செவ்வாய், 27 செப்டம்பர், 2022

கன்னி நூல்

கன்னி நூல் 

நிறைய சாஸ்திரங்களில் கன்னி நூல் என்று குறிப்பிட்டிருப்பார்கள் அது என்னவென்று யாரும் குறிப்பிட மாட்டார்கள் அதனுடைய உண்மை பொருளை நான் உங்களுக்கு விளக்கு கிறேன் 

 கன்னி நூல் என்பது கன்னிகழியாத பிள்ளை கையால் நூல் நூற்க சொல்லி அந்த நூலில் மஞ்சள் தடவி வைத்துகொள்ள வேண்டும் இதுதான் கண்ணிநூல் இந்த கன்னி நூல் காப்புகட்டிதான் மூலிகை பிடுங்குவார்கள் .இதற்கு இன்னொரு முறையும் கூறுவார்கள் தாமரை தண்டை உடைத்தால் அதிலும் நூல் வரும் அதையும் உபயோகப்படுத்தலாம் .

சரி இனி வசியத்திற்கான முறையைப்பார்ப்போம் 

வெள்ளை எருக்கலன் வேர் 
செம்பருத்தி வேர் 
செவ்வகத்தி வேர் 

இந்த மூன்றையும் சாபம் நிவர்த்தி செய்து வேர் அறாமல் பிடுங்கி கொண்டுவந்து அந்த வேரை மேற்படி நூலால் தாயத்து போல சுற்றி கட்டி அதில் ஒரு கோழி அறுத்து ரத்தம் தெளிக்கவும் 

இதனை இப்போது உடலில் அணியக்கூடாது தேவைப்படும் பொது மட்டும் அணியவேண்டும் இதனால் சர்வ வசியமும் உண்டாகும் ஆண் பெண் வசியம் முதற்கொண்டு சகலமும் உங்களுக்கு வசியமாகும் 

இந்த தாயத்தை எப்போதும் அணிந்தால் விந்து நஷ்டமாகும் 

இதனை இடுப்பில் தொப்புளுக்கு நேராக கட்டிக்கொண்டு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் விந்து இறங்காது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் அந்த தாயத்தை முதுகு பக்கம் தள்ளிவிட்டால் உடனே விந்து வெளியேறும் .இதனை அடிக்கடி உபயோகிப்பது உடல் நலத்திற்கு கேடு விளையும் .

மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.

(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்.

(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
-----------------------------
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்

செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரகதூப பொடி.

செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக
தூப பொடி.
லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி க்கான பட முடிவு1.அரசு,                              2.மருதாணி,               3.கஸ்தூரி,   
    
 4.சாம்பிராணி,              5.செந்நாயுருவி,       6.இலுப்பை,
 
 7.புனுகு,                          8.புங்கன்,                     9.முந்திரி, 

10.குங்கிலியம்,          11.வெள்ளெருகு,      12.ஏலக்காய்,
 
13.வெண்கடுகு,          14.கோராசனை,       15.கோஷ்டம், 
 
16.நொச்சி,                    17.ரோஜா இதழ்,      18.ஆலமரம், 
 
19.சந்தனம்,                  20.அகில்,                   21.தேவதாரு, 

22.துளசி                         23.தாமரை

மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும். இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும். செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம், சந்தோசம் எப்போதும் இருக்கும்.
இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு அதிகரிக்க செய்யும். வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும். வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர, கல்வி சிறப்பாக அமையநினைவாற்றல் மேம்பட செய்யும்.  அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால்  குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்..

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கஜலட்சுமி

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கஜலட்சுமி


அழகு மிகுந்த தேவியாகவும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் குணவதியாகவும், பக்தர்களின் மனக்குறை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. சைவம், வைணவம் என இரு பிரிவு பக்தர்களாலும் மகாலட்சுமி கொண்டாடப்படுகிறாள்.

பாற்கடலில் திருமகள் தோன்றியபோது, எட்டு திசை யானைகளும் தம் மனைவியரோடு வந்து மகாலட்சுமியை மங்கள நீராடி வழிபட்டன. அதனாலே அவள் கஜலட்சுமி என போற்றப்படுகிறாள். வேதமந்திரமான ஸ்ரீ ஸூக்தம் அவள் யானைகளின் பிளிறல்களை கேட்டு மகிழ்பவள் என்று போற்றுகிறது.

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய தரித்திர யோகமிருந்தாலும், சிலரின்  சாபத்தாலோ, பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை, செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட மனதுடன், தளராத மன உறுதியுடன், விடா முயற்சியால் இந்த கஜலட்சுமி பூஜை செய்தால் நமது தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது அனுபவ உண்மை.

வளர்பிறை வெள்ளிக்கிழமையும்,திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் இந்த பூஜையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.திரு ஓணம் வரும் வெள்ளியன்று நீராடி தூய உடை உடுத்தி,குலதெய்வத்தை மானசீகமாக வேண்டிட வேண்டும்.பிறகு விநாயகரை மனதார வேண்டி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பூஜை நடைபெற உதவுமாறு வேண்டி வழிபட்டு, தியானிக்கவேண்டும்.

அதன்பிறகு இஷ்ட தெய்வத்தையும் பூஜித்து வழிபட்டு காலையில் சுக்கிர ஓரையில் இந்த தனம் தரும் கஜலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும்.

