குடி,சிகரெட்,சுய இன்ப பழக்கம்,நகம் கடித்தல்,குழந்தை விரல் சப்புதல் , புகைப்பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் போன்ற கெட்ட பழக்கம் அகல. = வால் நட்
65 வீடு அல்லது இடம் வாடகைக்கு விட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டும் நபர்களுக்கு = எல்ம்
66 அடங்காபிடாரி குழந்தைகள் அடக்க =  எல்ம்
67 எழுத்தும்பரீட்சை அல்லது நேர்முக தேர்வில் உனக்கு சுலபமான கேள்விகள் வர = ராக்ரோஸ்
68 பயம் நீங்க = மிமுலஸ்
69 தைரியம் வர = ராக்ரோஸ்
70 சந்தேகப்படுவோருக்கு சிறந்த நிவாரணம் = செரட்டோ
71 எதிரியைப் பயமுறுத்த = ஹால்லி+ஹார்ன்பீம்+மஸ்டர்டு
72 வேலை கிடைக்க=  செஸ்ட்நட்பட் + வாட்டர் வயலட்+ரெட்செஸ்ட்நட்+ராக்ரோஸ்+எலம்
73 வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு பெற =  ஸ்வீட் செஸ்ட்நட்+ரெட் செஸ்ட்நட்
74 வேலையில்லா பட்டதாரிகளுக்கு = ராக்ரோஸ் இத்துடன் வைல்டு ஒட் எலம் +கார்ஸ்+சிக்கரி (அல்லது ஹீதர் அல்லது வாட்டர் வயலட் )
75 வாடிக்கையாளர்கள் உன்னை நாடி வர = மஸ்டர்டு + ஆஸ்பென்
76 தடாலடியா பரிகாரம் வாழ்க்கை அடியோடு உயர்த்த = மஸ்டர்டு+ ஸ்வீட் செஸ்ட்நட் +கார்ஸ் தொடர்ந்து இரண்டு முன்று வாரம்
77முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க =கார்ஸ்+ மிமுலாஸ் இதனால் முதுகு வலி குறையும்.
78 இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.
இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதே நேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

79 உடல் உபாதை மற்றும் மன உபாதைகளைப் போக்கக்கூடியது= செரிப்ளம்
80 உடலைச் சுத்திகரிப்பதுடன் ரத்தத்தை சுத்திகரித்து ஆன்மாவை சுத்திகரிக்கக்கூடியது= கிராப் ஆப்பிள்

81 அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
82 எல்லாவற்றையும் இழந்து,அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர்.அவர்களுக்கும் உடல் உபாதைகள்.அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
83 அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
84அறிவிருக்கும்,அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது.அதனால் மனநலம்,உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
85வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார்.சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார்.அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
86 ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார்.இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும்.எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
87 இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி,நாள்,வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
88 ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் .எதற்கும் லாயக்கல்ல.எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
89 கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார்,ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார்.உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார்.அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார்.அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும்,உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
90 எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார்.அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு .அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார்.அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
91 இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான்.அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர்.இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
92எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்,இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்.இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
93 எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர்,அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும்.அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
94மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார்.கவலைப்பட மாட்டார்.இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.

95 தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார்.அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார்.தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.

96 இவரின் மனநலத்தை ,உடல்நலத்தை ,இவரால் கட்டுப்படுத்த முடியாது.நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர்.இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.

97போதுமான வயது இருக்கும்,ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது.நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது.அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.

98 தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர்.மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர்.அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்.எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும்.அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
99தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு.அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.

100 தன்னையும்,தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்

திங்கள், 14 ஜூன், 2021

திருமலை திருப்பதி ஆர்ஜித சேவையும். சிலிர்க்கவைக்கும் உண்மை சம்பவம்...

*இஸ்லாமிய பக்தரும்*                             திருமலை திருப்பதி                          ஆர்ஜித சேவையும்....?

👉சிலிர்க்க வைக்கும்                                        உண்மை சம்பவம்...?

