புதன், 27 அக்டோபர், 2021

அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்

*●அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்.●●*

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

♧‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

♧ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

♧பேனாவை

ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது.

இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்.

அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்....

கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.

அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்க்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான்.

தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.

குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?”

என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு இங்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?”

என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்....

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை...

கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே

“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்....

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.

கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.

அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை.

நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.

அதனால் நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்.

அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.

○அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!

○உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.

○நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,

□நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.

தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமர வைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.

●ஒரு சொல் கவிதை அம்மா !

●அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா !!..

●தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.

●தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.

□○நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.

□தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.

அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.

*🙏🙏🙏எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை●*

புதன், 13 அக்டோபர், 2021

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

*சோற்றுக் கற்றாழை பயன்கள்..!*

*சோற்றுக் கற்றாழை பயன்கள்..!*

 தினமும் காலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.

 கற்றாழையில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்து வந்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

 இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலின் இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளலாம்.

 கற்றாழை ஜெல்லியை மோரில் கலந்து குடித்தால் உடல் வெப்பம் குறையும். அலர்ஜி மற்றும் கருத்திட்டுகள் மறையும்.

 கண்களில் அடிப்பட்டால் அல்லது இரத்தம் காரணமாக கண் சிவந்து வீங்கிவிடும் எனவே கற்றாழை ஜெல்லியை ஒரு துணியால் கட்டி இரவு தூங்கும் போது கண்களில் கட்டினால் வலி குறையும், மூன்று நாட்களில் நோய் குணமாகும்.

சரும நோய் உள்ளவர்கள் தினமும் கற்றாழை சாறை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்கும் போது கற்றாழையை முகத்தில் தடவி காலை வெண்ணீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.

சனி, 9 அக்டோபர், 2021

*காலங்கள் திரும்ப கிடைக்காது*

 *காலங்கள் திரும்ப கிடைக்காது*


🕸 *_இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்; இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால் அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்._*


🕸 *_அடுத்து, பிள்ளைகள்; பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்._*


🕸 *_இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்._*


🕸 *_அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்._*


🕸 *_இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால், இது புரியும்._*


🕸 *_வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்._*


🕸 *_எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள். காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது. அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது._*


🕸 *_தனிமையே நம்மை கொல்லப்போகிறது._*


🕸 *_அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்; அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது._*


*காலங்கள் திரும்ப கிடைக்காது..*

*முடி உதிர்வதை தடுக்க என்ன வழி*

*முடி உதிர்வதை தடுக்க என்ன வழி*

அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வாறு சருமத்தில் உள்ள துளைகளில் முறையான பராமரிப்பை மேற்கொண்டு, சருமத்தை மென்மையாக அழகாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப்போல் தான் நமது தலையில் உள்ள முடித்துளைகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிராமல் இருப்பதோடு, நீளமாகவும் வளரும். பொதுவாக கூந்தல் ஊதிர்வதற்கு முடித்துளைகளில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். அத்தகைய முடித்துளைகளில் என்னென்ன பிரச்சனைகள் வருகிறதென்றால், பொடுகு, அதிகபடியான எண்ணெய், வறட்சியான ஸ்கால்ப் போன்றவையே. ஆகவே அதனை வீட்டிலேயே பராமரிக்க ஒரு சில வழிகளை மனதில் கொண்டு செயல்பட்டால், முடித்துளைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

👉 தலைக்கு குளிக்கும் போது மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம். ஏனெனில் அந்த வெப்பம் முடித்துளைகளில் பிடித்திருக்கும் முடிகளை வலுவிழக்கச் செய்யும். பின் முடி உதிர்தல் ஏற்படும், ஆகவே அந்த முடித்துளைகளை வலுவுடன் வைப்பதோடு, சுத்தமாகவும் வைக்க வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும். மேலும் குளித்தவுடன் கூந்தலை துடைக்கும் போது, கவனமாக மென்மையாக துடைக்க வேண்டும். ஏனெனில் கூந்தல் ஈரமாக இருப்பதால் அந்த நேரத்தில் அதனை அழுத்தி துடைப்பதால், வலு இல்லாததால் உதிரும்.

