சனி, 21 ஆகஸ்ட், 2021

உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு

*உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!*
 
பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும். தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.

பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள். மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம். தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

*பித்தம் தணியும் :*
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும். இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

*சுவாச பாதிப்புகள் நீங்கும் :*
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர். பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

*வயிற்றுப் போக்கு குணமாகும் :*
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும். பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது. கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

*கட்டி வீக்கம் :*
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர். ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.

பன்னீர் திரவியம் எதிலிருந்து கிடைக்கிறது? கடைகளில் கிடைக்கும் பன்னீர் எனும் வாசனை திரவியம், நறுமணத்திற்காக சந்தனத்தோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில், சமய சடங்குகளில், அபிசேகங்களுக்கு பயன்படுகிறது. அந்த பன்னீர், இந்த பன்னீர் மரத்திலிருந்தோ அல்லது பன்னீர் பூக்களிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

நிலங்கள்_பற்றி_சில_தகவல்கள்

#நிலங்கள்_பற்றி_சில_தகவல்கள்
♦♦வகைகள்
**நஞ்சை
**புஞ்சை
**கிராம நத்தம்
**நத்தம் புறம்போக்கு
**நீர்நிலை புறம்போக்கு
**மேய்ச்சல் புறம்போக்கு
**அனாதீனம்
**மயானம் புறம்போக்கு
**வண்டிப்பாதை புறம்போக்கு
**களத்துமேடு
**கோவில் நிலம் 

♦பசலி :-
கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என அழைக்கப்படுகிறது. 

♦ஜமாபந்தி / வருவாய் தீர்ப்பாயம் :-
அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 
வரி வசூல், நிலுவை, 
வசூலான தொகைகள் சரியான கணக்குகளில் வரவு வைக்கப்படும் விபரம் 
போன்ற சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளவும், சரி பார்க்கவும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜமாபந்தி அதிகாரி / வருவாய் தீர்ப்பாய அதிகாரி கிராமக் கணக்குப் பதிவேடுகள் அனைத்தையும் தணிக்கை செய்வதே ஜமாபந்தி ஆகும். 

♦வஜா / ரத்து :-
பருவநிலை மாறுபாடுகள் / கனமழை / வெள்ளம் / மழையின்மை / வறட்சி போன்ற காரணிகளால் பயிர்கள் சேதமாகும் போது அரசாங்கம் அந்த ஆண்டிற்கான நிலத்தீர்வையை வஜா/ ரத்து செய்து உத்தரவிடலாம்.
நிலஉரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஏற்படும் சேதாரங்களுக்கு இது பொருந்தாது. 

♦ஜமீன் முறை :-
மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜமீன்தாரர் என்று பெயர். 

♦ஆயக்கட்டு:-
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து ( ஆறு/குளம்/கால்வாய்)
நீர் பெற பதிவு செய்யப்படும் நிலம். 

♦மகசூல்-விளைச்சல்

♦நன்செய்/நஞ்சை:-
         பாசன வசதி கொண்ட நிலம்

♦புன்செய்/புஞ்சை :-
          பாசன வசதி குறைந்த நிலம்/
          மழையை நம்பி விவசாயம்      
          நடைபெறும் நிலம் 

♦கிராம தானம் :-
          ஒரு கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக (சத்திரங்கள்/சுகாதார மையம் போன்றவற்றிற்கு)
நிலத்தை ஒதுக்குவது கிராம தானமாகும். 

♦பட்டா:-
           குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது காலிமனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஆவணம். 

♦சிட்டா:-
            ஒரு கிராமத்தில் ஒரு உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம். 

♦அடங்கல்:-
             ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு/சர்வே எண்/பயன்பாடு/இடத்தின் அமைவிடம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம். 

♦புல எண் :-
              சர்வே எண்/நில அளவை எண் 

♦விஸ்தீரணம் :- பரப்பளவு 

♦சுவாதீனம் :- 
             நிலத்தின் மீதான உரிமை 

♦நத்தம் புறம்போக்கு :-
              அரசுக்குச் சொந்தமான இடம் (தனிநபர் பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரி செலுத்தாவிடில் அந்த நிலம் புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாகப் பதிவு செய்யப்படுவது. 

♦கிராம நத்தம் :-
                 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம். 

♦அனுபோகம் :-
             பாத்தியதை/உரிமை

வியாழன், 8 ஜூலை, 2021

வேப்பம் பூ

SIDDHA HEALTH CARE:9047225560....
இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...

பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...

இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி... என்பதெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம்..

எப்படி சாப்பிட..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும் சாப்பிடுங்க...

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும்.. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்....