🙏திருப்பதியில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க,
அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 'அஷ்டதள பாத பத்மாராதனை' சேவை.
இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

🌸  'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார். திருப்பதியை அடைந்தவுடன் ஏழு மலைகளையும் கடந்து நடந்தே சென்ற அவர் திருமலையை  அடைந்தார்.
மகா துவாரத்துக்கு ( பிரதான நுழைவாயில் )  சென்ற அவர், அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர்  பார்த்துக் கொண்டனர்.  அவரை நேரே தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்தின் செயல் அலுவலரிடம் (EO) அனுப்பி வைத்தனர்.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் வேறு ஒரு விஷயம்…

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது. திருமலையின் நிர்வாகம் முழுக்க முழுக்க இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் பொன்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட தேவஸ்தானம் தரப்பில் அப்போது திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதற்காக பல நாட்கள் பல ரவுண்ட் மீட்டிங்குகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பொன்விழாவுக்கு என்ன செய்வது, எந்த மாதிரி கொண்டாடுவது என்று எந்தவொரு முடிவுக்கும் அவர்களால் வர இயலவில்லை. இது போன்றதொரு சூழ்நிலையில் தான் அதிகாரிகள் தேவஸ்தான கமிட்டியிடம் வந்து அந்த முஸ்லீம் பக்தரின் கோரிக்கை பற்றி தெரிவித்தனர்.

அப்போது போர்டு ரூமில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. குமாஸ்தா ஒருவர் மெல்ல அறைக்குள் சென்று, EO வை சந்தித்து, முஸ்லிம் பக்தர் ஒருவர் குறிப்பிட்டதொரு கோரிக்கையுடன்  கூறி, தங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதாக தெரிவித்தார்.

“மிக மிக முக்கியமான மீட்டிங் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. என்னால், எழுந்து வெளியே செல்ல முடியாது. அந்த பக்தரை நேரே இந்த அறைக்கே அனுப்பு பரவாயில்லை. என்ன ஏது என்று விசாரித்துவிட்டு உடனே அவரை அனுப்பிவிடுகிறேன்” என்று குமாஸ்தாவிடம் தகவல் தெரிவித்து அனுப்பினார்.

ஆனால் அவருக்கோ அந்த அறையில் இருந்த மற்ற தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களுக்கோ தெரியாது… அந்த முஸ்லீம் பக்தரை அனுப்பியவன் சாட்சாத் அந்த ஸ்ரீனிவாசனே என்பதும், அந்த பக்தரின் கோரிக்கையை ஏற்று இவர்கள் செயல்படுத்த இருக்கிற திட்டத்தால் அந்த ஏழுமலையானே மனம் குளிர்வான், தேவஸ்தான பொன்விழா கொண்டாட்டங்களில் மகத்தானதொரு முத்திரையை அது பதிக்க போகிறது என்று.

குமாஸ்தா வெளியே வந்து ஷேக் மஸ்தான் என்கிற அந்த இஸ்லாமிய பக்தரை போர்டு ரூமுக்குள் EO அழைப்பதாக தெரிவித்தார்.

அதுவரை வெயிட்டிங் ஹாலில் காத்திருந்த ஷேக் மஸ்தான் தனது இருக்கையிலிருந்து எழுந்து நேரே மீட்டிங் நடைபெறும் அந்த அறையை நோக்கி சென்றார்.

கைகளை கூப்பியபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் மஸ்தான். அவருடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் தெரிவித்த இ.ஓ., “நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில் இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?
என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்கள்?
அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.”

அடுத்து ஷேக் மஸ்தான் கூறிய விஷயம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரை சேர்ந்த ஒரு சிறு வணிகன்.  எங்கள் குடும்பத்தில் பலர் பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். பலப் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், ஸ்ரீனிவாச பிரப்பத்தி. மங்களா சாசனம் ஆகியவற்றை கூட பாடுவோம். ஸ்ரீனிவாச கத்யத்தை கூட என்னால் முழுமையாக பாட முடியும்!”

கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்க, அந்த முஸ்லீம் அன்பர் தொடர்ந்தார்….

“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்). இதுதவிர, எங்கள்  வீட்டு புழக்கடையில் உள்ள தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.”

“ஆனால் ஐயா… இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்றதொரு சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் என் கொள்ளு தாத்தாவால் சில பூக்களைத் தான் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிது பூக்கள் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிது பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறோம்.”

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். (வில்வத்திற்கு கூட நிர்மால்ய தோஷம் கிடையாது!)

அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல்  அலுவலர், “எ….ன்…ன….  நீங்கள் 108 பூக்களை சேர்த்துவிட்டீர்களா?”

“ஆம்!” என்றார் ஷேக் மஸ்தான்.

“ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வயிற்றை கட்டி வாயை கட்டி இந்த பூக்களை சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட மூன்று சவரன்!)

“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்…
அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின் போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே”

“எங்கள் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் எங்கள் தாத்தாவின் ஆன்மா கூட நிச்சயம் இதன் மூலம் சாந்தியடையும். இது தான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!!”

ஷேக் மஸ்தான் முடிக்க…. அமைதி… அமைதி…
அந்த அறை முழுக்க ஒரே அமைதி. நிசப்தம். 
இது சாதாரண அமைதி அல்ல. அசாதாரணமான அமைதி.

அடுத்த சில கணங்களுக்கு அந்த அறையில் ஃபேன்கள் சுழலும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.

சேர்மன், செயல் அலுவலர், இணை அலுவலர், துணை அலுவலர் மற்றும் பல அதிகாரிகளும் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களும் நிரம்பியிருந்த அறையில் எவருமே வாயை திறந்து எதுவும் பேசவில்லை.

தங்கள் முன், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றுகொண்டிருந்த அந்த முஸ்லிம் பக்தரிடம் என்ன சொல்வது, என்ன பதில் அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

தங்களுக்கு நடுவே சாட்சாத் ஸ்ரீனிவாசனே அங்கு எழுந்தருளி நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது போன்று அறையில் அனைவரும் உணர்ந்தனர்.

எக்சியூட்டிவ் ஆபிஸர் எனப்படும், இ.ஓ. தான் முதலில் வாயை திறந்தார்.

கண்களில் இருந்து அவருக்கு தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது இருக்கையை விட்டு எழுந்தவர் நேரே அந்த முஸ்லிம் பக்தரிடம் சென்று “இத்தனை நேரம் உங்களை நிற்கவைத்து பேச வைத்ததற்கு எங்களை மன்னிக்கவேண்டும். முதலில் இந்த சேரில் உட்காருங்கள்” என்று கூறி ஷேக் மஸ்தான் அமர்வதற்கு ஒரு நாற்காலியை போட்டார்.

“மஸ்தான் காரு, உங்களை போன்றதொரு பக்தரை இந்த காலத்தில் இங்கு பார்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான பக்தர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றதொரு பக்தரை இதுவரை பார்த்ததில்லை.”

“எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்… அதை உடனடியாக சேவையில் பயன்படுத்துவோம் என்று இப்போது, இங்கு நான் எந்த வித உத்திரவாதமும் கொடுக்க முடியாது. மேலும் தேவஸ்தானத்தின் பாலிஸி தொடர்பான இந்த விவகாரத்தில் நான் மட்டும் உடனே முடிவெடுத்துவிட முடியாது. தவிர அது எங்கள் கைகளில் மட்டும் இல்லை.”

“ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவது என்று உறுதி பூண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்ச காலம் அவகாசம் நீங்கள்  அளிக்கவேண்டும். அது போதும்! முடிவெடுத்த பின்னர் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்!”

மஸ்தான் விடைபெற்று செல்ல, அவருக்கு தரிசனம் செய்வித்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் தேவஸ்தான தரப்பில்.

அதற்கு பிறகு தேவஸ்தான கமிட்டி கூட்டம் மேலும் பல முறை கூட்டப்பட்டு இந்த மலர்களை பயன்படுத்துவதற்கு என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

சிறப்பு மிக்க இந்த ஆர்ஜித சேவைக்கு டிக்கெட்டை மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு  செய்துவிட வேண்டும். இந்த சேவையில் கலந்துகொள்ளும் சேவார்த்திகள் பங்காரு வாசலுக்கு குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய மண்டபத்தில் உட்கார வைக்கப்படுவார்கள்.

🌸  ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் (ஷேக் மஸ்தான் குடும்பத்தினர் காணிக்கையாக அளித்த) ஒரு மலர், வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.

🌸 1984 ல் திருமலையில் ஏழுமலையான் சன்னதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றும் நடக்கிறது.

திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் இரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.
🙏  🙏  🙏  🙏  🙏

( நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த உண்மை சம்பவம் திருமலை திருப்பதியில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது).

🙏 நன்றி. 