நுனி வாழையிலையில் நெல்பரப்பி,அதன் மீது மற்றொரு இலை வைத்து பச்சரிசி பரப்பி அதன்மீது புதுமண்கலசம் அல்லது புதுகலசச் சொம்பு வைத்து அதில் நூல் சுற்றி அதன் உள்ளே அஷ்டகந்தம் என்னும் எட்டு விதமான வாசனைப் பொருட்கள், குண்டு மஞ்சள், வெட்டிவேர், பன்னீர், வெள்ளிக்காசு முதலியனவற்றை விட்டு அதன் வாயில் மாவிலை வைத்து புதிய நல்ல தேங்காயை வைத்து, அத்துடன்  கலசத்தில்  பொட்டு வைத்து, பூவைத்து,சிகப்புப் பட்டு ஆடை சார்த்திவைக்க வேண்டும்.

கலசத்தின் முன்பு நெய்யால் தீபம் ஏற்றிட வேண்டும்.இலையில் தாம்பூலம்,தேங்காய்,பழம்,லட்டு,பாலில் செய்த இனிப்பு வகை ஒன்று, வெண் மொச்சை,சுண்டல் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.அந்த கலசத்தில் சவுபாக்கிய லட்சுமி எழுந்தருளும்படி வேண்டிட வேண்டும்.

அதன்பிறகு சோடேசபூஜை என்னும் பதினாறுவகை உபச்சாரங்கள் செய்யவும்.(புத்தகக் கடைகளில் சோடேச பூஜை செய்யும் முறை என்ற புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளவும்)சவுபாக்கியமகாலட்சுமியிடம் நமது தரித்திரம்,பணக்கஷ்டம்,பணப் பற்றாக்குறை நீங்கிட வேண்டவேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை மனதார வேண்டியவாறு
“ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய”
என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும்,நிதானமாகவும் ஜபிக்க வேண்டும்.
அதன்பிறகு,மல்லிகை இதழ்களால் அல்லது தாமரை இதழ்களால் ஓம்ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம என்று 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.அர்ச்சித்தப்பின்பு,தூபதீப நைவேத்தியம் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்த கலசத்தைக் கலைக்காமல் அப்படியே வைத்திருந்து அடுத்தடுத்த வாரங்களில் கலசத்தில் சிறிது நீரும் வாசனைத் திரவியமும் சேர்த்து பூஜை செய்யவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வீதம் 24 வெள்ளிக்கிழமைகள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 முதல் 7 மணிக்குள் செய்துவரவேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து செய்யவிடாமல் நமது கர்ம வினைகள் தடுக்கலாம்;அதையும் மீறி பக்தி,வைராக்கியத்தால் தொடர்ந்து செய்து பெரும் செல்வ வளத்தை அடைவீர்களாக!

குருவும் சீடனும்



குருவும் சீடனும்
 
தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர் சாஸ்திரங்களின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். இறையனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற, தூய்மையான வாழ்க்கையுடன், சீடனிடம் அளவற்ற கருணையை கொண்டிருக்க வேண்டும். பணிவு, முக்தியில் தீராத ஆர்வம், புலனடக்கம், சாஸ்திரங்கள் மற்றும் குருவிடம் நம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவை சீடனுக்கு உரிய குணங்களாக இருக்க வேண்டும்.

 மந்திர தீட்சை

 தியானிப்பின் போது உச்சரிக்க மந்திரம் என்ற ஒன்று வேண்டும். மந்திரம் என்பது அதனை ஜெபம் செய்பவரை பாதுகாக்க வல்ல இறைவனின் திருநாமம். தீட்சை என்பது குரு சீடனுக்கு இந்த மந்திரத்தை அளிக்கும் முறை. இதன் மூலம் சீடனின் பாவங்கள் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. மந்திர தீட்சை  சீடனின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அவனை தியானம் செய்வதற்கு தகுதி உடையவனாக்குகிறது. தியானத்தின் முழு ஆழத்தையும் காண இறங்குபவர்கள் ஒரு குருவிடமிருந்து தீட்சை பெறும் இந்த புனிதச் சடங்கை மேற்கொள்ள வேண்டும்.

மந்திரத்தின் பகுதி.

பொதுவாக மந்திரம் என்பது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். அவை பிரணவம் என்ற ஓம், இஷ்ட தெய்வத்தை குறிக்கும் பீஜம், இஷ்ட தெய்வத்தின் பெயர், வந்தனத்தை தெரிவிக்கும் 'நம' ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சொல் தான் மந்திரம்.

 தியானம் செய்யும் முறை.

 1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
 
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.
 
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவே, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
 4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
 
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
 
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
 
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
 
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
 
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
 
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
 
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.

புதன், 21 செப்டம்பர், 2022

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி


நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

வியாழன், 8 செப்டம்பர், 2022

சிவபுராணத்தின் பெருமைகள்

*ஸ்ரீ ராம ஜெயம்*🙏

#சிவபுராணம்_என்றால்_என்ன?

அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.  
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.  
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்  
ஓம் நமச்சிவாய..:pray_tone2:

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!  
மூலமும் உரையும்...

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (சிவபுராணம்)

**********************************

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

(“நமச்சிவாய” என்னும் ஐந்து எழுத்து வாழ்க! நாத தத்துவத்தில் விளங்கும் உன் திருவடி வாழ்க!)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

(கண் இமைக்கும் பொழுதின் அளவு கூட, என் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகி உன் தாள் வாழ்க)

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

(திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை (மாணிக்கவாசகர்) ஆட்கொண்ட நாதனாகிய உன் மாணிக்க மணிகளின் மலர் அடி வாழ்க!)

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஆகமமாகிய ஞான நூலின் பொருளாக இருந்து, என்னை அணுகி (அண்ணிப்பான்) அருள் புரிபவனாகிய உன் திருவடி வாழ்க!)

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

(ஏகன்  = நீயே ஒருவனாகவும், நீயே பல உருவங்களாகவும் இருந்து எல்லாப் பொருள்களிலும் தங்கும் இறைவனான உன் திருவடி வாழ்க!)🙏🌹

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...