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....

புதன், 16 ஜூன், 2021

வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி


வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி

**வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி***
நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின் பொருள்களை வாங்குகிறோம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் அது நம் அறியாமை என்றே சொல்ல வேண்டும்.
குப்பைமேனி மஞ்சள் தேய்த்து அரைத்து குளித்த காலம் பின்னுக்கு தள்ளப்பட்டு. இன்று குளியல் பொடி அரைத்து குளிக்க சோம்பல் பட்டு குப்பைமேனி சோப், மஞ்சள் சோப், என்று திடப்பொருளாக உபயோகித்து கொண்டு இயற்கைக்கு மாறிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மக்களின் அறிவுத்திறனை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..
இன்று சோடியம் ஹைட்ராக்சைடையை சேர்த்து திடமாக்கப்பட்டு குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..
சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு, காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium hydroxide, lye) அல்லது எரி சோடா (caustic soda) என்பது NaOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.இது ஒரு வலிமை மிகுந்த எரி காரம் ஆகும். இது திறந்த சூழ்நிலையிலும், சாதாரண வெப்பநிலையிலும் புரதங்களை சிதைத்து வேதிக்காயங்களை உருவாக்குகின்றது.
சோடியம் ஹைட்ராக்சைடு தொடர்பான பண்பு குறித்து ஸ்பென்சா் அம்ஃபெர்வில்லெ என்பவா் 1893 ஆம் ஆண்டில் ஒரு விாிவான அறிக்கையளித்துள்ளாா்.அதன்படி சோடியம் ஹைட்ராக்சைடு எந்தெந்த வெப்பநிலையில் என்ன செறிவுகள் உண்டாகும் என்று கூறிப்பிட்டிருக்கிறார்.அதன் படி பார்த்தால் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக செய்யும் போது அதில் சேர்க்கும் மூலிகைகளை பொருத்து பலவாறான வினைப்புரிந்து எந்த தன்மை அடைந்து எதுவாக மாறும் என்று வரையருத்து கூறுவது மிகவும் கடினம் ஏன் என்றால் சோடியம் ஹைட்ராக்சைடு ஒவ்வொரு வெப்பநிலையில் ஒவ்வொரு வேதியல் மாற்றம் அடைகிறது..
அது நம் உடலில் வினைப்புரிந்து எப்படி மாறும் அதன் விளைவுகள் என்ன என்பதை பத்து வருடத்திற்கு பின்புதான் தெரியவரும்..தெரியவரும் போது காலம் கடந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சிலர் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு தேங்காய் எண்ணெய்யுடன் சேரும் போது அது அதன் தன்மை மாறிவிடுகிறது என்கிறார்கள்..
சரி அப்படி என்றால் எதற்காக சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகிறோம்?? அது கட்டி தன்மையாக மாறுவதற்காக.அப்படி என்றால் கூட்டு வினைபுரியும் போது சோடியம் ஹைட்ராக்சைடு தன்மை இழக்கிறது என்றால் மறுபடியும் அந்த சோப்புக்கட்டி திடத்தன்மையில் இருந்து மீண்டும் திரவநிலையில் மாறி இருக்க வேண்டும் அல்லவா???
தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக மாற்றும் போது அது சோப்+கிளிசரினாக மாறுகிறது என்று..கிளிசரின் மட்டும் நல்லதா என்ன?? கிளிசரின் இரண்டு வகைப்படும் அது தாவரத்தில் இருக்கும் எடுக்கும் கிளிசரின்.இன்னொன்று செயற்கையாக மற்றபொருளோடு வினைபுரியசெய்து கிடைக்கும் கிளிசரின் எப்படியானது என்று உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..
எது எப்படியானதாக இருந்தாலும் மூலிகைகளை கொண்டு தயாரிக்கும் குளியல் பொடியே சிறந்தது..ஆனால் என்ன நமது அவசர வாழ்கையில் இன்றைய சோப் கட்டிபோலவே இயற்கை கட்டியும் வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நமது சோம்பேரித்தனம் தான்.