👉 நிறைய பேர் கூந்தலை மட்டும் நன்கு நீரில் அலசி, ஸ்காப்பை சுத்தமாக நீரில் அலச மாட்டார்கள். சொல்லப்போனால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கள் ஸ்கால்ப்பை முற்றிலும் சுத்தம் செய்யும் என்று சொல்ல முடியாது. என்ன தான் ஷாம்பு போட்டாலும், நீரில் அலசும் போது, விரல்களால் நன்கு தேய்த்து அலச வேண்டும். அவ்வாறு குளித்தால் தலை சுத்தமாவதுடன், தலையில் பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

👉 சுடு தண்ணீரில் தலையை அலசினால் முடித்துளைகள் பாதிக்கப்படும். ஆனால் ஸ்டீம் செய்தால் தலையானது சுத்தமாகும். இன்றைய காலத்தில் மாசு இல்லாத இடத்தை பார்க்கவே முடியாது. இந்த மாசுக்கள் அனைத்தும் தலையில் தங்கி, முடித்துளைகளை அடைத்துவிடுகின்றன. அதனால் என்ன தான் தலைக்கு எண்ணெய் தேய்த்தாலும் அந்த எண்ணெயை தலை உறிஞ்சாமல், அந்த அழுக்குகளே உறிஞ்சிவிடுகின்றன. ஆகவே அப்போது தலையை எவ்வளவு தான் தேய்த்து குளித்தாலும், அந்த அழுக்குகள் போகாமல் இருக்கும். அதற்கு ஒரே வழி ஸ்டீம் செய்வது தான். இதனால் தலையில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, கூந்தல் உதிர்தலும் ஏற்படாமல் இருக்கும்.

👉 தினமும் தலையை சீவும் போதும், சீப்பின் 100 பற்களாவது தலையில் பட வேண்டும். அதிலும் சிலரது பிரச்சனை என்னவென்றால், என்ன செய்தாலும் கூந்தல் நீளமாக வளருவதில்லை. இதற்கு பெரும் காரணம் முடியின் மயிர்கால்கள் செயலற்று இருப்பதே ஆகும். அதாவது போதிய அளவு கூந்தலுக்கு முறையான பராமரிப்பான சீவுதல் இல்லை. ஆகவே நீளமான கூந்தல் வேண்டுமென்றால் தினமும் கூந்தலை நன்கு நீண்ட நேரம் சீவுங்கள்.

👉 தலையில் பருக்கள் வருவதற்கு எண்ணெய் பசை அதிகமாகவும், அழுக்குகள் இருப்பதுமே காரணமாகின்றன. இந்த பருக்கள் ஸ்கால்ப்களில் வருவதால், வலி மட்டும் ஏற்படாமல், முடித்துளைகளையும் மூடி, கூந்தல் வளராமல் தடுக்கிறது. அதற்கு தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புகளில் ஜிங்க் அல்லது மற்ற பொருட்கள் இருக்குமாறு வாங்கி தலைக்கு பயன்படுத்தினால், அந்த பருக்கள் நீங்கிவிடும்.

இவ்வாறெல்லாம் தலையை சரியாக பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக, நீளமாக வளருவதோடு, முடித்துளைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
*வாழ்க வளமுடன்!*

*எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!*

*எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!*

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர்.

ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.

ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்.

மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வியாழன், 7 அக்டோபர், 2021

சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது

சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு
 
1. பிரம்மோஸ்

உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும் அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை 

2. பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை 

3. தேஜஸ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் 

4. சுகோய்-30

உலகிலேயே அதிவேக போர்விமானம்

5. ஆகாஷ்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஏவுகணை

6. அக்னி-5

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை

7. K4

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை

8. நிர்பாய்

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாதபடி தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை 

9. அர்ஜினா டாங்கி

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி

10. பினாகா

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர்
                    
இந்தியனாய் இருப்பதில் பெருமைகொள்கிறேன்

பாரத் மாதா கி ஜெய்🇮🇳

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...