🙏வணக்கம்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

பிரபஞ்சத்தோடு எப்படி_உறவாடுவது

*#பிரபஞ்சத்தோடு_கலந்து_எப்படி_உறவாடுவது...*

******************************************************************************************************************************************************

*பிரபஞ்சம் நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது என நிறைய கேள்வி பட்டிருக்கின்றோம்.*

*இதை எப்படி நடைமுறை படுத்துவது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.  பிரபஞ்சத்திடம் எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், பணம் வேண்டும்,  கார் வேண்டும்,  வீடு வேண்டும், நகை வேண்டும் என கேட்டால் கிடைக்குமா? பிரபஞ்சத்தால் எப்படி இதையெல்லாம் எனக்கு தர முடியும்  ?  இப்படி பல கேள்விகள்.*

*முதலில் உள்ள அடிப்படை கேள்வி,  பிரபஞ்சத்தின் மொழி எது ?*

*பிரபஞ்சத்திடம் என்ன மொழியில் பேசினால் அதற்கு புரியும் ?  தமிழில் பேசவா,  தெலுங்கில் பேசவா,  கன்னடத்தில் பேசவா,  அல்லது ஆங்கிலத்தில் பேசவா ?  எப்படி பிரபஞ்சத்திடம் தொடர்பு கொள்வது  ?*
 
*உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதை பிரபஞ்சம் எப்படி அறிந்து கொள்ளும் என நமக்கு சந்தேகம் வரலாம்.*  

*அப்படி என்றால் பிரபஞ்சத்திற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்பது புலனாகிறது.* 

*மொழி தேவை இல்லை என்றால் நாம் அதனுடன் தொடர்பு கொள்ள, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதனுடன் உறவாட பொதுவான ஒரு வழி இருக்க வேண்டுமல்லவா ?*

*மொழியை கடந்து,  பல்வேறு கலாச்சாரங்களை கடந்து, அனைவராலும் இந்த பிரபஞ்சத்தோடு இணைய, நமது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைத்து பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்  ?*

*இது ஒரு சூட்சுமமான கேள்வி.  இதில் தான் இரகசியம் அடங்கி உள்ளது.  இந்த இரகசியத்தை அறிந்து கொண்டால், பின் பிரபஞ்சத்தோடு நம்மால் தொடர்பு கொள்ள முடியும்.*  

*முதலாவதாக,  நாம் கேட்காமலேயே நமக்கு இந்த பிரபஞ்சம் அளித்துள்ளவைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.   நாம் சுவாசிக்கும் காற்று, நீர்,  காடு, மலை, நமது இந்த உடல், நமக்கு தேவையான உணவிற்க்கான ஆதாரம்,  என நாம் இங்கு உயிர் வாழ தேவையானவற்றை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பது தானே முறையாக இருக்கும்.* 

*இரண்டாவதாக , நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் பிரபஞ்சத்திடம் இறுதி பொருட்களை (end product )  கேட்பதை தவிர்த்து, அதன் மூல பொருட்களை கேட்ப்பதுதான்  உத்தமமாக இருக்கும்.*  

*உதாரணமாக நமக்கு நகை, வண்டி,  வீடு என தனித்தனியாக கேட்பதற்கு பதிலாக, நிறைவான செல்வம் வேண்டும் என கேட்பதால்,  அதை கொண்டு நமது மேற்படி தனித்தனி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.*

*காதல் கைகூட வேண்டும், நல்ல மனைவி மக்கள் வேண்டும், நல்ல தொழில் வேண்டும் என கேட்பதை தவிர்த்து,  மன மகிழ்ச்சியான வாழ்கை வேண்டும் என கேட்பதால், நமது சங்கடங்கள் நீங்கி , நம்மை மகிழ்சியாக இருக்க என்னென்ன தேவையோ அவையனைத்தும் நமக்கு இந்த பிரபஞ்சம் உருவாக்கி தரும்.*
 
*இவை உதாரணத்திற்கு தான் இங்கு குறிப்பிட படுகின்றது.  ஆகவே நாம் பிரபஞ்சத்திடம் மூலமானவற்றை (source ) யை கேட்பது தான் சரியானதாக இருக்கும்.* 

*மகிழ்ச்சியான,  நிறைவான,  ஆரோக்கியமான,  மற்றவர்களுக்கும் உபயோகமான,  சுற்றத்தார் போற்றும் உயர்நிலை வாழ்கை வேண்டும் என கேட்பதால், மற்ற எல்லா கோரிக்கைகளும் இதனுள்ளேயே அடங்கி விடுகின்றதல்லவா.* 