என்னதான் சொன்னாலும் இயற்கை சோப் என்ற பேரில் தயாரிக்கும் நபர்கள் நான் சொல்வதை ஏற்க மாட்டார்கள்..
நமது முன் தலைமுறையினர் அரப்பு சீகைக்காய் இன்னும் சில மூலிகை இலைகளை தான் குளியலுக்கு உபயோகித்தார்கள்..அக்குபிரசர் சொல்கிறது உடலில் உள்ள அக்குபிரசர் புள்ளிகளில் தலையில் தான் அதிகம் உள்ளது என்று.ஆம் உண்மை தான் அதனால் தான் நம் முன்னோர்கள் தலைக்கு அரப்பு சீகைக்காய் போட்டு பத்து விரல்களை கொண்டு நன்றாக தலை முழுவதும் அழுத்தம் கொடுத்து பின் உடம்பிற்கு கல்லைகொண்டு தேய்ப்பார்கள்..ஆனால் இன்றோ நம் முன்னோர்கள் செய்ததை அக்குபிரசர் என்ற புது வடிவம் கொடுத்துள்ளது..
தலைமுதல் பாதம் வரை அழுத்தம் கொடுத்து குளிக்கும் முறை இன்றோ சோப் என்ற வடிவில் வந்து நம் முன்னோர்கள் வகுத்த முறையை காணாமல் போக செய்துவிட்டது..நமது முன்னோர்கள் ஒரு மருத்துவ துரையையே ஒர் குளியல் முறையில் கொண்டு வாழ்துள்ளனர் என்று நினைக்கையில் பிரமிக்க வைக்கிறது..
சில எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன்..நான் ஒரு முறை பொள்ளாசி சென்றிருந்த போது கந்தகம் (Sulpher) உபயோகித்து தேக்காய் சிரட்டையில் இருந்து பருப்பை பிரிப்பதும் மீண்டும் பருப்பை உலர்த்த கந்தகத்தை உபயோகிப்பதுமாக செய்துகொண்டு இருந்தார்கள்.அதை பற்றி கேட்ட போது அது பருப்படன் அவ்வளவாக வினைப்புரியாது என்றும் கந்தகம் உடம்புக்கு நல்லது என்றும் சித்த மருத்துவத்தில் கந்தகம் மருந்தாக உபயோகிக்க படுத்துவதையும் எடுத்துக்காட்டாக சொன்னார்கள். சித்த மருத்துவத்தில் கந்தகம் உபயோகிக்கப்படுத்துவது உண்மை ஆனால் அந்த கந்தகத்தை பல முறை சுத்தி செய்து அதில் உள்ள நஞ்சை நீக்கியப்பின் தான் மருந்தாக அது பயன்படுத்தப்படும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்புகள் இல்லைதான்.
அந்த காலத்தில் கந்தகம் இயற்கையாய் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் சுவையற்றி அலோகம்.ஆனால் இன்று அதை செயற்கையாகவே தயாரிக்கப்பட்டு வியாபிரம் ஆக்கப்பட்டுவிட்டது..கந்தகம் செம்பின் எதிரி என்ற பெயரும் உண்டு..இதைப்பற்றி விளக்கினால் பதிவு நீண்டுவிடும்..இப்படி எத்தனையோ..தேன்,வேம்பு எண்ணெய், நெல்லிக்கனி, பால்,உப்பு.....
அதை போல் இரசமணியும்..இப்போது உள்ள இரவாதிகள் பாதரசத்தை கடையில் வாங்கி அதை மணியாக கட்டி இரசமணி என்று சொல்கிறார்கள்..சித்தர்கள் சொன்ன இரசம் என்பது செயற்கை பாதரசம் கிடையாது.
சித்தர்கள் தாம் சொல்லியுள்ள மருத்துவமுறையில் மணி,மந்திரம்,ஒளடதம் எனும் முப்பிரிவினைக்கூறி அதில் மணி என்பதை முதலிடம் பெறச்செய்து சிறப்பித்துள்ளனர்.அப்படிப்பட்ட மணியான இரசமணியை சரியாக முடித்தல் வேண்டும்.என்னை பொருத்த வரையில் உண்மையான இரமணியை சரியாக முடிக்க ஆறு மாத காலம் ஆகும்.
லிக்கம் என்கின்ற கல்லில் இருந்து இரசம் என்ற பாதரசத்தை பல முறை சுத்தி செய்து கிடைப்பது இரசம்..அந்த திரவ இரசத்தை திடமான மணியாக கட்டுவதே இரசமணி ஆகும்..இன்னும் இதை பற்றி சொல்ல மறைத்த கதை நிறையவே உள்ளது..
(நேரம் கிடைப்பெற்றால் இரசமணி vs இரவாதம் சொல்ல மறந்த கதை என்ற தலைப்பில் இதை பற்றி பதிவிடுகிறேன்..)
இப்படியான உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆகையால் இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. நன்றியும் வணக்கமும்..
இயற்கையை இயற்கையாய் வாழவிடுங்கள்.இயற்கையை நீங்கள் போகும் வேகத்திற்கு தயவுசெய்து வளைக்க நினைக்காதீர்கள்..
முடிந்தால் இயற்கையோடு இசைத்து செல்லுங்கள்.இல்லையேல் இயற்கையை விட்டு விழகி நில்லுங்கள்..

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...