*மூன்றாவதாக நாம் அறிந்துகொள்ள போவது தான் முக்கியமானது.   இது தான் நமது ஆசைகளை அங்கு கொண்டு சேர்க்கும் மந்திரம்.  இதை யாரும் அவ்வளவு எளிதில் சொல்லி தர மாட்டார்கள் .  ஏனென்றால் இந்த இரகசியம் நல்லவர்கள் கைகளில் மட்டுமே சென்றடைய வேண்டும்.  இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.*

*நம் தேவைகளை நான்கு நிலைகளாக பிரித்து கொள்ளவேண்டும்.*

*ஒன்றாவதாக, நமக்கு தோன்றும் ஆசைகளை,  தவிர்க்க முடியாதது என்றோ,  தேவையற்றது என்றோ பிரித்துக் கொள்ள வேண்டும்.*

*அத்தியாவசியமான தேவைகள் திரும்ப திரும்ப மனதில் ஆசையாக தோன்றுகின்றதா என்பதை கவனியுங்கள்.  ஒரே ஆசை பலமுறை மனதில் தோன்றினால் அல்லது ஒன்றை பற்றியே நாம் சிந்தித்து கொண்டு இருந்தால் அது நமக்கு தேவை என எடுத்துக்கொள்ளலாம் (Desire) .  மற்ற சிறு சிறு, அவ்வப்போது தோன்றும் ஆசைகளை தவிர்த்து விடலாம்.*
  
*இரண்டாவதாக,  நமது பலமான ஆசைகள் எண்ணங்களாக வலுபெற்று நமது மனதில் பதிந்துவிடும்.* 

*எண்ணங்களுக்கு கற்பனை சக்தி அதிகம் உள்ளது.   (Thoughts), இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் நமக்கு காட்சிப்படுத்த வல்லது.*

*மூன்றாவதாக,  அவ்வாறு வலு பெற்ற எண்ணங்கள், நம் மனதில் பிம்பங்களாக,  காட்சிப் பொருட்களாக ( image) வடிவம் பெறும்.  மனதில் தோன்றும் பிம்பங்கள் வலு பெற்று ஆழ்மனதில் பதிந்து விடும்.  நான்காவதாக, நம் மனதில் பதிவேறிய பிம்பங்கள், வடிவங்கள் ஆழப்பதிந்து, அதை குறித்து ஒரு உண்மைத்தன்மையை, மாய உலகை நம் முன்னே உருவாக்கி விடும். அது உண்மை என நம்மை நம்பவைத்து அந்த ஆசைகள் நிறைவேறியது போல தோன்றவைத்துவிடும்.  கிட்டத்தட்ட சினிமா போல்.*

*இது மிக வலுவான அதிர்வலைகளை நம் மனதில் உருவாக்கி, அந்த அதிர்வலைகள் இந்த பிரபஞ்சத்தை சென்றடையும்.*
  
*இந்த அதிர்வலைகள் மூலமாக தான் பிரபஞ்சத்துடன்  நாம் தொடர்பு கொள்ள முடியும்.*  

*நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொப்புள் கொடி இந்த அதிர்வலைகள் தான்.   நம்மில் இருந்து எவ்வளவு அதிர்வலைகள் வெளிபடுகின்றதோ அது பிரபஞ்சத்தை சென்றடைந்து, பன்மடங்கு பெருகி,  நம்மிடம் வந்து சேரும் போது, அது நடைபெறுவதற்கான, நிறைவேறுவதற்கான சாத்தியகூறுகளுடன் வந்தடையும். இதுவே சத்தியம்.*

*ஆரம்பத்தில் இந்த அதிர்வலைகள் நம்மிடமிருந்து மட்டுமே வெளிபட்டு கொண்டிருக்கும்,  அதை மட்டுமே நம்மால் உணரமுடியும்,  பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அதிர்வலைகளையும் நம்மால் அடையாளம் காணமுடியும்.  அவ்வாறு நாம் இங்கு உள்ள அதிர்வலைகளை உணர தொடங்கினால்,  பிரபஞ்சத்துடன்  உள்ள தொடர்பு  முழுமை பெற்று, பல அபரிதமான  தகவல்களை, உண்மைகளை  அறிந்து கொள்ள முடியும்.  அதிர்வலைகள் மூலமாக தான் நாம் பிரபஞ்சத்திடம் உறவாட முடியும்.*

*இதுவே பிரபஞ்சத்துடன் உறவு கொள்ளும் எளிமையான வழி.  அனைவரும் பயனடைய வாழ்த்துக்கள்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...